நின்றால் Paytm, நடந்தால் Paytm: இனி ரயில் டிக்கெட் புக் செய்யலாம், லைவ் டிராக் செய்யலாம்! சிம்பிள் டிப்ஸ்.!

|

டிஜிட்டல் பேமெண்ட் தளமான Paytm பயன்பாட்டில் தொடர்ந்து பல்வேறு புதுப்புது அம்சங்கள் பயனர்களின் தேவை அறிந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி பேடிஎம் பயன்பாட்டை பயனர்கள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், ரயிலின் நேரலை நிலைய சரிபார்க்கவும் பயன்படுத்தலாம்.

Paytm ரயில் டிக்கெட்

Paytm ரயில் டிக்கெட்

பேடிஎம் பயன்பாட்டை பயனர்கள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், ரயிலின் நேரலை நிலையை சரிபார்க்கவும் பயன்படுத்தலாம். Paytm UPI, Paytm Wallet, நெட்பேங்கிங், டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

டிஜிட்டல் கட்டண செயலி

டிஜிட்டல் கட்டண செயலி

இந்தியாவின் பிரதான டிஜிட்டல் கட்டண செயலிகளில் Paytm பயன்பாட்டுக்கு என பிரதான இடம் இருக்கிறது. இந்த பயன்பாடு தற்போது பயனர்களை இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) வழியாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. Paytm பயன்பாடானது பயனர்களை தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், நேரலை ரயில் நிலையை சரிபார்க்கவும் மற்றும் பிஎன்ஆர் எண்ணை கண்காணிக்கவும் உதவுகிறது.

புதிய PNR உறுதிப்படுத்தல்

புதிய PNR உறுதிப்படுத்தல்

கூடுதலாக, ஒரு புதிய PNR உறுதிப்படுத்தல் முன்கணிப்பு அம்சத்தையும் பேடிஎம் கொண்டிருக்கிறது. இந்த அம்சமானது பயனர்களின் டிக்கெட்டுகள் எந்தளவு உறுதிப்படுத்தப்படும் என்ற நிலையை தெரிவிக்கும். அதேபோல் ரயிலின் நேரலை நிலையையும் சரிபார்த்துக் கொள்ளலாம். அதாவது ரயில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

பணம் செலுத்தும் முறை

பணம் செலுத்தும் முறை

Paytm UPI, Paytm Wallet, நெட்பேங்கிங், டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயனர்களை Paytm அனுமதிக்கிறது. Paytm பயன்பாட்டின் மூலம் பயனர்கள் ரயில் டிக்கெட்டுகளை எப்படி முன்பதிவு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

Paytm இல் ரயில் டிக்கெட்டுகளை எப்படி முன்பதிவு செய்வது?

Paytm இல் ரயில் டிக்கெட்டுகளை எப்படி முன்பதிவு செய்வது?

Paytm பயன்பாட்டின் மூலம் ரயில் டிக்கெட்டுகளை எப்படி முன்பதிவு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

முதலில் Paytm இணையதளத்தை ஓபன் செய்து கொள்ளவும். இந்த லிங்க்கை கிளிக் செய்தும் உள்நுழையலாம் Tickets PayTM

இதில் பயணம் செய்யும் இடம் மற்றும் சேருமிடம் குறித்த விவரத்தை பதிவிடவும்.

எளிய வழிமுறைகள்

தற்போது "Search" என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

இதில் உங்கள் ரயிலை தேர்ந்தெடுத்து இருக்கையின் இருப்பை சரிபார்க்கவும்.

விரும்பிய இருக்கைகள், கிளாஸ் மற்றும் பயணத் தேதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

"புக்" என்ற பட்டனை கிளிக் செய்து IRCTC உள்நுழைவு ஐடியை பதிவிட வேண்டும்.

புக் என்பதை கிளிக் செய்யவும்

இதில் காட்டப்படும் படிவத்தை பூர்த்தி செய்து "புக்" என்ற பட்டனை கிளி்க் செய்ய வேண்டும்.

இந்த வழிமுறைகள் முடிந்ததும், டெபிட்/கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது பேடிஎம் வாலட் ஆகியவற்றின் மூலம் டிக்கெட்டுக்கான பணத்தை செலுத்தலாம்.

பாஸ்வேர்ட் உள்ளிடுவதற்கு என IRCTC இணையதளத்துக்கு நீங்கள் அனுப்பப்படுவீர்கள்.

இதில் நீங்கள் பாஸ்வேர்ட்டை உள்ளிட்டால் டிக்கெட் புக்கிங் வழிமுறைகள் நிறைவடையும்.

பிரத்யேக அம்சம்

பிரத்யேக அம்சம்

பயனர்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட இமெயில் ஐடி, மொபைல் எண்ணில் கட்டணம் மற்றும் டிக்கெட் நிலை தன்மையை பெறுவார்கள்.

அதேபோல் ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால், Paytm பயனர்களுக்கு 24×7 ஆதரவுடன் கூடிய கஸ்டமர் கேர் எண் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த எண் ஆனது 10க்கும் மேற்பட்ட மொழிகளின் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

மேலும் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மூத்த குடிமக்கள் மற்றும் பெண்களுக்கு என வெவ்வேறு ஒதுக்கீட்டின் கீழ் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது.

Best Mobiles in India

English summary
Paytm Users Get Ready: How to Book Train Ticket and Track Live Status?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X