POCO புயல் வீசுது.. மார்ச் 17 இல் புது 8500mAh பேட்டரி போன்.. உடனே விலை குறைந்த 6550mAh பேட்டரி போன்!
போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் (POCO X8 Pro Series) ஸ்மார்ட்போன்கள் வருகிற மார்ச் 17 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்கிற அறிவிப்பு வெளியான வேகத்தில் பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி (POCO X7 Pro 5G) ஸ்மார்ட்போனின் விலை கடுமையாக குறைந்துள்ளது.
நினைவூட்டும் வண்ணம் போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கடந்த ஜனவரி 2025 இல் இந்தியாவில் அறிமுகமானது. அறிமுகமானதும் போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.27,999 க்கும், 12GB ரேம் + 256GB அபோஷன் ரூ.29,999 க்கும் வாங்க கிடைத்தது.

இப்போது போக்கோ எக்ஸ்8 ப்ரோ சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் கீழ் போக்கோ எக்ஸ்8 ப்ரோ (POCO X8 Pro) மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (POCO X8 Pro Max) என்கிற 2 மாடல்கள் மார்ச் 17 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்கிறஅறிவிப்பு வெளியானதும் பிளிப்கார்ட்டில் போக்கோ எக்ஸ்7 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை குறைந்துள்ளது
தற்போது பிளிப்கார்ட்டில்.போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.23,999 க்கும், 12GB ரேம் + 256GB அபோஷன் ரூ.25,999 க்கும் வாங்க கிடைக்கிறது. அதாவது இரண்டுமே ரூ.4000 நேரடி விலைக்குறைப்பை பெற்றுள்ளன.
குறிப்பிடத்தக்க வண்ணம் போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்ட்ரா (MediaTek Dimensity 8400 Ultra SoC) சிப்செட் கொண்டு இயங்குகிறது. இது 90வாட் பாஸ்ட் சார்ஜிங் (90W fast charging) ஆதரவு உடனான 6550எம்ஏஎச் பேட்டரியை (6550mAh battery) கொண்டுள்ளது.
சுவாரசியமாக போக்கோ எக்ஸ்7 5ஜி (POCO X7 5G) ஸ்மார்ட்போனின் விலையும் குறைந்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமான போது, அதன் 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.21,999 க்கும், 12GB ரேம் + 256GB அபோஷன் ரூ.23,999 க்கும் வாங்க கிடைத்தது.
தற்போது பிளிப்கார்ட்டில்.போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கும், 12GB ரேம் + 256GB அபோஷன் ரூ.19,999 க்கும் வாங்க கிடைக்கிறது. அதாவது ப்ரோ மாடலை போலவே இதுவும் ரூ.4000 நேரடி விலைக்குறைப்பை பெற்றுள்ளன.
மார்ச் 17 அறிமுகமாகும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (Abhishek Yadav) எக்ஸ் தளம் வழியாக பகிர்ந்துள்ள விவரங்களின் படி, போக்கோ எக்ஸ்8 ப்ரோ மாடல் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ரேஷியோ உடனான 6.59-இன்ச் 1.5K TCL M10 OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது பயோமெட்ரிக் பாதுகாப்பிற்காக ஆப்டிகல் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் IP68 + IP69 + IP69K ரேட்டிங்கையும் பெறலாம் என்று கூறப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்8 ப்ரோ மாடல் ஆனது MediaTek Dimensity 8500 Ultra சிப்செட் மூலம் இயக்கப்படலாம், இது Mali-G720 MC8 GPU, LPDDR5x அல்ட்ரா ரேம் மற்றும் UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம்.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ் 3 (HyperOS 3) அவுட்-ஆஃப்-தி-பாக்ஸுடன் அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது Wi-Fi 6, Bluetooth 5.4, IR Blaster மற்றும் NFC ஆகிய கனெக்ட்விட்டி ஆதரவுகளையும் பெறலாம்.
கேமராக்களை பொறுத்தவரை போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50-மெகாபிக்சல் Sony IMX882 ப்ரைமரி கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்காக 20-மெகாபிக்சல் OV20B முன்பக்க கேமராவை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடைசியாக இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 6,500mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 17 அறிமுகமாகும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? இந்த சீரீஸின் ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது "அதே" 120Hz ரெஃப்ரெஷ் ரேட் 2000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ரேஷியோ உடனான "சற்றே பெரிய" 6.83-இன்ச் 1.5K TCL M10 OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 9500s SoC ஆல் இயக்கப்படலாம், இது Immortalis-G925 MC12 மற்றும் ப்ரோ வேரியண்ட்டை போலவே LPDDR5x அல்ட்ரா ரேம் மற்றும் UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை அதே 50-மெகாபிக்சல் ப்ரைமரி மற்றும் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம்
முக்கிய வேறுபாடாக ப்ரைமரி கேமராவில் OIS ஆதரவுடன் Light Hunter 600 இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் முன்பக்க கேமரா ப்ரோ மாடலில் உள்ள அதே சென்சாரே (20எம்பி) பேக் செய்யப்படலாம். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை, போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், LHDC 5.0 ஆதரவு, 3D அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், Wi-Fi 7 மற்றும் புளூடூத் 5.4 ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று "மேற்குறிப்பிட்ட" டிப்ஸ்டர் கூறுகிறார்.
அளவீடுகளில் இந்த ஸ்மார்ட்போன் 8.15 மிமீ தடிமன் மற்றும் சுமார் 219 கிராம் எடை கொண்டதாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் 8,500mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








