நிதானம்.. இந்த 2 iQOO போன்களையும் கண்ணை மூடிக்கிட்டு ஆர்டர் போட்றாதீங்க.. ரூ.5000 எக்ஸ்ட்ரா ஆகிடுச்சு!
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் "விலை உயர்வு" அலை இன்னும் ஓய்ந்தபாடில்லை. அனைத்து பிரிவுகளிலும் ஸ்மார்ட்போன்களின் விலை சீராக அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் பிளாக்ஷிப் போன்கள் அதிக விலை பிரிவுகளுக்கு சென்றதில் தொடங்கிய இந்த விலை உயர்வு, படிப்படியாக மிட்-ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் பிரிவுகளுக்கும் பரவி, தற்போது ஏற்கனவே உள்ள மாடல்களையும் பாதித்து வருகிறது (விலைகளை அதிகரித்து வருகிறது)
இந்த "மாற்றத்திற்கு" பின்னால் உள்ள ஒரு முக்கிய காரணி, மெமரி பாகங்களின் விலை உயர்வு ஆகும். ஏற்கனவே பல ஸ்மார்ட்போன்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய சுற்று விலை திருத்தங்கள் தூண்டப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஐக்யூ நிறுவனமானது அதன் 2 பிரபலமான ஸ்மார்ட்போன் மாடல்களின் விலைகளை திடீரென உயர்த்தி உள்ளது.

அதென்ன மாடல்கள்? ஐக்யூ நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலைகளை திருத்தியுள்ளது. அவைகள் ஐக்யூ 15ஆர் மற்றும் ஐக்யூ இஸட்11எக்ஸ் மாடல்கள் ஆகும். இந்த விலை உயர்வு ரூ.5,000 வரை செல்கிறது. இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக நீங்கள் அப்பர் மிட்ரேன்ஜ் பிரிவில் உள்ள ஐக்யூ 15ஆர் (iQOO 15R) மற்றும் பட்ஜெட் பிரிவில் உள்ள ஐக்யூ இஸட்11எக்ஸ் (iQOO Z11x) மாடலை வாங்க திட்டமிட்டு இருந்தால்.. உஷார்!
ஐக்யூ 15ஆர் பழைய விலை VS புதிய விலை:
8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்: முன்னதாக ரூ.44,999, இப்போது ரூ.46,999 - அதாவது ரூ.2,000 விலை உயர்வு.
12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்: முன்னதாக ரூ.47,999, இப்போது ரூ.50,999 - அதாவது ரூ.3,000 விலை உயர்வு.
12Gஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ்: முன்னதாக ரூ.52,999, இப்போது ரூ.57,999 - அதாவது ரூ.5,000 விலை உயர்வு.
ஐக்யூ இசட்11எக்ஸ் பழைய விலை VS புதிய விலை:
6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்: முன்னதாக ரூ.18,999, இப்போது ரூ.22,999 - அதாவது ரூ.4,000 விலை உயர்வு.
8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்: முன்னதாக ரூ.20,999, இப்போது ரூ.24,999 - அதாவது ரூ.4,000 விலை உயர்வு.
8Gஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்: முன்னதாக ரூ.22,999, இப்போது ரூ.26,999 - அதாவது ரூ.4,000 விலை உயர்வு.
OPINION - விலை உயர்த்தப்பட்ட ஐக்யூ 15ஆர், ஐக்யூ இஸட்11எக்ஸ் மாடல்களை இப்போதும் நம்பி வாங்கலாமா?
ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் - இன்னமும் செயல்திறனுக்கு முதலிடம் கொடுக்கும் ஒரு உயர் நடுத்தர வகை ஸ்மார்ட்போனாக தொடர்கிறது. சமீபத்திய விலை உயர்வுக்கு பிறகு இதன் ஆரம்ப விலை ரூ.46,999 ஆக உயர்ந்துள்ளது. இது ஒரு பிளாக்ஷிப் ரக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது ஒன்பிளஸ் 15ஆர் போன்ற போட்டியாளர்களை கூட செயல்திறனில் விஞ்சுகிறது. இதனால் கேமிங் மற்றும் அதிக வேலைப்பளு கொண்ட பணிகளுக்கு இது இன்னமும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்
மேலும் இந்த போன் அதன் பிரம்மாண்டமான 7,600mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிக்காகவும் தனித்து நிற்கிறது. மிதமான பயன்பாட்டில் இரண்டு நாட்கள் வரையிலும், அதிக அளவிலான பயன்பாட்டில் இது சுமார் ஒன்றரை நாட்கள் வரையிலும் இது எளிதாக நீடிக்கிறது. ஆனால் இதன் கேமரா அவுட்புட் ஆனது இயற்கையான வண்ணங்களை காட்டிலும் சற்று மாறுபட்டு உள்ளது.
மறுகையில் உள்ள ஐக்யூ இஸட்11எக்ஸ் ஸ்மார்ட்போன் அதன் பிரிவில் ஒரு திடமான செயல்திறன் தேர்வாக தொடர்கிறது. இது அன்றாட பயன்பாடு மற்றும் கேமிங்கிற்கு நம்பகமானது என ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட சிப்செட்டான டைமென்சிட்டி 7400 டர்போ மூலம் இயக்கப்படுகிறது. இதன் பிரம்மாண்டமான 7,200mAh பேட்டரியும் ஒரு தனித்துவமான அம்சமாகும்.


Click it and Unblock the Notifications








