Home
Mobile

புது OnePlus போன் VS புது iQOO போன்.. ஒரே மாதிரி 200MP கேமரா..சபாஷ் சரியான போட்டி!

ஒன்பிளஸ் VS ஐக்யூ ஆகிய நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி ஆனது நாளுக்கு நாள் சுவாரசியம் ஆகிக்கொண்டே போகிறது. இதற்கிடையில் இவ்விரு நிறுவனங்களின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் இரண்டுமே 200எம்பி ப்ரைமரி கேமராவுடன் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

அது ஐக்யூ 16 மற்றும் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போன்கள் ஆகும். டிப்ஸ்டர் ஸ்மார்ட் பிகாச்சுவின் கூற்றுப்படி, ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் தற்போது 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவுடன் சோதிக்கப்படுகிறது. ஒப்பிடுகையில், ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் தான் உள்ளது. ஆனாலும் வரவிருக்கும் ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் அதன் முன்னோடியை போலவே 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவை தக்க வைத்துக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.

புது OnePlus போன் VS புது iQOO போன்.. ஒரே மாதிரி 200MP கேமரா!

சுவாரஸ்யமாக, அதே டிப்ஸ்டர் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் கூட இதேபோன்ற கேமரா செட்டப்பை எதிர்பார்க்கலாம் என்று கூறுகிறார். அதாவது, 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் லென்ஸுடன் இணைக்கப்பட்ட 200-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் உடன் ஒன்பிளஸ் 16 மாடல் அறிமுகம் செய்யப்படலாம். ஒப்பிடுகையில், ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது அதன் ப்ரைமரி மற்றும் பெரிஸ்கோப் கேமராக்களுக்கு 50-மெகாபிக்சல் சென்சார்களை பயன்படுத்துகிறது.

ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.85-இன்ச் சாம்சங் எம்14 அமோஎல்இடி டிஸ்பிளே
- 2கே ரெசல்யூஷன்
- 130Hz ஸ்க்ரீன் சாம்ப்ளிங் ரேட்
- 144Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1.07 பில்லியன் கலர்ஸ்
- 508பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- கேமிங் மோட்-இல் 300Hz வரை டச் சாம்ப்ளிங் ரேட்
- பி3 கலர் கேமட்
- 94.37 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ

- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- அட்ரினோ 840 ஜிபியு
- இந்த சிப்செட் இரண்டு 4.6GHz செயல்திறன் கோர்களையும் ஆறு 3.62GHz ஆறு செயல்திறன் கோர்களையும் கொண்டுள்ளது.
- இது ஒரு தனியுரிம க்யூ3 கேமிங் சிப்பையும் கொண்டுள்ளது
- 16GB வரை LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் 1TB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி சென்சார்
- 50-மெகாபிக்சல் (f/2.65) பெரிஸ்கோப் சென்சார்
- 100x டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (f/2.05) வைட்-ஆங்கிள் லென்ஸ்
- 4கே வீடியோ பதிவை ஆதரிக்கும் 32-மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா

- 7,000mAh பேட்டரி
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- அல்ட்ராசோனிக் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஒரிஜின் ஓஎஸ் 6
- ப்ளூடூத் 6, டூயல்-பேண்ட் வைஃபை 7, ஜிபிஎஸ்
- அளவீட்டில் 163.65×76.80×8.10மிமீ
- எடையில் சுமார் 221 கிராம்

இதோடு 2026 இல் ஐக்யூ (iQOO) நிறுவனம் சற்று வித்தியாசமான ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. முதல் முறையாக, இந்நிறுவனம் அதன் பிளாக்ஷிப் நம்பர் சீரிஸில் "அல்ட்ரா" மாடலை சேர்க்கிறது. இந்த மாடல் பெயரின் கீழ் வரும் முதல் ஸ்மார்ட்போன் - ஐக்யூ 15 அல்ட்ராவாக (iQOO 15 Ultra) இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
200MP Primary Camera in Both OnePlus 16 and iQOO 16 Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X