இவ்ளோ வேகம் எதுக்கு பாஸ்! இந்த 78 நகரங்களில் இருப்பவரா நீங்கள்? இதை மட்டும் பண்ணுங்க!

|

ஜியோ மற்றும் ஏர்டெல் கடந்த ஆண்டு தங்கள் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியது. அறிமுகமான நாளில் இருந்து 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள் வேகமாக விரிவடைந்து வருகிறது. அதன்படி 78 இந்திய நகரங்களில் Jio 5G சேவை தொடங்கப்பட்டுள்ளது. 5ஜி கிடைக்கும் பகுதிகள் குறித்தும், 5ஜி சேவையை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பது குறித்தும் பார்க்கலாம்.

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி

ரிலையன்ஸ் ஜியோ 5ஜி

2023 ஆம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவை கிடைக்கும் என ஜியோ மற்றும் ஏர்டெல் உறுதி அளித்துள்ளது. இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் தங்கள் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளை வேகமாக விரிவுப்படுத்தி வருகிறது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ நிறுவனம் இதுவரை 78 இந்திய நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகள் குறித்து பார்க்கலாம்.

ஜியோ 5ஜி நகரங்கள்

ஜியோ 5ஜி நகரங்கள்

அக்டோபர் 4 2022: டெல்லி, மும்பை, வாரணாசி, கொல்கத்தா

அக்டோபர் 22 2022: நத்தவாரா, சென்னை

நவம்பர் 10 2022: பெங்களூரு, ஹைதராபாத்

நவம்பர் 11 2022: குருகிராம், நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத்

நவம்பர் 23 2022: புனே

நவம்பர் 25 2022: குஜராத்தின் 33-மாவட்டங்கள்

டிசம்பர் 14 2022: உஜ்ஜயினி கோவில்கள்

டிசம்பர் 20 2022: கொச்சி, குருவாயூர் கோவில்

டிசம்பர் 26 2022: திருமலை, விஜயவாடா, விசாகப்பட்டினம், குண்டூர்

டிசம்பர் 28 2022: லக்னோ, திருவனந்தபுரம், மைசூர், நாசிக், அவுரங்காபாத், சண்டிகர், மொஹாலி, பஞ்ச்குலா, ஜிராக்பூர், கரார், டெராபஸ்ஸி

டிசம்பர் 29 2022: போபால், இந்தூர்

ஜனவரி 5 2023: புவனேஷ்வர், கட்டாக்

ஜனவரி 6 2023: ஜபல்பூர், குவாலியர், லூதியானா, சிலிகுரி

ஜனவரி 7 2023: ஜெய்ப்பூர், ஜோத்பூர் மற்றும் உதய்பூர்

5ஜி ஸ்மார்ட்போன்களில் மட்டுமே 5ஜி

5ஜி ஸ்மார்ட்போன்களில் மட்டுமே 5ஜி

5ஜி ஸ்மார்ட்போன்களில் மட்டுமே 5ஜி சேவையை பயன்படுத்த முடியும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. பெரும்பாலான 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஜியோ 5ஜி சேவைக்கான அப்டேட் வழங்கத் தொடங்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் நீங்கள் வசிப்பவராக இருந்தால் இப்போதே 5ஜி சேவையை பயன்படுத்தத் தொடங்கலாம்.

ஜியோ மற்றும் ஏர்டெல்

ஜியோ மற்றும் ஏர்டெல்

தொலைத்தொடர்பு துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி சேவையை இலவசமாக தங்களது பயனர்களுக்கு வழங்கி வருகின்றன. பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா (விஐ) இந்தியாவில் இன்னும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவில்லை.

5ஜி கிடைக்கும் பகுதி

5ஜி கிடைக்கும் பகுதி

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்களின் 5ஜி இணைப்பை இந்தியா முழுவதும் வேகமாக பரப்பி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டதில் இருந்து இரண்டு நிறுவனங்களும் முணைப்போடு செயல்பட்டு வேகமாக 5ஜி சேவையை விரிவுப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளை நிறுவனங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஜியோ ட்ரூ 5ஜி

ஜியோ ட்ரூ 5ஜி

ஜியோ நிறுவனம் 5ஜி சேவையை ஜியோ ட்ரூ 5ஜி என அழைக்கப்படுகிறது. ஜியோ ட்ரூ 5ஜி சேவையை நிறுவனம் இலவசமாக வழங்கி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களின் தலைநகரங்களில் ஜியோ 5ஜி சேவைக் கிடைக்கத் தொடங்கிவிட்டது. ஏறத்தாழ ஜியோ 5ஜி சேவை இந்தியாவின் 78 நகரங்களுக்கு மேல் கிடைக்கத் தொடங்கிவிட்டது. இந்த பகுதியில் உள்ளவர்கள் ஜியோ ட்ரூ 5ஜி சேவையை இலவசமாகவே பயன்படுத்தலாம்.

இலவசமாக ஜியோ 5ஜி

இலவசமாக ஜியோ 5ஜி

ஜியோ 5ஜி சேவையை பயனர்கள் இலவசமாகவே அனுபவிக்கலாம். இதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் இருக்கிறது. அது ஜியோ பயனர்கள் 5ஜி சேவையை பயன்படுத்த 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களில் இருக்க வேண்டும் என்பது தான். தற்போது பயன்படுத்தும் 4ஜி சிம் மூலமாகவே 5ஜி சேவையை பயனர்கள் பயன்படுத்தலாம். கூடுதலாக ரீசார்ஜ் செய்யக் கூட தேவையில்லை, 5ஜி ஸ்மார்ட்போனும் 5ஜி கிடைக்கும் பகுதியிலும் மட்டும் இருந்தால் போதும்.

5ஜி ஸ்மார்ட்போனுக்கான அப்டேட்

5ஜி ஸ்மார்ட்போனுக்கான அப்டேட்

மற்றொரு நிபந்தனையும் இருக்கிறது. ஜியோ 4ஜி சிம் மூலமாகவே ஜியோ ட்ரூ 5ஜி சேவையை பயன்படுத்தலாம். ஆனால் ரூ.239க்கு மேல் உள்ள திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது மிகவும் கட்டாயமாகும். இதேபோல் குறிப்பிட்ட 5ஜி பேண்ட்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களில் மட்டுமே 5ஜி சேவை கிடைக்கும் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று.

ஆனால் விரைவில் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் 5ஜி சேவைக் கிடைக்கத் தொடங்கும். காரணம் இதற்கான அப்டேட்டை ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அந்தந்த ஸ்மார்ட்போன்களுக்கு வெளியிடத் தொடங்கிவிட்டன.

Best Mobiles in India

English summary
Reliance Jio 5G Available Cities Expanded in 78 Cities: How to Activate Jio True 5G in Your Smartphone?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X