Airtel போட்ட போடு.. இனி ரூ.548 போதும்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 7 ஜிபி டேட்டா!
ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் சிம் கார்டை வைத்திருக்கும் கஸ்டமர்கள் 84 நாட்களுக்கு டேட்டாவுடன் மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டால், இப்போது பார்க்க இருக்கும் திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதில் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும்.
84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் லம்ப்-சம் டேட்டாவுடன் கிடைக்கும் திட்டமாக ஏர்டெல் ரூ.548 திட்டம் இருக்கிறது. ஆகவே, 7 ஜிபி டேட்டாவை மட்டுமே இதில் பெற்று கொள்ள முடியும். அதேபோல 900 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படும். இந்த லம்ப்-சம் சலுகைகள் கிடைப்பதாலேயே மலிவான விலைக்கு இந்த திட்டம் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.548 திட்ட விவரங்கள் (Airtel Rs 548 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்கள் முழுவதும் 7 ஜிபி டேட்டா மட்டுமே கொடுக்கப்படும். இந்த 7 ஜிபிக்கு பிறகு போஸ்ட் டேட்டா கிடையாது. ஆகவே, டேட்டா வவுச்சர்களுக்கு செல்ல வேண்டி இருக்கும்.
எஸ்எம்எஸ்களும் லம்ப்-சம் சலுகையில் கிடைப்பதால், வேலிடிட்டி முழுவதுக்கும் மொத்தமாக 900 எஸ்எம்எஸ்கள் மட்டுமே கிடைக்கும். இந்த எஸ்எம்எஸ்கள் முடிந்த பிறகு கட்டணம் செலுத்தி அனுப்பி கொள்ளலாம் அல்லது தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) கொடுக்கிறது.
ஆகவே, லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ள முடியும். இந்த விலைக்கு 84 நாட்கள் வேலிடிட்டியுடன் இந்த சலுகைகள் லாபகரமாகவே இருக்கிறது. இருப்பினும், கூடுதல் சலுகைகளையும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது. இப்படி 4 சலுகைகள் கிடைக்கின்றன.
ஆகவே, அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தாவை இந்த திட்டம் கொடுத்து உள்ளது. இந்த சந்தாவை 12 மாதங்களுக்கு பெற்று கொள்ள முடியும். சொல்லப்போனால், இந்த சந்தாவை தனியாக பெற்றால், ரூ.4,000 செலவு செய்ய வேண்டும். ஆனால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் முற்றிலும் இலவமாக கொடுக்கப்பட்டு உள்ளது.
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தாவின் ப்ரீ வெர்ஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, இலவமாக கிடைக்கும் ஓடிடி கன்டென்ட்களை இதில் பார்த்து கொள்ளலாம். வழக்கமாக கிடைக்கும் ப்ரீ ஹெலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. இதை 30 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே மாற்றி கொள்ள முடியும்.
ஸ்பேம் அலெர்ட் சலுகையை இந்த திட்டம் கொடுத்து உள்ளது. ஆகவே, இன்கம்மிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களில் இருக்கும் ஸ்பேம்களை டிடெக்ட் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த சலுகைகளை 84 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சலுகை மட்டும் 12 மாதங்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.
இதைவிட மலிவான விலைக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் வேண்டுமானால், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை மட்டுமே கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதில் டேட்டா சலுகை கிடைக்காது. இருப்பினும், ஒரு சில கூடுதல் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இது ஏர்டெல் வாய்ஸ் ஒன்லி திட்டமாகவும் இருக்கிறது.
ஏர்டெல் ரூ.469 திட்ட விவரங்கள் (Airtel Rs 469 Plan Details): இந்த திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம், ஸ்பேம் அலெர்ட் சலுகை மற்றும் ப்ரீ ஹெலோ டியூன்ஸ் சலுகையையும் கொடுத்து உள்ளது. வேறு சலுகைகள் கிடையாது.


Click it and Unblock the Notifications








