இந்திய மார்க்கெட்டையே மிரட்டும் கம்மி விலையில் புது Flip போன்.. உள்ள 6.9-இன்ச், வெளிய 3.1-இன்ச்.. எந்த மாடல்?
ரியல்மி இந்தியா நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆன மாதவ் ஷெத்தின் சொந்த ஸ்மார்ட்போன் பிராண்ட் ஆன ஏஐ பிளஸ் (AI Plus) நிறுவனமானது, இந்தியாவில் "ஒரே நேரத்தில்" 3 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அவைகளில் பிளிப் மாடல் தான் ஹைலைட்!
அது ஏஐ பிளஸ் நோவா பிளிப் 5ஜி (AI Plus Nova Flip 5G) ஸ்மார்ட்போனாகும். இது ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி (AI Plus Nova 2 5G) மற்றும் ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5ஜி (AI Plus Nova 2 Ultra 5G) ஆகிய ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து இன்று (ஏப்ரல் 9) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

கிளாம்ஷெல் டிசைனை கொண்டுள்ள ஏஐ பிளஸ் நோவா பிளிப் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.9-இன்ச் அமோஎல்இடி இன்னர் டிஸ்பிளே மற்றும் 3.1-இன்ச் கவர் ஸ்கிரீன், மீடியாடெக் டைமென்சிட்டி 7300எக்ஸ் சிப்செட், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ், 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா, 33W சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 4325mAh பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
ஏஐ பிளஸ் நோவா பிளிப் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில், ஏஐ பிளஸ் நோவா பிளிப் 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ரூ.29,999 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இது கிளேசியர் ஒயிட் என்கிற சிங்கிள் கலர் ஆப்ஷனின் கீழ் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் 2026 மே மாதம் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏஐ பிளஸ் நிறுவனம் சரியான தேதியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி, ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5ஜி விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில், ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பேஸிக் வேரியண்ட் ரூ.8,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.10,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ஏஐ பிளஸ் நோவா 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று, இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு, பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும். இது கருப்பு, நீலம், பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் ஊதா ஆகிய பல்வேறு வண்ணங்களில் வாங்க கிடைக்கும்.
மறுபுறம் உள்ள ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5ஜி-ன் பேஸிக் 6ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.16,999க்கும், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.18,999க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏஐ பிளஸ் நோவா 2 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஏப்ரல் 17 அன்று, இந்திய நேரப்படி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட்டில் கருப்பு, நீலம், பச்சை, ஊதா மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வரும்.
ஏஐ பிளஸ் நோவா பிளிப் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.9-இன்ச் AMOLED இன்னர் டிஸ்பிளே
- 2790 x 1188 பிக்சல்கள் ரெசல்யூஷன்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 443ppi பிக்சல் டென்சிட்டி
- 1200 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் மோட் ஆதரவு
- 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட்
- 10-பிட் கலர் டெப்த்
- 2160Hz PWM டிம்மிங்
- 3.1-இன்ச் AMOLED கவர் டிஸ்பிளே
- மீடியாடெக் டைமென்சிட்டி 7300 சிப்செட்
- 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி uMCP 2.2 ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான NxtQ ஓஎஸ்
- 10x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கும் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- போர்ட்ரெய்ட் ஷாட்களுக்காக 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- இது ஹோவர் மோடில் அல்லது பகுதியளவு மடிக்கப்பட்ட நிலையில் பயன்படுத்தும்போது கூட தெளிவான படங்களை எடுக்கும் என்று கூறப்படுகிறது
- 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 33W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 4,325mAh பேட்டரி
- PD3.0 மற்றும் PPS ஸ்டாண்டர்ட் ஆதரவு
- டூயல் 5ஜி சிம் ஆதரவு
- ப்ளூடூத், என்எப்சி, ஓடிஜி, எல்1 மற்றும் எல்5 பேண்டுகளுடன் கூடிய ஜிபிஎஸ்
- ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- அளவீட்டில் "மடிக்கப்பட்ட நிலையில்" 7.2 மிமீ தடிமன்
- எடையில் 193 கிராம்


Click it and Unblock the Notifications








