Airtel புது ஆபர்.. இந்த 7 பிளானில் 1-ஐ ரீசார்ஜ் செஞ்சா நீங்க ராஜா.. PAN இந்தியா அன்லிமிடெட் 4G, 5G அறிவிப்பு!
இந்திய தொலைத்தொடர்பு சந்தையின் இரண்டாவது பெரிய டெலிகாம் ஆபரேட்டர் ஆன பார்தி ஏர்டெல் (Bharti Airtel), பான் இந்தியா அடிப்படையில் அதன் போஸ்ட்பெய்டு திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி மற்றும் 4ஜி டேட்டா (Unlimited 5G and 4G Data) நன்மையை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் கீழ் - அன்லிமிடெட் டேட்டா திட்டத்தில் (Unlimited Data Plans) ஏற்கனவே உள்ள அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் பொருந்தும், போஸ்ட்பெய்டு பயனர்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அன்லிமிடெட் 4ஜி டேட்டா (Unlimited 4G Data) விருப்பமும் அடங்கும்.

முன்னதாக, ஏர்டெல் சுமார் 10 வட்டங்களில் மட்டுமே இந்த அன்லிமிடெட் டேட்டா (4ஜி மற்றும் 5ஜி) சலுகையை அறிமுகப்படுத்தி இருந்த்து. இப்போது (டெலிகாம்டால்க்கின் சமீபத்திய அறிக்கையின்படி) இந்த சலுகை பான் இந்தியா முழுவதும் தொடங்கப்பட்டதாக தெரிகிறது. ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், மாற்றங்கள் அதிகாரப்பூர்வ தளங்களில் நேரலையில் உள்ளன.
இந்த திருத்தம் - ஏர்டெல் போஸ்ட்பெய்டு திட்டங்கள் ஆனது இப்போது திறந்த சந்தையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, அனைத்து திட்டங்களிலும் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குவதை குறிக்கிறது. ஏர்டெல்லின் கூற்றுப்படி, இந்த அன்லிமிடெட் நன்மை ஆனது பேரன்ட் மற்றும் ஆட்-ஆன் இணைப்புகள் (Parent and add-on connections) ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்.
இருப்பினும், பில்லிங் சுழற்சியில் 300ஜிபி டேட்டாவிற்கு மேல் உள்ள டேட்டா பயன்பாடு ஆனது வணிக பயன்பாடாக கருதப்படும் என்றும் ஏர்டெல் தெளிவுபடுத்தி உள்ளது. இந்த FUP என்கிற நியாயமான பயன்பாட்டு வரம்புக்கு உட்பட்டு, சந்தாதாரர்கள் 4ஜி மற்றும் 5ஜி நெட்வொர்க்குகளில் அன்லிமிடெட் டேட்டாவை அணுகுவதை உறுதிப்படுத்துகிறது. இப்படியாக ஏர்டெல்லின் இந்த அன்லிமிடெட் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா சலுகையானது இப்போது மொத்தம் 7 திட்டங்களில் கிடைக்கிறது:
1. ஏர்டெல் தனிநபர் திட்டம் (Airtel Individual Plan) - மாதத்திற்கு ரூ.449
2. ஏர்டெல் தனிநபர் திட்டம் (Airtel Individual Plan) - மாதத்திற்கு ரூ.549
3. 2 நபர்களுக்கான ஏர்டெல் குடும்ப திட்டம் (Airtel Family Plan for 2 Members) - மாதத்திற்கு ரூ.699
4. 3 நபர்களுக்கான ஏர்டெல் குடும்ப திட்டம் (Airtel Family Plan for 3 Members) - மாதத்திற்கு ரூ.999
5. 4 நபர்களுக்கான ஏர்டெல் குடும்ப திட்டம் (Airtel Family Plan for 4 Members) - மாதத்திற்கு ரூ.1199
6. நெட்ஃபிளிக்ஸ் சந்தா உடனான 4 நபர்களுக்கான ஏர்டெல் குடும்ப திட்டம் (Airtel Family Plan for 4 Members With Netflix) - மாதத்திற்கு ரூ.1399
7. 5 நபர்களுக்கான ஏர்டெல் குடும்ப திட்டம் (Airtel Family Plan for 5 Members) - மாதத்திற்கு ரூ.1749
ஆட்-ஆன் கனெக்ஷன் விவரங்கள்: வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 9 ஆட்-ஆன் இணைப்புகளையும் சேர்க்கலாம் (திட்டக் கட்டமைப்பின் படி இலவசம் மற்றும் கட்டணமும் உட்பட). கட்டண ஆட்-ஆன் இணைப்புகளுக்கு ஒரு இணைப்புக்கு ரூ.349 வசூலிக்கப்படும், மேலும் டேட்டா-ஒன்லி ஆட்-ஆன் ரூ.149 க்கு கிடைக்கிறது (இந்த டேட்டா-மட்டும் ஆட்-ஆன் திட்டம் பேரன்ட் டேட்டா ஒதுக்கீட்டிலிருந்து டேட்டாவை பயன்படுத்தும்).
VERDICT: ஏர்டெல் நிறுவனத்தின் இந்த திருத்தத்தின் மூலம், ஏர்டெல் அதன் அனைத்து இன்ஃபினிட்டி போஸ்ட்பெய்டு திட்டங்களுமே வரம்பற்ற டேட்டா சலுகைகளாக நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. வணிக பயன்பாட்டிற்காக (Commercial usage) குறிக்கப்படாத பட்சத்தில், வாடிக்கையாளர்கள் 4ஜி/5ஜி நெட்வொர்க்கில் வரம்பற்ற கட்டமைப்பின் கீழ் டேட்டாவை பயன்படுத்துவதை தொடரலாம்.
மேலும் இந்த அன்லிமிடெட் நன்மை ஆனது பேரன்ட் மற்றும் ஆட்-ஆன் இணைப்புகள் இரண்டிற்கும் பொருந்துகிறது. இது குடும்பங்கள் மற்றும் பல எண்ணிக்கையிலான சிம் கார்டுகளை கொண்ட பயனர்களுக்கு பெரிய அளவிலான நன்மைகள் மற்றும் சேமிப்புகளை கொடுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அன்லிமிடெட் 4ஜி மற்றும் 5ஜி இப்போது அதன் போஸ்ட்பெய்டு போர்ட்ஃபோலியோ முழுவதும் பான் இந்தியா அடிப்படையில் கிடைக்கப்பெறுவதால், ஏர்டெல் அதன் பயனர்களுக்கு அதிக மதிப்புள்ள, தொகுக்கப்பட்ட டிஜிட்டல் அனுபவங்களை தெளிவாக இரட்டிப்பாக்குகிறது!


Click it and Unblock the Notifications








