காத்திருப்பு ஓவர்.. இந்தியாவுக்கு வருகிறது புது Vivo 5ஜி போன்.. 7200mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?
விவோ விரைவில் விவோ ஒய்51 ப்ரோ (Vivo Y51 Pro) ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய போன் வரும் நாட்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த புதிய போனின் விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறைத்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
விவோ ஒய்51 ப்ரோ அம்சங்கள் (Vivo Y51 Pro Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7360 டர்போ (MediaTek Dimensity 7360 Turbo) சிப்செட் உடன் புதிய விவோ ஒய்51 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் புதிய விவோ ஒய்51 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
50எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா உடன் விவோ ஒய்51 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்யும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா உடன் இந்த புதிய விவோ ஒய்51 ப்ரோ போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) உடன் விவோ ஒய்51 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் இந்த போனில் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதி உள்ளது.
ஃபுல் எச்டி பிளஸ் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) உடன் விவோ ஒய்51 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் இந்த புதிய விவோ போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) போனற் பல அம்சங்கள் இந்த போனில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7200mAh பேட்டரி உடன் விவோ ஒய்51 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் விவோ ஒய்51 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.25,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
photo credits: androbranch, vivo


Click it and Unblock the Notifications








