ஓரமா ஒத்துங்க மொத்தமா.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 7000mAh பேட்டரி.. OIS கேமரா.. 68W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் (Motorola Edge 70 Fusion) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே, 7000mAh பேட்டரி, ஓஐஎஸ் கேமரா மற்றும் 68W சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுத்து உள்ளது. இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் அம்சங்கள் (Motorola Edge 70 Fusion Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட்டுடன் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்டுள்ளது.

3 ஜெனரேஷ் ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 6.78 இன்ச் (2772 x 1272 பிக்சல்கள்) பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே மற்றும் 1.5K ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. குவாட் கர்வ்ட் டிசைனில் (Quad Curved Design) பிரீமியம் லுக் கொண்டுள்ளது.
மேலும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பை கொடுத்து உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) இந்த எட்ஜ் 70 ஃப்யூசன் ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது.

மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி710 (SONY LYT710) சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization), குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 4K ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 32 எம்பி செல்பீ கேமராவை இந்த மோட்டோரோலா எட்ஜ் 70 ஃப்யூசன் கொடுத்து உள்ளது.
68W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த பேட்டரியுடன் 7.99 எம்எம் தடிமன் மற்றும் 193 கிராம் எடை கொடுத்து உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. லேட்டஸ்ட் மோட்டோ போன்களில் கிடைப்பதை போலவே இதிலும் MIL STD-810H சர்டிபிகேஷன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி உள்ளது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது. மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.32,999ஆகவும் இருக்கிறது. மார்ச் 12ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா தளங்களில் வாங்கி கொள்ளலாம்.
இந்த மார்கெட் விலையில் இருந்து அறிமுக சலுகையாக ரூ.2,000 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.24,999 ஆரம்ப விலைக்கு இந்த மோட்டோரோலா எட்ஜ் ப்யூஷன் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். பான்டோன் ப்ளூ சர்ப் (PANTONE Blue Surf), பான்டோன் கன்ட்ரி ஏர் (PANTONE Country Air) மற்றும் பான்டோன் சில்லவுட் (PANTONE Silhouette) ஆகிய கலர்களில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications