இந்தியாவில் போட்டிப்போடும் சீன கம்பெனிகள்: Realme 10 4G Vs Redmi Note 12.. ரூ.15,000 மட்டுமே!

|

Xiaomi நிறுவனம் ஜனவரி 5 ஆம் தேதி இந்தியாவில் ரெட்மி நோட் 12 சீரிஸை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த நிலையில் சியோமி இன் இணை போட்டியாளராக இருக்கும் Realme, ஜனவரி 9 ஆம் தேதி ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போனை களமிறக்க இருக்கிறது.

Realme 10

Realme 10

Realme 10 ஸ்மார்ட்போனானது துளை பஞ்ச் காட்சி வசதியைக் கொண்டிருக்கும் என்பதை அதிகாரப்பூர்வ போஸ்டர் காட்டுகிறது. ரூ.15,000க்கு கீழ் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி முன்னதாகவே இந்தியாவில் ரியல்மி 10 ப்ரோ போனை அறிமுகம் செய்துள்ளது.

மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட்

மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட்

Realme 10 4G வெளியீடு குறித்து நிறுவனம் டீஸ் செய்துள்ளது. இதில் இந்த போனின் அறிமுக தேதி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ரியல்மி இன் இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 9 ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு அறிமுகமாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. Realme 10 4G ஸ்மார்ட்போனானது மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் மூலம் இயக்கப்படும் எனவும் 90 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே

90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே

ஸ்மார்ட்போனில் உள்ள தொழில்நுட்பம் சிறந்த வண்ணங்கள் மற்றும் பார்வை அனுபவத்தை வழங்கும் என்பது உறுதி செய்யப்படுகிறது. மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் கேமிங் அனுபவம் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் டிஸ்ப்ளே இதில் இடம்பெறுகிறது.

பிளிப்கார்ட் பிரத்யேக விற்பனை

பிளிப்கார்ட் பிரத்யேக விற்பனை

ஸ்மார்ட்போனின் அறிமுகத்திற்கு முன்னதாக ரியல்மி பிளிப்கார்ட்டில் பிரத்யேக மைக்ரோசைட் ஒன்றையும் அமைத்துள்ளது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

50 எம்பி முதன்மை கேமரா

50 எம்பி முதன்மை கேமரா

அதேபோல் Realme 10 ஸ்மார்ட்போனானது 50 எம்பி முதன்மை கேமரா சென்சார் உடன் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இரண்டாம் நிலை கேமரா குறித்த விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது டெப்த் சென்சார் அல்லது 2 எம்பி மேக்ரோ சென்சார் ஆக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

சியோமி, ரியல்மி மற்றும் விவோ

சியோமி, ரியல்மி மற்றும் விவோ

சியோமி, ரியல்மி மற்றும் விவோ போன்ற அனைத்து பிராண்டுகளும் மூன்று கேமராக்களுக்கு பதிலாக டூயல் ரியர் கேமராக்களில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது.

குறைவான சென்சார்கள் உடன் மூன்று கேமராக்களை அறிமுகம் செய்வதற்கு பதிலாக நிறுவனங்கள் அதிக சென்சார் அடிப்படையில் டூயல் கேமராக்களை பொருத்துவதில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

Realme 10 ஆனது ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே மற்றும் பவர் பட்டன் பயோமெட்ரிக் பாதுகாப்பு கைரேகை ஸ்கேனர் ஆதரவைக் கொண்டிருக்கும் என்பதை அதிகாரப்பூர்வ போஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளது.

6.4 இன்ச் ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளே உடன் மேல் இடதுபுறத்தில் கட்அவுட் வசதியுடன் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இந்த டிஸ்ப்ளே ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பைக் கொண்டிருக்கும். இந்த கிளாஸ் ஆனது லேசான கீறல் எதிர்ப்பு தன்மையைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் பிற அம்சங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Redmi Note 12

Redmi Note 12

ரியல்மி 10 4ஜி ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகும் என முன்னதாகவே எதிர்பார்க்கப்பட்டது.

காரணம் ரியல்மி இன் போட்டியாளரான சியோமி, ஜனவரி 5 ஆம் தேதி இந்தியாவில் ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த தொடரில் மூன்று ஸ்மார்ட்போன் மாடல்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது Redmi Note 12, Redmi Note 12 Pro மற்றும் Redmi Note 12 Pro Plus ஆகும்.

ரியல்மி நிறுவனம் முன்னதாகவே Realme 10 Pro மற்றும் Realme 10 Pro Plus ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தொடரில் ரியல்மி 10 மாடல் மட்டுமே அறிமுகமாகாமல் இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனை சரியான நேரத்தில் களமிறக்க இருக்கிறது ரியல்மி.

ரூ.15,000 மட்டுமே

ரூ.15,000 மட்டுமே

Realme 10 4G ஆனது ரியல்மி 10 சீரிஸ் இன் அடிப்படை மாடலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதன் விலை ரூ.15,000 என நிர்ணயம் செய்யப்படலாம். ரியல்மி 10 4ஜி மற்றும் ரெட்மி நோட் 12 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போனுக்கும் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme 10 4G Vs Redmi Note 12: Realme 10 4G Set to launch in india on January 9, Redmi Note 12 Series on Jan 5

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X