Home
Gadgets

சைலன்ட் ஆக அறிமுகமான புது OnePlus Watch.. 16 நாள் பேட்டரி, IP69 ரேட்டிங், 2GB ரேம்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த வேகத்தில் அதே சீரிஸின் கீழ், அடுத்ததாக ஒன்பிளஸ் நோர்ட் 6 சிஇ மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் 6 சிஇ லைட் ஆகிய மாடல்களை வருகிற மே 7 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது

இந்நிலையில் ஒன்பிளஸ் வாட்ச் 4 (OnePlus Watch 4) மாடல் ஆனது அதிகாரப்பூர்வ வெளியீட்டு அறிவிப்புக்கு முன்னதாகவே, ஒன்பிளஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் "சைலன்ட்" ஆக வெளிவந்துள்ளது. மேலும் "கிட்டத்தட்ட" இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்சின் அனைத்து அம்சங்களுமே வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சைலன்ட் ஆக அறிமுகமான புது OnePlus Watch.. 16 நாள் பேட்டரி, IP69!

ஒன்பிளஸ் வாட்ச் 4 அம்சங்கள்:
- டைட்டானியம் அலாய் கேஸுடன் வருகிறது
- அளவீட்டில் 47.4 x 47.4 x 11 மிமீ உள்ளது
- எடையில் ஸ்ட்ராப் இல்லாமல் சுமார் 43 கிராம் (முந்தைய மாடலை விட சற்றே இலகுவானது)
- IP68, IP69, மற்றும் 5ATM ரேட்டிங்
- MIL-STD-810H சான்றிதழ்
- 466 x 466 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- சபையர் கிரிஸ்டல் ப்ரொடெக்ஷன்
- 1.5-இன்ச் LTPO OLED டிஸ்பிளே
- கடுமையான சூரிய ஒளியில் இந்த பேனல் 1,500 நிட்ஸ் ப்ரைட்னஸை எட்டும்
- ஆதரிக்கப்படும் ஸ்போர்ட்ஸ் நடவடிக்கைகளின் போது உச்சபட்ச பிரகாசம் 3,000 நிட்ஸ் வரை சென்றடையும்
- குவால்காமின் ஸ்னாப்டிராகன் W5 சிப்
- BES 2800 கோ-பிராசஸர்
- 2GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்
- 646mAh பேட்டரி
- ஸ்மார்ட் மோடில் ஐந்து நாட்கள் வரை பேட்டரி லைஃப்
- பவர் சேவர் மோடில் 16 நாட்கள் வரை பேட்டரி லைஃப்
- அதிக பயன்பாட்டின் கீழ் ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் மூன்று நாட்கள் வரை நீடிக்கும்
- சுமார் 75 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம்
- Wear OS 6-ஐ அடிப்படையாக கொண்ட OxygenOS Watch 8 ஓஎஸ் (கூகுளின் சமீபத்திய வியரபிள் ஓஎஸ் உடன் வரும் முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் இதுவாகும்)
- ஜெமினி மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் ஒருங்கிணைப்பு
- உடல்நலத்தைக் கண்காணிப்பதற்காக, இதயத் துடிப்பு கண்காணிப்பு, இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு, மணிக்கட்டு வெப்பநிலை கண்காணிப்பு, தூக்கப் பகுப்பாய்வு, கீழே விழுவதை கண்டறிதல் மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள்

ஒன்பிளஸ் வாட்ச் 4 விலை மற்றும் விற்பனை: ஒன்பிளஸ் நிறுவனம், ஒன்பிளஸ் வாட்ச் 4 மாடலுக்கான விலை அல்லது வெளியீட்டு காலக்கெடுவை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், உலகளவில் உதிரி பாகங்களின் விலை அதிகரித்து வருவதால், இதன் விலை முந்தைய மாடல்களை விட அதிகமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற சந்தைகளில் கிடைக்கும் தன்மை குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பிட்ட சந்தைகளில் இது மிட்நைட் டைட்டானியம் மற்றும் எவர்கிரீன் டைட்டானியம் கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

சமீபத்தில் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் 6 விலை மற்றும் விற்பனை: இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.38,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.41,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஃப்ரெஷ் மின்ட், பிட்ச் பிளாக் மற்றும் க்விக் சில்வர் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Silently Launched Its New Smartwatch OnePlus Watch 4 Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X