ரூ.1000 ரூ.2000 இல்ல.. 6000mAh பேட்டரி கொண்ட இந்த OnePlus போன் மீது முழுசா ரூ.6000 விலை குறைப்பு!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T), இந்த 2026 மார்ச் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற சூழ்நிலையில், அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது 6000mAh பேட்டரி கொண்ட ஒன்பிளஸ் மாடல் மீது ரூ.6000 நேரடி விலை குறைப்பை வழங்கி வருகிறது.
அது ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் தற்போது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.6000 நேரடி விலைக்குறைப்பை பெற்று ரூ.63,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இதே ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,999 க்கு இந்தியாவில் அறிமுகமானது.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160 ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி பிடபுள்யூஎம் டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி பேனலை கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ்ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 1/1.4-இன்ச் சோனி எல்ஒய்டி-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார் உடனான 50எம்பி கேமரா + 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது
முன்பக்கத்தில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது எப்/2.4 அபெர்க்ஷர் உடன் வருகிர்து. இதனால் 4கே வரையிலான 30எஃப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்கை செய்ய முடியும். பேட்டரியை பொறுத்தவரை 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்கள்: இது இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டுள்ளது. மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 + ஐபி69 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. இது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 4-மைக்ரோஃபோன்கள், யூஎஸ்பி டைப்-சி போர்ட், டால்பி அட்மோஸ் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
VERDICT: முன்னரே குறிப்பிட்டபடி ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது இந்த மார்ச் மாதத்திற்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முதலில் சீனாவில் தான் அறிமுகமாகும், பின்னர் சில வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து இந்தியாவில் ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) ஆக வரும்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த அடுத்த பிளாக்ஷிப் மாடலை காத்திருந்து வாங்கும் அளவிற்கு உங்களுக்கு பொறுமை இல்லை என்றால், அதே சமயம் இப்போது வரையிலாக கொஞ்சம் கூட விலை குறைப்பையே காணாமல் "அதே" ரூ.79,999 க்கு விற்பனையாகும் ஒன்பிளஸ் 15 மாடலை வாங்கும் அளவிற்கு உங்களிடம் பட்ஜெட் இல்லை என்றால் - நீங்கள் தாராளமாக ஒன்பிளஸ் 13 மாடலின் மீதான இந்த ரூ.6000 விலை குறைப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








