OPPO-வின் புது மினி டேப்லெட்.. 5.3மிமீ ஸ்லிம் டிசைனில் 8.8-இன்ச் குட்டி டிஸ்பிளே, 8000mAh பேட்டரி, 12GB ரேம்!
ஒப்போ (OPPO) நிறுவனம் அதன் புதிய மினி டேப்லெட் மாடல் ஆன ஒப்போ பேட் மினி (Oppo Pad Mini) மாடலை வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால் குறிப்பிட்ட தேதியில் அறிமுகமாகும் ஒரே ஒரு ஒப்போ தயாரிப்பு அதுவாக இருக்காது என்பது போல் தெரிகிறது.
ஒரே நாளில் 6 தயாரிப்புகள் அறிமுகம்: சமீபத்தில் தான், ஒப்போ நிறுவனம் - ஒரு அதிகாரப்பூர்வ வீடியோ மூலம் இந்த டேப்லெட்டின் அறிமுகத்தை உறுதிப்படுத்தி இருந்தது. அந்த வீடியோவின் வழியாக ஒப்போ பேட் மினி மாடல் ஆனது சீரான பெசல்கள் மற்றும் டிஸ்பிளேவின் மேல் மையத்தில் அமைந்துள்ள செல்பீ கேமரா உடன் கூடிய ஸ்லிம் டிசைன் ஆகியவைகள் வெளிப்படுத்தப்பட்டு இருந்தது.

ஒப்போ பேட் மினி உடன் மிகவும் சக்திவாய்ந்த ஒப்போ பேட் 5 ப்ரோவையும் ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. இந்த டேப்லெட்டுகள், ஓப்போ பைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா மற்றும் பைண்ட் எக்ஸ்9எஸ் ப்ரோ ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுட சீனாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
.
மேலும் அதே நாளில் ஓப்போ வாட்ச் எக்ஸ்3 மினி மற்றும் ஓப்போ என்கோ கிளிப் 2 ஆகிய தயாரிப்புகளும் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த வெளியீட்டு நிகழ்வின் ஹைலைட் ஆக பார்க்கப்படும் ஒப்போ பேட் மினி டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள் கீக்பெஞ்ச் வழியாக லீக் ஆகியுள்ளன.
ஒப்போ பேட் மினி டேப்லெட் அம்சங்கள்: OPD2515 என்கிற மாடல் நமபரை கொண்ட ஒரு ஓப்போ டிவைஸ், கீக்பெஞ்சில் தோன்றியுள்ளது. இது ஒப்போ பேட் மினியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட பெஞ்ச்மார்க் பட்டியலின்படி, இந்த டேப்லெட் 3.32GHz பேஸிக் ப்ரெக்வன்சி கொண்ட ஆக்டா-கோர் சிப்பில் இயங்குவதாக தெரிகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட்டாக இருக்கலாம்.
குறிப்பிட்ட சிப்செட் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டிற்கு சற்று கீழே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2,762 (சிங்கிள் கோர் டெஸ்ட்) மற்றும் 9,037 (மல்டி கோர் டெஸ்ட்) மதிப்பெண்களுடன் காணப்படுகிறது. எலைட் வேரியண்ட்டுடன் ஒப்பிடும்போது இது சற்று குறைவான சிங்கிள்-கோர் செயல்திறனை கொண்டிருப்பதாகவும், அதே சமயம் மல்டி கோர் முடிவுகள் கிட்டத்தட்ட சமமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஒப்போ பேட் மினியின் கீக்பெஞ்ச் லிஸ்டிங் ஆனது, இந்த டேப்லெட் 12ஜிபி ரேம்-ஐ ஆதரிக்கும் என்றும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான யூஸர் இன்டர்பேஸில் இயங்கும் என்றும் தெரிவிக்கிறது. முந்தைய லீக்ஸ்களின் படி, ஒப்போ பேட் மினியில் 8.8-இன்ச் LTPO OLED டிஸ்பிளே இடம்பெறும், இது 144Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3:2 ஆஸ்பெக்ட் ரேஷியோவை ஆதரிக்கும்.
முன்னரே குறிப்பிட்டபடி, இது ஸ்லிம் ஆன பெசல்களையும், குறுகிய விளிம்பில் செல்பீ கேமராவையும் கொண்டிருக்கலாம். ஒப்போ பேட் மினி டேப்லெட் ஆனது சுமார் 8,000mAh திறன் கொண்ட பேட்டரியை பேக் செய்யலாம். இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் வரவும் வாய்ப்புள்ளது. கடைசியாக இது அளவீட்டில் இந்த டேப்லெட் 5.39 மிமீ தடிமனும், சுமார் 279 கிராம் எடையும் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








