Home
Gadgets

சும்மா கிழி.. பட்ஜெட் விலையில் ANC, ENC, 135 மணிநேர பேட்டரி.. Nothing Headphone (a) அறிமுகம்!

நத்திங் (Nothing) நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் ஆன நத்திங் போன் 4ஏ சீரீஸ் உடன் சேர்த்து நத்திங் ஹெட்ஃபோன் (ஏ) மாடலையும் உலகளவில் அறிமுகம் செய்துள்ளது. ஓவர்-இயர் டிசைன் வரும் இந்த மாடல் முன்னதாக அறிமுகமான நத்திங் ஹெட்ஃபோன் 1 மாடலுக்கான "மலிவு விலை மாற்றாக" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

நத்திங் ஹெட்ஃபோன் ஏ விலை: இங்கிலாந்தில் இது GBP 149 (தோராயமாக ரூ.18,200) க்கும், அமெரிக்காவில் $199 (தோராயமாக ரூ.18,200) க்கும் மற்றும் ஐரோப்பாவில் EUR 159 (தோராயமாக ரூ.17,000) க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளாக், ஒயிட் மற்றும் பிங்க் கலர் ஆப்ஷன்களின் ஓப்பன் சேல் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கும், அதே நேரத்தில் லிமிடெட் யெல்லோ கலர் ஆப்ஷனின் விற்பனை ஏப்ரல் 6 முதல் தொடங்கும். இந்திய விலை, விற்பனை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ANC, ENC, 135 மணிநேர பேட்டரி.. Nothing Headphone (a) அறிமுகம்!

நத்திங் ஹெட்ஃபோன் ஏ முக்கிய அம்சங்கள்:
- 310 கிராம் லைட் வெயிட் டிசைன்
- நீட்டிக்கப்பட்ட வசதிக்காக ப்ரீத்தபிள் மெமரி ஃபோம் இயர் குஷன்ஸ்
- அடாப்டிவ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC)
- பின்னணி இரைச்சலை குறைக்க வடிவமைக்கப்பட்ட த்ரீ மைக்ரோஃபோன் இஎன்சி (ENC)
- ஸ்டாட்டிக் ஸ்பாஷியல் ஆடியோ

- ரோலர், பேடில் மற்றும் பட்டன் கண்ட்ரோல்ஸ்
- பட்டன் சேனல் ஹாப் ஆதரவு (ஆப்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு இடையில் விரைவாக மாற முடியும்)
- நத்திங் எக்ஸ் ஆப் உடனான இணக்கத்தன்மை
- ஒரு முறை சார்ஜ் செய்தால் ஐந்து நாட்களுக்கு இணையான 135 மணிநேர பிளேபேக்
- பாஸ்ட் சார்ஜ் ஆதரவு
- ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஐந்து மணிநேர பிளேபேக்
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP52 ரேட்டிங்

நத்திங் போன் 4ஏ சீரீஸ் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் நத்திங் போன் 4ஏ (Nothing Phone 4a) ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கும், 8GB ரேம் மற்றும் 256GB ஆப்ஷன் ரூ.34,999 க்கும் மற்றும் ஹைஎண்ட் 12GB ரேம் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.37,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் ரூ.1,000 வங்கிச் சலுகையையும் கூடுதலாக ரூ.6,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும் தேர்வு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக உள்ள நத்திங் போன் 4ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் மற்றும் 128GB ஆப்ஷன் ரூ.39,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ப்ரோ மாடலின் 8GB ரேம் மற்றும் 256GB ஆப்ஷன் ரூ.42,999 க்கும், ஹை-எண்ட் ஆப்ஷன் ரூ.45,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே இந்தியாவில் முறையே மார்ச் 13 மற்றும் மார்ச் 27 ஆகிய தேதிகளில் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. நத்திங் போன் 4ஏ மாடலானது பிளாக், ப்ளூ, பிங்க், ஒயிட் கலர்களிலும், ப்ரோ மாடலானது பிளாக், பிங்க், சில்வர் கலர்களிலும் வாங்க கிடைக்கும்.

ப்ரோ மாடலின் 8GB ரேம் மற்றும் 256GB ஆப்ஷன் ரூ.42,999 க்கும், ஹை-எண்ட் ஆப்ஷன் ரூ.45,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே இந்தியாவில் முறையே மார்ச் 13 மற்றும் மார்ச் 27 ஆகிய தேதிகளில் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. நத்திங் போன் 4ஏ மாடலானது பிளாக், ப்ளூ, பிங்க், ஒயிட் கலர்களிலும், ப்ரோ மாடலானது பிளாக், பிங்க், சில்வர் கலர்களிலும் வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Nothing Headphone a Launched ANC ENC 135 Hours Battery in Global Markets Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X