மொத்த மார்க்கெட்டும் வாய் பிளக்குது.. 200MP + 200MP + 200MP கேமரா செட்டப் உடன் புது OPPO போன்.. எந்த மாடல்?
ஒப்போ (OPPO) நிறுவனமானது ஸ்மார்ட்போன் போட்டோகிராஃபியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. இந்நிறுவனம் மூன்று 200எம்பி கேமராக்களை உள்ளடக்கிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாடல் ஒப்போ பைண்ட் எக்ஸ்10 சீரீஸின் கீழ் வெளியாகலாம் என்கிற தகவலும் கிடைத்துள்ளது. ஒப்போ பைண்ட் எக்ஸ்10 சீரீஸ் பற்றிய வதந்திகள் சிறிது காலமாகவே பரவி வருகின்றன. இந்த சீரிஸ் - மூன்று மாடல்களுடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: பைண்ட் எக்ஸ்10 (Find X10), பைண்ட் எக்ஸ்10 ப்ரோ (Find X10 Pro) மற்றும் பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் (Oppo Find X10 Pro Max).

டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்துள்ள புதிய லீக் ஆனது, ஒப்போ பைண்ட் எக்ஸ்10 சீரீஸின் கேளே உள்ள 3 மாடல்களில் ஒன்று அசாதாரணமான கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம்; அது பேக் பேனலில் மூன்று 200 மெகாபிக்சல் சென்சார்களை பேக் செய்யலாம். பெரும்பாலும் இது ப்ரோ மேக்ஸ் மாடலாக இருக்கலாம்.
மேலும் இந்த லீக் ஆனது அந்த 3 கேமராக்களில் ஒன்று 1/1.56 இன்ச் அளவுள்ள 200 மெகாபிக்சல் சென்சாரை பயன்படுத்தும் அல்ட்ரா-வைட் லென்ஸாக இருக்கும் என்றும் கூறுகிறது. இந்த சென்சார் - தற்போது பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் அல்ட்ரா-வைட் கேமராக்களுக்கு பயன்படுத்தும் சென்சார்களை விட கணிசமாக பெரியதாகும்,
ஒப்போ பைண்ட் எக்ஸ்10 ப்ரோ மேக்ஸ் மாடலில் எதிர்பார்க்கப்படும் மூன்று 200எம்பி ரியர் கேமராக்களை தவிர்த்து, ஒப்போ பைண்ட் எக்ஸ்10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுமே வரவிருக்கும் மீடியாடெக் டைமன்சிட்டி 9600 (MediaTek Dimensity 9600) சிப்பால் இயக்கப்படும் முதல் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் மேலே உள்ள எந்த விவரங்களுமே ஓப்போவால் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் ஒப்போ அதன் அடுத்த பிளாக்ஷிப் சீரீஸிற்கு வழக்கத்திற்கு மாறாக அடுக்கப்பட்ட கேமரா அமைப்பை பரிசோதித்து வருவதாக லீக்ஸ் தெரிவிக்கின்றன. பார்க்கலாம்; இது வெறுமனே லீக் ஆக காணாமல் போய் விடுமா அல்லது உண்மையாகுமா என்பதை!
லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஒப்போ பைண்ட் எக்ஸ்9, ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் 6.78-இன்ச் 1.5கே LTPO டிஸ்பிளே
- வெண்ணிலா மாடலில் 6.59-இன்ச் 1.5கே டிஸ்பிளே
- இரண்டும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ ஆதரிக்கின்றன மற்றும் 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்-ஐ வழங்குகின்றன
- ஃபுல்-ஸ்க்ரீன் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (Always-On Display - AOD) அம்சத்தையும் கொண்டுள்ளன.
- வெண்ணிலா மாடலில் 50-மெகாபிக்சல் சோனி LYT-828 ப்ரைமரி சென்சார் + 50-மெகாபிக்சல் சோனி LYT-600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் + 50-மெகாபிக்சல் சாம்சங் ஜேஎன்5 அல்ட்ராவைடு கேமரா உள்ளன; முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ சென்சார் உள்ளது
- ப்ரோ மாடலில் 3எக்ஸ் டிஜிட்டல் ஜூம் திறன்கள் உடன் 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் உடன், வெண்ணிலா மாடலில் உள்ள அதே ப்ரைமரி கேமரா மற்றும் அல்ட்ராவைடு கேமரா பேக் செய்யப்பட்டு உள்ளன; முன்பக்கத்தில் 50-மெகாபிக்சல் செல்பீ சென்சாரை கொண்டு உள்ளது.
- ப்ரோ மற்றும் வெண்ணிலா மாடல்கள் முறையே 7500mAh மற்றும் 7025mAh பேட்டரியை பேக் செய்கின்றன
- இரண்டும் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகின்றன
- கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை 5G, 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS மற்றும் USB Type-C போர்ட்கள் ஆகியவைகளை கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications








