Home
Mobile

ஒத்த போனுக்கு மொத்தமும் காலி.. 10001mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டிலேயே அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக ரியல்மி நார்சோ பவர் 5ஜி (Realme NARZO Power 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு சோனி சென்சார் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா சிப்செட் கொடுத்தள்ளது. இந்த ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

7000mAh பேட்டரி, 8000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்கள் இப்போது இந்தியாவில் அதிகமாக கிடைக்கின்றன. ஆனால், 10001mAh பேட்டரி கொண்ட முதல் மாடலாக ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போன் களமிறங்கி இருக்கிறது. பேட்டரி மட்டுமல்லாமல், மற்ற பீச்சர்களும் பட்ஜெட்டுக்கு ஏற்ப பக்காவாகவே இருக்கிறது. முதலில் பீச்சர்களை பார்க்கலாம்.

ஒத்த போனுக்கு மொத்தமும் காலி.. 10001mAh பேட்டரி.. 80W சார்ஜிங்!

ரியல்மி நார்சோ பவர் 5ஜி அம்சங்கள் (Realme NARZO Power 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7400 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7400 Ultra 4nm) சிப்செட்டை மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுத்து உள்ளது. மேலும், ஹைப்பர் விஷன்+ ஏஐ சிப் (Hyber Vision+ AI Chip) கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் (Android OS) அப்டேட்கள் வருகின்றன. 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) மற்றும் ரியல்மி யுஐ 7.0 (Realme UI 7.0) கிடைக்கிறது. 6.8 இன்ச் (1280 x 2800 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த ரியல்மி நார்சோ பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

ஒத்த போனுக்கு மொத்தமும் காலி.. 10001mAh பேட்டரி.. 80W சார்ஜிங்!

1.5K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. எச்டிஆர்10பிளஸ் (HDR10+) உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பை கொடுத்து உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைத்து உள்ளது.

மெயின் கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882), 2 ஆக்சிஸ் ஓஐஎஸ் (2 Axis OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைத்துள்ளது. சோனி ஐஎம்எக்ஸ்480 (Sony IMX480) சென்சார் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஐ ஹைப்பர் கிளாரிட்டி, ஏஐ ஹைப்பர் மோஷன் கிடைக்கிறது.

மேலும், ஏஐ ஆல்வேஸ்-ஆன் எச்டிஆர் கிடைக்கிறது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10001mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. டெம்ப்ரேச்சர் ரெசிஸ்டன்ஸ், ஓவர்சார்ஜ் கன்ட்ரோல் கிடைக்கிறது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது.

பெரிய பேட்டரி வருவதால், 9.08 எம்எம் தடிமன் மற்றும் 219 கிராம் எடை கொண்டுள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.27,999 ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.29,999ஆக இருக்கிறது. ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.1000 கூடுதல் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

மேலும், 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ மற்றும் 4 வருடங்களுக்கு பேட்டரி வாரண்டி கிடைக்கிறது. அமேசான் மற்றும் ரியல்மி தளங்களில் மார்ச் 5ஆம் தேதி விற்பனை தொடங்க இருக்கிறது. டைட்டன் சில்வர் (Titan Silver) மற்றும் டைட்டன் ப்ளூ (Titan Blue) ஆகிய கலர்களில் கிடைக்கிறது. ரூ.23,999 ஆரம்ப விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme NARZO Power 5G With 10001mAh Battery 80W Charging Launched in India Sale From March 10
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X