பொசுக்குன்னு விலை குறைந்த OnePlus-ன் முதல் மினி போன்.. 2வது Mini போன் Coming Soon!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் 2வது மினி ஸ்மார்ட்போன் (Mini Smartphone), அதாங்க அடுத்த காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் (Compact Flagship Smartphone) அறிமுகம் குறித்த தகவல் வெளியான வேகத்தில், அமேசான் இந்தியா வலைத்தளமானது முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸின் மினி ஸ்மார்ட்போனின் விலையை "பொசுக்கென்று" குறைத்துள்ளது.
வரப்போவது ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) மாடலாகும், விலை குறைப்பை பெற்றுள்ளது - ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) மாடலாகும். டிப்ஸ்டர் தேபயன் ராய் வழியாக கிடைத்துள்ள விவரங்களின்படி, ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போன் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் (Q2) இறுதியில் அல்லது மூன்றாம் காலாண்டின் (Q3) தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இது 2026 இது மே மாதம் அல்லது ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

இந்த தகவல் வெளியான வேகத்தில், இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் மாடலின் விலை குறைந்துள்ளது. நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் அறிமுகமான சமயத்தில் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.54,999 க்கு வாங்க கிடைத்தது. தற்போது இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ரூ.2000 நேரடி விலை குறைப்பை பெற்று ரூ.52,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 2,160Hz PWM டிம்மிங் ரேட்
- Aqua Touch 2.0 தொழில்நுட்பம்
- க்ளோவ் மோட் (இது பயனர்கள் ஈரமான அல்லது கையுறை அணிந்த கைகளால் ஸ்மார்ட்போனை இயக்க உதவும்)
- 12ஜிபி LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 ஓஎஸ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)
- 5850mAh பேட்டரி
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, NavIC உடன் கூடிய GPS, NFC மற்றும் USB Type-C போர்ட்
- அளவீட்டில் 150.8×71.7×8.2மிமீ
- எடையில் 185 கிராம்
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் கவனிக்க வேண்டிய கஸ்டமைஸ் செய்யக்கூடிய பிளஸ் கீ: இதை லாங் பிரஸ் செய்வதன் மூலம் ரிங், வைப்ரேட் மற்றும் சைலன்ட் மோட்களுக்கு இடையில் மாறலாம். கேமராவை திறப்பது, ஸ்க்ரீனில் உள்ள டெக்ஸ்ட்-ஐ மொழிபெயர்ப்பது அல்லது ஃப்ளாஷ்லைட்டை இயக்குவது போன்ற குவிக் அக்சஸ்-களுக்கும் இந்த கீயை கஸ்டமைஸ் செய்யலாம். மேலும் இதை கொண்டு ஏஐ பிளஸ் மைண்ட் ஸ்பேஸையும் தொடங்க முடியும்.
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனில் உள்ள மைண்ட் ஸ்பேஸை பயன்படுத்தி கட்டுரைகள், புகைப்படங்கள், சாட்கள் மற்றும் அட்டவணைகள் போன்ற தகவல்களை ஒரே இடத்தில் சேமித்து, அவற்றை எளிதாக நேவிகேட் செய்யலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஏஐ டீட்டெயில் பூஸ்ட், ஏஐ அன்பிளர், ஏஐ அசிஸ்டென்ட், ஏஐ ரெஃப்ளெக்ஷன் ஏரேசர், ஏஐ ரீபிரேம் மற்றும் பல ஏஐ-ஆதரவு இமேஜிங் டூல்களும் உள்ளன. கூடவே ஏஐ டிரான்ஸ்லேஷன், ஏஐ வாய்ஸ்ஸ்க்ரைப், ஏஐ கால் அசிஸ்டென்ட், ஏஐ சேர்ச் அத்துடன் கூகுளின் சர்க்கிள்டூ சேர்ச் மற்றும் ஜெமினி போன்ற ஏஐ அம்சங்களுக்கான ஆதரவும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








