விடவே கூடாத சான்ஸ்.. ரூ.19000 வரை விலை குறைப்பு.. சர்ர்னு இறங்கிய Samsung Galaxy S26 சீரிஸ் விலை!
சாம்சங் இந்தியாவானது (Samsung India) சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எஸ்26 5ஜி சீரிஸ் (Samsung Galaxy S26 Series) ஸ்மார்ட்போன்களின் விலைகளை குறைத்துள்ளது. இந்த சீரிஸில் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்26 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்26 என மூன்று போன்கள் உள்ளன.
சுவாரஸ்யமாக இந்த சீரிஸின் கீழ் உள்ள ஹை-எண்ட் வேரியண்ட் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா மாடலின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அறிமுக விலைகளை வாடிக்கையாளர்கள் விரும்பாததால் சாம்சங் நிறுவனம் இந்த விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

நினைவூட்டும் வண்ணம் கேலக்ஸி எஸ்26 சீரிஸ் கடந்த பிப்ரவரி 2026 இல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்திலேயே, இந்த ஸ்மார்ட்போன்கள் விலைக்குறைப்பை பெற்றுள்ளது. சாம்சங் அதன் ஏ சீரிஸ் போன்களின் விலையை அதிகரித்து வரும் நிலையில், இந்த விலைக்குறைப்பு சற்றே முரண்பாடானதாக அமைந்துள்ளது. சரி வாருங்கள் கேலக்ஸி எஸ்26 சீரீஸின் புதுப்பிக்கப்பட்ட விலைகளை பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா 5ஜி:
12ஜிபி + 256ஜிபி - ரூ.1,39,999 (பழைய விலை) - ரூ.1,30,999 (புதிய விலை)
12ஜிபி + 512ஜிபி - ரூ.1,59,999 (பழைய விலை) - ரூ.1,50,999 (புதிய விலை)
16ஜிபி + 1டிபி - ரூ.1,89,999 (பழைய விலை) - ரூ.1,80,999 (புதிய விலை)
சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் 5ஜி:
12ஜிபி + 256ஜிபி - ரூ.1,19,999 (பழைய விலை) - ரூ.1,00,999 (புதிய விலை)
12ஜிபி + 512ஜிபி - ரூ.1,39,999 (பழைய விலை) - ரூ.1,20,999 (புதிய விலை)
சாம்சங் கேலக்ஸி எஸ்26 5ஜி:
12ஜிபி + 256ஜிபி - ரூ.87,999 (பழைய விலை) - ரூ.79,999 (புதிய விலை)
12ஜிபி + 512ஜிபி - ரூ.1,07,999 (பழைய விலை) - ரூ.99,999 (புதிய விலை)
மேற்கண்ட விலை குறைப்புகள் ஒருபக்கம் இருக்க, சில வேரியண்ட்டுகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகள் மூலம் ரூ.10,000 வரை உடனடி வங்கித் தள்ளுபடியும் அணுக கிடைக்கிறது. இதனால் நீங்கள் வாங்கும் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போனின் விலையை இன்னும் குறையும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ராவின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.9-இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) ஆல் இயக்கப்படுகிறது, இது CPU செயல்திறனில் 19% வரை, என்பியு வில் 39% மற்றும் ஜிபியு செயல்திறனில் 24% வரை கோரப்பட்ட ஆதாயங்களை வழங்குகிறது.
மேம்படுத்தப்பட்ட தெர்மல் இன்டர்பேஸ் பிளேஸ்மென்ட் உடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வெப்பர் சேம்பர் ஆனது வெப்பத்தை மிகவும் திறமையாக கலைக்க உதவுகிறது. இது கேமிங், மல்டிடாஸ்கிங் மற்றும் நீட்டிக்கப்பட்ட வீடியோ பதிவின் போது நிலையான செயல்திறனை உறுதி செய்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை, எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குவாட்-ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 2எக்ஸ் ஆப்டிகல் தர ஜூம் கொண்ட 200எம்பி வைட் ஆங்கிள் கேமரா, 50எம்பி அல்ட்ரா-வைட், 5எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி டெலிஃபோட்டோ (10எக்ஸ் ஆப்டிகல் தர ஜூம்) மற்றும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 10எம்பி டெலிஃபோட்டோ ஆகியவைகளை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 12எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட நைட்டோகிராஃபி வீடியோ மற்றும் ஹாரிசாண்டல் லாக் ஆப்ஷனுடன் மேம்படுத்தப்பட்ட சூப்பர் ஸ்டெடி மோட் போன்ற புதிய சேர்த்தல்கள் - லோ லைட் அல்லது ஹை-மோஷன் சூழ்நிலைகளில் கூட தெளிவான, நிலையான காட்சிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளன.
பேட்டரியை பொறுத்தவரை இது 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஆனால் வயர்டு சார்ஜிங் 60W ஆக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இணக்கமான அடாப்டரை பயன்படுத்தி சுமார் 30 நிமிடங்களில் 75% வரை சார்ஜ் செய்ய முடியும் என்று சாம்சங் கூறுகிறது. கூடவே இது வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேரையும் ஆதரிக்கிறது.


Click it and Unblock the Notifications








