அடுத்த 84 நாட்கள்.. Airtel சிம் இருக்கா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. இதுல ஏதாவது ஒன்ன ரீசார்ஜ் பண்ணுங்க!
ஏர்டெல் நிறுவனத்தில் ப்ரீபெய்ட் சிம் கார்டு வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் பெஸ்ட் ஆப்ஷன் வேண்டுமானால், அதில் கிடைக்கும் சலுகைகளை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் 10 ப்ரீபெய்ட் திட்டங்களின் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் கஸ்டமர்கள் ஆப்ஷனை எடுத்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ. 469 திட்ட விவரங்கள் (Airtel Rs 469 Plan Details): இது வாய்ஸ் ஒன்லி திட்டமாக இருக்கிறது. 84 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 900 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம், ப்ரீ ஹெலோ டியூன்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஏர்டெல் ரூ.548 திட்ட விவரங்கள் (Airtel Rs 548 Plan Details): இது லம்ப்-சம் டேட்டா திட்டமாக இருக்கிறது. ஆகவே, 84 நாட்கள் வேலிடிட்டிக்கு 7 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 900 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.899 திட்ட விவரங்கள் (Airtel Rs 899 Plan Details): 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.929 திட்ட விவரங்கள் (Airtel Rs 929 Plan Details): 90 நாட்கள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே ப்ரீ கன்டென்ட் சந்தா கிடைக்கிறது. அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் சந்தா கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.979 திட்ட விவரங்கள் (Airtel Rs 979 Plan Details): 84 நாட்கள் வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் உள்ளது.
ஏர்டெல் ரூ.1029 திட்ட விவரங்கள் (Airtel Rs 1029 Plan Details): 84 நாட்கள் வேலிடிட்டி, 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா கிடைக்கிறது. அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.1099 திட்ட விவரங்கள் (Airtel Rs 1099 Plan Details): 84 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் 4ஜி மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். அன்லிமிடட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா கொடுக்கப்படும்.
ஏர்டெல் ரூ.1199 திட்ட விவரங்கள் (Airtel Rs 1199 Plan Details): 84 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். அமேசான் பிரைம் லைட், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம், ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.1729 திட்ட விவரங்கள் (Airtel Rs 1729 Plan Details): 84 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஜியோஹாட்ஸ்டார், ஜீ5 பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.1798 திட்ட விவரங்கள் (Airtel Rs 1798 Plan Details): அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 3 ஜிபி டேட்டா கிடைக்கும். 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








