2ஜி ஊழல்: இன்று அ.ராஜா வெற்றி; அன்று மன்மோகன் சிங் தோல்வி.!

|

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் அ.ராஜா மற்றும் தி.மு.க. தலைவர் எம்.கே. கனிமொழி ஆகியோரை குற்றமற்றவர்கள் என்றுகூறி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தவிர, தொலைத் தொடர்புத்துறை செயலாளர் சித்தார்த் பெஹுரா மற்றும் ராஜாவின் தனிப்பட்ட உதவியாளரான ஆர்.கே.சந்தோலியா உட்பட மொத்தம் 12 பேரையும் குற்றமற்றவர்கள் என்றுகூறி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2ஜி ஊழல்: இன்று அ.ராஜா வெற்றி; அன்று மன்மோகன் சிங் தோல்வி.!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கை விசாரிக்கும் சிபிஐ நீதிமன்ற நீதிபதியான ஓ.பி.சைனி, கடந்த டிசம்பர் 5 அன்று டிசம்பர் 21-ஆம் தேதியை தீர்ப்பு நாளாக அறிவித்தார். அதனை தொடர்ந்து இன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான ஆதாரங்களை வழங்க எதிர்க்கட்சிகள் மோசமான தோல்வியை அடைந்துள்ளன என்று தீர்ப்பளித்துள்ளார்.

மொத்தம் மூன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்குகள்

மொத்தம் மூன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்குகள்

சிபிஐ நீதிமன்ற நீதிபதியான ஓ.பி.சைனி மொத்தம் மூன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரித்தார் என்பதும், அதில் ஒன்று ஈடி மூலமும், இரண்டு சிபிஐ மூலமும் தொகுக்கப்பட்ட வழக்கென்பதும் குறிப்பிடத்தக்கது.

122 உரிமங்கள் இரத்து

122 உரிமங்கள் இரத்து

வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான அ.ராஜா இந்த தீர்ப்பு பற்றி கூறிகையில் "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார். இந்தியத் தொலைத் தொடர்புத் துறையை உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் வாயிலாக சிஸ்டெமா ஷ்யாம் டெலிசர்வீசஸ், டெலினோர் மற்றும் எடிசலாட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் 122 உரிமங்களை இரத்து செய்ய முடிந்தது.

ரூ.1.76/- லட்சம் கோடி இழப்பு

ரூ.1.76/- லட்சம் கோடி இழப்பு

கடந்த 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 122 உரிமங்களை ஒதுக்கீடு செய்வதில் மோசடியில் ஈடுபட்டதாகவும், அதனால் (கம்ப்ட்ரோல்லர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ( CAG) -படி) ரூ.1.76/- லட்சம் கோடி இழப்பு நேர்ந்ததாகவும் அ.ராஜா மற்றும் பலர் மீது சிபிஐ அதன் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

மன்மோகன் சிங் அரசாங்கத்தின் தோல்வி

மன்மோகன் சிங் அரசாங்கத்தின் தோல்வி

இதனை தொடர்ந்து சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த தேரத்லில், மன்மோகன் சிங் அரசாங்கத்தின் தோல்விக்கும் இந்த ஊழல் வழக்கு வித்திட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2011 நவம்பரில் 100 க்கும் மேற்பட்ட சாட்சிகளை விசாரிப்பதில் இருந்து தொடங்கிய இந்த வழக்கு இன்று ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Raja, Kanimozhi, and All Accused in 2G Scam Case Acquitted by CBI Court. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X