வாவ் iQOO.. பக்கா பட்ஜெட்டில் 7200mAh ரிவர்ஸ் சார்ஜிங் பேட்டரி, IP69 ரேட்டிங், 8GB ரேம்!
இந்த 2026 மார்ச் மாதம் ஆனது புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்திற்காக குத்தகை விடப்பட்டது போல - வரிசையாக பல வகையான புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை கண்டு வருகிறது; இன்னும் காண உள்ளது. இந்த வரிசையில் ஐக்யூ (iQOO) நிறுவனமும் இணைந்து உள்ளது.
ஐக்யூ (iQOO) நிறுவனம் வருகிற மார்ச் 12 ஆம் தேதி அன்று இந்தியாவில் அதன் அடுத்த பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆன ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி (iQOO Z11x 5G) மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்து உள்ளது. கூடவே அறிமுகத்திற்கு முன்பாக இந்த ஸ்மார்ட்போன் பற்றிய சில முக்கிய விவரங்களையும் வெளியிட தொடங்கியுள்ளது.

ஐக்யூ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் பிரிஸ்மாடிக் கிரீன் மற்றும் டைட்டன் பிளாக் ஆகிய இரண்டு கலர் ஆப்ஷன்களில் வரும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. கூடவே அமேசான் இந்தியா வலைத்தளத்தில் தற்போது நேரலையில் உள்ள ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் மைக்ரோசைட்டின் படி, இது மீடியாடெக்கின் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட் கொண்டு இயங்கும். இந்த ஸ்மார்ட்போனின் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷனும் உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போன், இன்டர்னல் சோதனையின் போது AnTuTu அளவுகோலில் ஒரு மில்லியன் பாயிண்ட்களை தாண்டியதாக ஐக்யூ கூறுகிறது. இந்த ஸ்கோரின் அடிப்படையில் - ஐக்யூ இஸட்11எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது அதன் விலைப்பிரிவில் சற்றே வேகமான ஸ்மார்ட்போன் ஆக இருக்கும் என்றும் ஐக்யூ நிறுவனம் கூறுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் UFS 3.1 ஸ்டோரேஜை பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடவே ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆர்ஜின் ஓஎஸ் 6 உடன் அனுப்பப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இரண்டு வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி பேட்ச்களை பெறும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 44W பிளாஷ்சார்ஜ் ஆதரவுடன் 7200mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்பதும், இது ரிவர்ஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கும் என்பதும் கூட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் வழியாக இயர்பட்ஸ் அல்லது மற்றொரு ஸ்மார்ட்போனை கூட நீங்கள் சார்ஜ் செய்யலாம். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் IP69 ரேட்டிங் உடன் வருவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த போனின் மைக்ரோசைட் ரூ.23,000 என்கிற விலை நிர்யணத்தை குறிப்பிடுகிறது, ஆனால் நம்பகமான ஒரு டிப்ஸ்டரிடம் இருந்து கிடைத்த தகவலின்படி இதன் ஆரம்ப விலை ரூ.17,000 - ரூ.18,000 க்கும் இருக்கும்.
நினைவூட்டும் வண்ணம் ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஏப்ரல் 2025 இல் ரூ.13,999 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆக ஒரு ஸ்மார்ட்போன், ஒரே அடியாக ரூ.10000 விலை அதிகரிப்பை காண அதிக வாய்ப்பில்லை. இருந்தாலும், இப்போதைக்கு இது ரூ.15,000 - ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரும் என்று கணிப்பது நல்லது!
VERDICT - ஐக்யூ 11எக்ஸ்5ஜி ஸ்மார்ட்போனை வாங்கலாமா? உண்மையிலேயே இது ரூ.17,000 - ரூ.18,000 என்கிற விலை வரம்பிற்கு அருகில் அறிமுகப்படுத்தப்பட்டால், ஒப்பீட்டளவில் இது மற்ற போன்களுக்கு மேலே மிகவும் வசதியாக அமரும். இந்த ஸ்மார்ட்போன் டிஸ்பிளே அல்லது கேமரா மேம்படுத்தல்களை விட செயல்திறன் மற்றும் பேட்டரி லைஃப்க்கு முன்னுரிமை அளிக்கும் வாடிக்கையாளர்களை நிச்சயம் கவர்ந்து இழுக்கலாம்
7200mAh பேட்டரி மற்றும் புதிய டைமன்சிட்டி சிப் ஆனது - இந்தவிலைப்பிரிவில் புதிய ஸ்மார்ட்போனை தேடும் பயனர்களுக்கு ஒரு அட்ட்டகாசமான ஆப்ஷன் ஆக இருக்கும். ஆனால் ஐக்யூ குறிப்பிடுவது போல் இது ரூ.23,000 க்கு அருகிலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டால் - ஐக்யூ இஸட்11எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் நெரிசலான விலைப்பிரிவிற்குள் (ஏற்கனவே நிறைய மாடல்கள் இருக்கும் பிரிவிற்குள்) நுழையும்.
அந்த பிரிவில் ரியல்மி, ரெட்மி மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனனாகில் தங்களுடைய பெரும்பாலான ஸ்மார்ட்போன்களை வைத்துக்கொண்டு "போட்டிக்கு" ரெடியாக உள்ளன. மேலும் இந்த பிரிவில் பெரும்பாலும் AMOLED டிஸ்பிளேக்கள், வேகமான சார்ஜிங் அல்லது வெர்சடைல் கேமரா செட்டப்களை வழங்குகின்றன. ஆக ஐக்யூ இஸட்11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் "சரியான" விலை நிர்ணயம் தான் - இந்திய சந்தையில் அதன் "வெற்றியை" நிர்ணயம் செய்யும்!


Click it and Unblock the Notifications