Home
News

இனி ரூ.15,000 அனுப்ப புது ரூல்ஸ்.. பேங்க் அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு அதிரடி மாற்றம்.. RBI புது ரூல்ஸ்!

பேங்க் அக்கவுண்ட் வைத்து இருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் ஆர்பிஐ (RBI) என்கிற ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) ஆனது புதிய இ-மேண்டேட் விதிமுறைகளை (RBI e-mandate Norms) கொண்டுவந்துள்ளது. ரூ.15,000 பணத்தை அனுப்பும்போது இது பொருந்தும்.

இ-மேண்டேட் விதிமுறைகளின்படி யுபிஐ பேமெண்ட்கள் (UPI Payments), ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ரூமென்ட்கள் (Prepaid Payment Instruments) மற்றும் கார்டு பரிவர்த்தனைகள் (Card Transactions), உள்நாட்டு மற்றும் கிராஸ்-பார்டர் பரிவர்த்தனைகள் (Cross-border Transactions) செய்யப்பட உள்ளன. ஓடிபி கேட்கப்படும் பரிவர்த்தனைகளும் இந்த விதிகள் பொருந்தும்.

இனி ரூ.15,000 அனுப்ப புது ரூல்ஸ்.. பேங்க் அக்கவுண்ட் ஹோல்டர்களுக்கு!

இதன்படி பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து ரூ.15,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ஓடிபி (OTP) தேவைப்படாது. ஆட்டோ-டெபிட் முறையில் பணம் அனுப்பி வைக்கப்படும். வழக்கமாக பயன்படுத்தும் 4 டிஜிட் அல்லது 6 டிஜிட் பின் நம்பர்களை ஒருமுறை கொடுத்தால் மட்டுமே போதும், பணத்தை ஒரு பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து மற்றொரு பேங்க் அக்கவுண்ட்டுக்கு அனுப்பலாம்.

மேலும், இன்சூரன்ஸ் பிரீமியம் (Insurance Premiums), மியூச்சர் பண்ட் (Mutual Fund), கிரெடிட் கார்டு பில்கள் (Credit Card Bills) போன்ற பரிவர்த்தனைகளின் போது ரூ.15,000 முதல் ரூ.1 லட்சம் வரையில் ஏஎப்ஏ (AFA) என்று அழைக்கப்படும் கூடுதல் காரணி அங்கீகாரம் (Additional Factor Authentication) இல்லாமல் பணத்தை அனுப்பி கொள்ளலாம். ஆனால், இதில் ப்ரீ-டெபிட் அலெர்ட்கள் இருக்கும்.

அதேபோல போஸ்ட்-டெபிட் அலெர்ட்கள் இருக்கும். அதாவது, ஆட்டோ-டெபிட் முறையில் பணம் எடுக்கப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னதாக அக்கவுண்ட் வைத்து இருப்பவர்களுக்கு ப்ரீ-டெபிட் அலெர்ட் கொடுக்கப்பட வேண்டும். ஆகவே, பணம் எடுக்கப்பட இருப்பது முன்கூட்டியே தெரியப்படுத்தப்படும். அதேபோல எடுத்ததற்கு பிறகு போஸ்ட்-டெபிட் அலெர்ட் கொடுக்கப்படும்.

இதில் எவ்வளவு பணம், எந்த அக்கவுண்ட்டுக்கு சென்றது, தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்களும் கொடுக்கப்படும். இது ஆட்டோ டெபிட் பரிவர்த்தனைக்கு மட்டுமே பொருந்தும். இந்த இ-மேண்டேட் விதிமுறைகளின்படி பேங்க் பரிவர்த்தனைகளை செய்து கொள்ள கஸ்டமர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. ஆகவே, பேங்குகள் இதற்கு கட்டணம் விதிக்காது.

இந்த விதிமுறைகள் மட்டுமல்லாமல், முன்னதாகவே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஆனது ரூ.10,000 மேல் டிஜிட்டலாக பணத்தை அனுப்பும்போது, 1 மணி நேர இடைநிறுத்த விதிகளை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதாவது, ரூ.10,000 மேல் பணத்தை அனுப்பும்போது அனுப்பியவரின் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து உடனடியாக டெபிட் செய்யப்பட்டுவிடும்.

ஆனால், பணத்தை பெற வேண்டிய நபருக்கு உடனடியாக செல்லாது. 1 மணி நேர இடைநிறுத்தம் செய்யப்பட்டுவிடும். இந்த நேரத்தில் பணத்தை அனுப்பியவர் பரிவர்த்தனையை சரிபார்ப்பு செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் கேன்சல் செய்து கொள்ளலாம். இப்படி கேன்சல் செய்தால், பெற வேண்டியவருக்கு பணம் செல்லாமலேயே மீண்டும் திரும்பப் பெறப்பட்டுவிடும்.

இருப்பினும், இது ஒட்டுமொத்த பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தாது. அதாவது, தனிநபர்களிடம் இருந்து தனிநபர்களுக்கு செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். தனிநபர்களிடம் இருந்து வணிகர்களுக்கு செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது. ஆகவே, பில் செலுத்துல், பொருட்களை வாங்குதல் போன்ற வணிக ரீதியாக பரிவர்த்தனைகளுக்கு பொருந்தாது.

இதில் ஒயிட்லிஸ்ட் வழிகாட்டுதல்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன. அதாவது, தெரிந்த நபரின் அக்கவுண்ட விவரங்கள், மொபைல் நம்பர்கள் உள்ளிட்டவை ஒயிட்லிஸ்ட் செய்து கொள்ளலாம். இந்த லிஸ்ட்டில் இல்லாமல், புதிதாக தனிநபருக்கு பணத்தை அனுப்பும்போது மட்டுமே இந்த 1 மணி நேர இடைநிறுத்தம் செய்யப்பட இருக்கிறது. இப்படி பல்வேறு விதிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
RBI e-mandate Norms No OTP For up to Rs 15000 Bank Account Holders Need to Know This RBI Guidelines
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X