ஏப்.21 வரை எந்த 4G, 5G போனும் வாங்கிடாதீங்க.. 6300mAh பேட்டரி உடன் 2 Redmi சிங்கக்குட்டி வருது!
ரெட்மி (Redmi) நிறுவனம், ஏப்ரல் 21 ஆம் தேதி அன்று இந்தியாவில் தனது ரெட்மி ஏ7 சீரிஸ் (Redmi A7 Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கான மைக்ரோசைட்கள், ஷாவ்மீயின் அதிகாரப்பூர்வ இணையதளம், அமேசான் இந்தியாவில் நேரலைக்கு வந்துள்ளன.
என்னென்ன மாடல்கள்? லைவ் ஆக உள்ள மைக்ரோசைட்களின் படி, ரெட்மி ஏ7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது இந்தியாவில் ஏப்ரல் 21, 2026 அன்று அறிமுகப்படுத்தப்படும். இந்த சீரீஸில் உள்ள மாடல்களின் சரியான எண்ணிக்கையையும், மாடல் பெயர்களையும் ரெட்மி நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஆனாலும் இதன் கீழ் இரண்டு ஸ்மார்ட்போன்கள் ஒரே நேரத்தில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டு வேரியண்ட்களும் இடம்பெறலாம். அதாவது ரெட்மி ஏ7 4ஜி மற்றும் ரெட்மி ஏ7 5ஜி மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது (இது உறுதிப்படுத்தப்படாத தகவல் ஆகும்)
ரெட்மி ஏ7 சீரீஸ் டிசைன், டிஸ்பிளே, கேமரா, சிப்செட், பேட்டரி: ரெட்மி தனது புதிய ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் "வடிவமைப்பில்" அதிக கவனம் செலுத்தி உள்ளது. இது பிரீமியம் "ராயல்" வடிவமைப்பையும், ஸ்லிம் டிசைனையும் கொண்டிருக்கும் என்று மைக்ரோசைட் தெரிவிக்கிறது, இது பட்ஜெட் பிரிவில் இவ்விரு ஸ்மார்ட்போன்களை தனித்து நிற்க உதவும்.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, ரெட்மி ஏ7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் 6.9-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த காம்பினேஷன் - மென்மையான விஷூவல்கள் மற்றும் என்ஹான்ஸ்டு மீடியா கன்சப்ஷனில் கவனம் செலுத்துவதை குறிக்கிறது.
ரெட்மி ஏ7 சீரிஸின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக - பேட்டரி செயல்திறன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்களில் 6300mAh பேட்டரி இருக்கும் என்று ரெட்மி நிறுவனம் உறுதி செய்துள்ளது, இது ஒரே சார்ஜில் நீண்ட நேரம் பயன்பாட்டை வழங்கும் என்று கூறப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இந்த சீரீஸில் 13-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் உட்பட டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு தரம் குறித்தும் ரெட்மி கூறுகிறது; அன்றாட பயன்பாட்டிற்கு இந்த ஸ்மார்ட்போன்கள் சிறந்த நீடித்துழைப்பு மற்றும் நம்பகத்தன்மையை வழங்கும் என்பதை குறிக்கிறது.
சிப்செட்டை பொறுத்தவரை ரெட்மி ஏ7 சீரிஸ் ஆக்டா-கோர் சிப்செட்டால் இயக்கப்படும், இருப்பினும் குறிப்பிட்ட சிப்செட் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. மென்பொருளை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3-இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பிடத்தக்க வகையில், ரெட்மி நான்கு வருட ஓஎஸ் அப்டேட்களையும் ஆறு வருட பாதுகாப்பு அப்டேட்களையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது, இது பட்ஜெட் பிரிவில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கும். கடைசியாக மற்றும் சுவாரசியமாக, இது ஹைப்பர் ஐலேண்ட் ஆதரவு உடன் வரும் - இது பயனர்கள் அறிவிப்புகளையும் முக்கிய தகவல்களையும் ஸ்க்ரீனின் மேற்பகுதியில் பார்க்க உதவுகிறது.
OPINION - ரெட்மி ஏ7 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு காத்திருப்பது பயனுள்ளதாக இருக்குமா? ஒரு பெரிய பேட்டரி, அதிக ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பி ளே மற்றும் விரிவான சாஃப்ட்வேர் ஆதரவுடன், ரெட்மி ஏ7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவில் ஒரு வலுவான போட்டியாளராக நிலைநிறுத்தப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஏப்ரல் 21 அன்று நடைபெறும் வெளியீட்டு நிகழ்வில் விலை அறிவிக்கப்பட்டவுடன் வாங்கலாமா வேண்டாமா என்கிற முடிவுக்கு "எளிமையாக" வரலாம்.


Click it and Unblock the Notifications








