Home
Mobile

ஆரம்பமே ரூ.6000 ஆபர்.. Google-ன் லேட்டஸ்ட் Pixel போன்.. நம்பி வாங்க 5 காரணங்கள், தவிர்க்க 4 காரணங்கள்!

கூகுள் (Google) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 10ஏ (Pixel 10a) மாடலின் இந்திய விற்பனை தொடங்கியுள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? என்னென்ன அறிமுக சலுகைகள்? நம்பி வாங்கலாமா? வேண்டாமா? வேறு என்னென்ன ஆல்ட்டர்நேட்டிவ் ஸ்மார்ட்போன்களை கருத்தில் கொள்ளலாம்? இதோ பதில்கள்:

இந்தியாவில் கூகுள் பிக்சல் 10ஏ விலை மற்றும் சலுகைகள்: இந்த ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.49,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாங்கும் போது HDFC வங்கி கிரெடிட் கார்டுடன் ரூ.3,000 வரை உடனடி கேஷ்பேக்கும், கூடுதலாக ரூ.3,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Google-ன் லேட்டஸ்ட் Pixel போன்.. நம்பி வாங்க 5 காரணங்கள், தவிர்க்க?

மேலும் 24 மாதங்கள் வரை வட்டி இல்லாத EMI விருப்பங்களும் கூகுள் பிக்சல் 10ஏ ஸ்மார்ட்போனின் மீது கிடைக்கிறது. கூகுளின் புதிய ஸ்மார்ட்போன் தற்போது பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் கூகுள் இந்தியா (Google India) ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனை செய்யப்படுகிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இதை பெர்ரி, ஃபாக், லாவெண்டர் மற்றும் அப்சிடியன் ஆகிய கலர்களில் வாங்கலாம்.

கூகுள் பிக்சல் 10ஏ முக்கிய அம்சங்கள்:
- லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (7 வருட ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்ஸ்)
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன்
- 6.3-இன்ச் ஆக்டுவா (pOLED) டிஸ்பிளே

- டென்சர் ஜி4 சிப்செட்
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்
- 8GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 48 மெகாபிக்சல் (f/1.7) ப்ரைமரி ஷூட்டர் (25மிமீ போக்கல் லெங்த், 1/2.0-இன்ச் சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் - OIS)

- 13 மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ராவைடு கேமரா (120-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ மற்றும் 1/3.1-இன்ச் சென்சார்)
- 13 மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்
- 5100mAh பேட்டரி
- 30W வயர்டு மற்றும் 10W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- அளவீட்டில் 153.9x73x9மிமீ
- எடையில் சுமார் 183 கிராம்

VERDICT - நம்பி வாங்க 5 நல்ல காரணங்கள்:
1. பிரகாசமான டிஸ்பிளே
2. பெட்டர் ஆன கேமராக்கள்
3. ஒன்றரை நாள் தாங்கும் நல்ல பேட்டரி லைஃப்
4. வாட்டர் ப்ரூப்
5. அழகழகான கலர் ஆப்ஷன்கள்

வாங்காமல் தவிர்க்க 4 நியாயாமான காரணங்கள்:
1. டிஸ்பிளே பிரைட் ஆக இருந்தாலும், பெஸல் பெரியதாக உள்ளன
2. கிட்டத்தட்ட பிக்சல் 9ஏ மாடலை போலவே உள்ளது
3. ஸ்லோவான வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்
4. கேமரா செட்டப்பில் டெலிஃபோட்டோ லென்ஸ் இல்லை

பிக்சல் 10ஏ மாடலுக்கு பதிலாக வேறு என்ன ஸ்மார்ட்போனை வாங்கலாம்?
1. ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R)
2. சாம்சங் கேலக்ஸி ஏ56 (Samsung Galaxy A56)
3. மோட்டோ ரேஸர் ப்ளஸ் 2024 (Moto Razr Plus 2024)
4. மோட்டோ ஜி ஸ்டைலஸ் 2025 ( Moto G Stylus 2025)
5. கூகுள் பிக்சல் 9ஏ (Google Pixel 9a)

Best Mobiles in India

English summary
Google Pixel 10a India Sale Price Offer Reasons to Buy Reasons to Skip and Alternatives
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X