Home
Mobile

வந்துட்டான் OnePlus-ன் குட்டி காளை.. 7500mAh பேட்டரி, 100W சார்ஜிங், LUMO கேமரா, IP69K ரேட்டிங்.. புது போன்!

ஒருவழியாக ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது அதன் அடுத்த "குட்டி காளை" ஆன.. அதாவது அதன் 2வது மினி ஸ்மார்ட்போன் (Mini Smartphone) அல்லது காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Compact Flagship Smartphone) ஆன ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) ஸ்மார்ட்போனை அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தி உள்ளது

இது கடந்த ஏப்ரல் 2025 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்ட்போனுக்கு பிறகு வரும் மாடல் ஆகும். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் சீனாவில் ஒன்பிளஸ் 15டி ஆக அறிமுகம் செய்யப்படும் மாடலானது இந்தியாவில் ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) ஆக வரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

வந்துட்டான் OnePlus-ன் குட்டி காளை.. 7500mAh பேட்டரி, 100W சார்ஜிங்!

ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த தோற்றம் மற்றும் கேமரா செட்டப் வெளிப்படுத்தப்பட்டுள்ளது

வெளியான புகைப்படங்களின்படி ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்குரிக்கல் ஷேப்ட்டு ரியர் கேமரா மாட்யூலை கொண்டிருக்கும். கேமரா ஐலேண்ட்டில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது; சென்சார்களுக்கு மேலே எல்இடி ஃபிளாஷ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒன்பிளஸ் 13எஸ், ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் 15ஆர் ஆகிய மாடல்களில் உள்ளதை போலவே

சிறிய வேறுபாடு என்னவன்றால் கேமரா பம்ப் ஒப்பீட்டளவில் சிறியதாகவும் பேக் பேனலில் இருந்து சற்று உயர்ந்ததாகவும் தெரிகிறது. வெளியான புகைப்படங்களில் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது பிரௌன் மற்றும் க்ரீன் கலர்களில் உள்ளது. க்ரீன் ஆப்ஷன் மேட் பினிஷை கொண்டதாக தெரிகிறது, அதே நேரத்தில் பிரௌன் ஆப்ஷன் டார்க் ஆன டோன்-ஐ வழங்குகிறது.

ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் உறுதி செய்யப்பட்டுள்ள அம்சங்கள்:
- 6.32-இன்ச் பிளாட் டிஸ்பிளே
- நான்கு பக்கங்களிலும் மிகவும் குறுகிய பெசல்கள்
- கேமரா செட்டப்பில் மேம்படுத்தப்பட்ட LUMO பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- IP66 + IP68 + IP69 + IP69K ரேட்டிங்
- 7500mAh "க்ளேசியர் பேட்டரி"
- 100W சூப்பர் ஃபிளாஷ் சார்ஜிங்
- பைபாஸ் சார்ஜிங்

முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 2,160Hz PWM டிம்மிங் ரேட்
- Aqua Touch 2.0 தொழில்நுட்பம்
- க்ளோவ் மோட் (இது பயனர்கள் ஈரமான அல்லது கையுறை அணிந்த கைகளால் ஸ்மார்ட்போனை இயக்க உதவும்)

- 12ஜிபி LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 ஓஎஸ்

-டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)

- 5850mAh பேட்டரி
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, NavIC உடன் கூடிய GPS, NFC மற்றும் USB Type-C போர்ட்
- அளவீட்டில் 150.8×71.7×8.2மிமீ
- எடையில் 185 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15T Design Colour Options Revealed Ahead Launch See Confirmed Specifications Also
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X