Home
Apps

புதிய 15 நிமிட லிமிட் ரூல்ஸ்.. Instagram ஆப்பிற்கு வந்த முக்கிய மாற்றம்!

உலகளவில் மிகவும் பிரபலமான சோஷியல் மீடியா (Social Media) தளமாக பார்க்கப்படும், பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் ஒரு "புதிய 15 நிமிட ரூல்ஸ்" அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அது என்ன ரூல்ஸ்? 15 நிமிடத்திற்குள் என்ன செய்ய வேண்டும்? இதோ விவரங்கள்:

இன்ஸ்டாகிராம் நிறுவனமானது பயனர்கள் தாங்கள் பதிவு செய்யும் கமெண்ட்களை எடிட் செய்ய அனுமதிக்கும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. நேற்று (ஏப்.10) அறிவிக்கப்பட்ட இந்த புதிய அம்சம், இன்ஸ்டாகிராம் ஆப்பில்மிக நீண்ட காலமாக இருந்து வந்த ஒரு "வரம்பை", அதாவது ஒரு லிமிட்டேஷன் (Limitation) நிவர்த்தி செய்கிறது.

புதிய 15 நிமிட ரூல்ஸ்.. Instagram ஆப்பிற்கு வந்த முக்கிய மாற்றம்!

மெட்டா (Meta) நிறுவனத்திற்கு சொந்தமான இந்த தளம், இந்த "எடிட்" அம்சம் உலகளவில் வெளியிடப்படுவதாக கூறியுள்ளது. இது பயனர்கள் தங்கள் கமெண்ட்களை பதிவிட்ட சிறிது நேரத்திலேயே மாற்றங்களை செய்ய அனுமதிக்கிறது, இதன் மூலம் எழுத்து பிழைகளைச் சரிசெய்வது அல்லது பதில்களை செம்மைப்படுத்துவது எளிதாகிறது. இன்ஸ்டாகிராம் சில காலமாக போஸ்ட்களை எடிட் செய்யும் வசதியை ஆதரித்தாலும், கமெண்ட்களை திருத்த முடியாத நிலை இருந்தது, இப்போது அது மாறியுள்ளது!

15 நிமிட ரூல்ஸ்: இந்த புதிய அப்டேட்டின் மூலம், பயனர்கள் இப்போது தங்கள் கமெண்ட்களை பதிவிட்ட 15 நிமிடங்களுக்குள் திருத்த முடியும் என்று இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. இருப்பினும், அந்த 15 நிமிடங்களுக்குள் ஒருவர் செய்யக்கூடிய திருத்தங்களின் எண்ணிக்கைக்கு எந்த வரம்பும் விதிக்கபடவில்லை, அதாவது பயனர்கள் தேவைக்கேற்ப பல திருத்தங்கள் அல்லது மாற்றங்களை செய்யலாம்.

ஒரு கமெண்ட்டை எடிட் செய்ய, அவர்கள் பதிவிட்ட கமெண்ட்டின் கீழே தோன்றும், புதிதாக சேர்க்கப்பட்ட 'எடிட்' (Edit) விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம், தேவையான மாற்றங்களை செய்ய முடியும் என்றும் இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. அதை தேர்ந்தெடுத்தவுடன், ஒரு புதிய பாப்-அப் தோன்றும், அது புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை சேமிப்பதற்கு முன்பு கமெண்ட் டெக்ஸ்ட்-ஐ மாற்றியமைக்க அனுமதிக்கிறது.

இருப்பினும் இதற்கு சில வரம்புகள் உள்ளன. இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் படி, ஒரு கமெண்ட்டின் டெக்ஸ்ட் பகுதியை மட்டுமே எடிட் செய்ய முடியும். அதாவது, ஒரு கமெண்ட்டில் டெக்ஸ்ட் மற்றும் இமேஜ் ஆகிய இரண்டும் இருந்தால், பயனர்கள் எழுதப்பட்ட கண்டென்ட்டை மட்டுமே மாற்றியமைக்க முடியும், படத்தை மாற்ற முடியாது.

மேலும், திருத்தப்பட்ட கமெண்ட்டில் - மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை குறிக்கும் வகையில், சாம்பல் நிறத்தில் "எடிடட்" (Edited) என்கிற லேபிள் காட்டப்படும். இருப்பினும், இன்ஸ்டாகிராம் வெர்ஷன் ஹிஸ்டரியை வழங்குவதில்லை. அதாவது ஒருமுறை திருத்தப்பட்டால், மற்ற பயனர்களால் ஒரிஜினல் கமெண்ட்டை பார்க்க முடியாது.

இன்ஸ்டாகிராமுக்கு இந்த அம்சம் வருவதற்கு நீண்ட காலம் ஆகி விட்டது என்பதே கசப்பான உண்மை. இன்ஸ்டாகிராம் 2014 ஆம் ஆண்டிலேயே போஸ்ட்களுக்கான எடிட்டபிள் கேப்ஷன்களை அறிமுகப்படுத்தியது, ஆனால் கமெண்ட்களை எடிட் செய்யும் வசதி ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இல்லாமல் இருந்தது. இதற்கு மாறாக, எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) 2022 இல் எடிட் செய்யக்கூடிய போஸ்ட்கள் மற்றும் கமெண்ட்களை சோதிக்க தொடங்கியது, ஆனால் இந்த அம்சங்களின் கிடைக்கும் தன்மை - சந்தா செலுத்தும் விருப்பங்களை பொறுத்து மாறுபடுவதாக உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Instagram Introduced Edit Comment Option Globally But Users Get 15 Minutes Time Limit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X