சத்தமில்லாமல் சீக்ரெட்டாக OnePlus செய்யும் வேலை.! OnePlus Pad இந்தியால தான் இருக்கு.!

|

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் புதிதாக அதனுடைய ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட் டிவைஸ் வரிசையில், புது டேப்லெட் (Tablet) மாடலை அறிமுகம் செய்யப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவல் பற்றி இதற்கு முன்பு நாமும் சில செய்திகளைப் பார்த்திருக்கிறோம்.

இப்பொழுது, புதிதாக வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி, OnePlus நிறுவனம் அதனுடைய புது டேப்லட் சாதனத்தை இந்தியாவில் மறைமுகமாகச் சோதனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சத்தமில்லாமல் சீக்ரெட்டாக OnePlus செய்யும் வேலை.! OnePlus Pad ரெடியா?

Oneplus நிறுவனத்தின் புதிய டேப்லட் சாதனம் ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) அல்லது ஒன்பிளஸ் டேப் (OnePlus Tab) என்ற உன் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய டேப்லட் சாதனத்தை நிறுவனம் பிரைவேட் டெஸ்டிங் செட்டாருக்குள் கொண்டு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வந்துள்ளது.

இதன் மூலம் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம், இப்பொழுது அதனுடைய போட்டியாளர்களான ரியல்மீ (Realme), ஓப்போ (Oppo), ரெட்மி (Redmi), சியோமி (Xiaomi) போன்ற நிறுவனங்களுடன் நேரடி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நிறுவனங்கள் அனைத்துமே, ஏற்கனவே அதனுடைய போர்ட்ஃபோலியோவில் டேப்லட் சாதனைகளைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், OnePlus நிறுவனம் இப்போது தான் முதல் முறையாக அதனுடைய போர்ட்ஃபோலியோ வரிசையில் டேப்லட் சாதனத்தைச் சேர்க்க உள்ளது. பெரிய டிஸ்ப்ளே கொண்ட சாதனங்களுக்கு இந்தியா சந்தையில் புதிய வரவேற்பு ஏற்பட்டுள்ள காரணத்தினால், இந்த சாதனம் விரைவில் இந்தியச் சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் ரிவீஸ் (Reeves) என்ற மறைமுகமான பெயரைக் கொண்டு டெஸ்டிங் செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சத்தமில்லாமல் சீக்ரெட்டாக OnePlus செய்யும் வேலை.! OnePlus Pad ரெடியா?

இந்தியாவிற்குள் இந்த சாதனம் ஏரிஸ் (Aries) என்ற பெயரில் பிரைவேட் டெஸ்டிங் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த டெஸ்டிங் இப்பொழுது இந்தியாவில் நடைபெறும் காரணத்தினால் - இந்த சாதனத்திற்கான அறிமுகம் இன்னும் வெகு தொலைவில் இல்லை என்பது உறுதியாகிறது. நம்முடைய கணிப்பின்படி, ஒன்பிளஸ் நிறுவனம் அதனுடைய ஒன்பிளஸ் டேப் அல்லது ஒன்பிளஸ் பேட் என்ற சாதனத்தை மிக விரைவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் மற்றொரு கூட்டாளரான ஒப்போ நிறுவனம் சமீபத்தில் அவருடைய புதிய டேப்லட் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. இந்த சாதனத்தை Oppo நிறுவனம் ஒப்போ பேட் ஏர் என்று அழைத்தது. இது இந்திய மதிப்பில் ரூபாய் 20000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 7.1' இன்ச் கொண்ட ஐபிஎஸ் எல்.சி.டி டிஸ்பிளே வழங்கப்பட்டது. இந்த டேப்லெட் டிவைஸ் 7100mah கொண்ட மிகப்பெரிய பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்சட்டுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

இதே போன்ற அம்சங்களுடன் ஒன் பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் ஒன்பிளஸ் பேட் சாதனமும் அறிமுகம் செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. OnePlus Pad பற்றிய தகவல்கள் வெகு வேகமாக இந்தியாவிற்குள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. OnePlus நிறுவனம் சில தினங்களுக்கு முன்னால், அதனுடைய OnePlus 11 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship smartphone) சாதனத்தை சீனா ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
OnePlus Pad Goes On Private Testing In India With Secret Codename Aries

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X