Home
Mobile

பழைய OnePlus போன்களுக்கு கும்பிடு.. VIVO மற்றும் iQOO கூட்டணியில் புதிய 2K போன்.. எந்த மாடல்?

இந்தியாவில் மட்டுமல்ல சீனாவிலும் கூட ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்திற்கு இருக்கும் முக்கியமான மற்றும் மிகப்பெரிய எதிரி ஐக்யூ (iQOO) நிறுவனம் தான். இந்நிறுவனம் ஒன்பிளஸ் 13 க்கு ஆப்பு வைக்கும்படியான விலையில் ஐக்யூ 13 மாடலை வெளியிட்டது. அதேபோல ஒன்பிளஸ் 15 க்கு வெடி வைக்கும் படியான அம்சங்களுடன் ஐக்யூ 15 மாடலையும் வெளியிட்டது.

போதாக்குறைக்கு ஒன்பிளஸ் நோர்ட் சீரீஸ்-க்கு எதிராக பல பட்ஜெட்-விலை மாடல்களையும் இறக்கியது; இறக்கி கொண்டே இருக்கிறது. இப்படி ஏற்கனவே "முட்டலும் மோதலுமாக" போய் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பழைய ஒன்பிளஸ் மாடல்களுக்கு மட்டுமின்றி, விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள (ஒன்பிளஸ் 15டி, ஒன்பிளஸ் 16) மாடலுக்கும் சேர்த்து "சிக்கலை உண்டாக்கும்" ஒரு புதிய "2K டிஸ்பிளே போன்" அறிமுகம் செய்யப்பட உள்ளது.

பழைய OnePlus போன்களுக்கு கும்பிடு.. iQOO புதிய 2K போன்!

அது ஐக்யூ 16 (iQOO 16) ஸ்மார்ட்போன் ஆகும். விவோவும் அதன் துணை நிறுவனமான ஐக்யூவும், தங்களுடைய நெக்ஸ்ட் ஜெனரேஷன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கும் "ஒரே உத்தியை" பயன்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது நாம் இங்கே பேசுவது விவோ எக்ஸ்500 சீரீஸ் மற்றும் ஐக்யூ 16 மாடல்களை பற்றித்தான்.

நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான ஸ்மார்ட் பிக்காச்சு வழியாக கிடைத்துள்ள விவரங்களின்படி, பெரும்பாலான நிறுவனங்களின் (ஒன்பிளஸ் உட்பட) நெக்ஸ்ட் ஜெனரேஷன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் 1.5K டிஸ்பிளேக்களுக்கு மாறி வரும் நிலையில், ஐக்யூ நிறுவனம் அதன் ஐக்யூ 16 ஸ்மார்ட்போனின் 2கே டிஸ்பிளேவை பேக் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 விவோ மாடல்களும் கூட இதே டிஸ்பிளே கொண்டு சோதனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இடத்தில் - சமீபத்தில் வெளியான ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனை பற்றிய லீக்ஸ் எல்லாமே 1.5கே டிஸ்பிளேவைத்தான் பரிந்துரைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் 15 மாடலிலும் கூட 1.5கே டிஸ்பிளே தான் உள்ளது. ஆக ஐக்யூ நிறுவனம் ஆனது "பழைய" ஒன்பிளஸ் 15 க்கு மட்டுமின்றி வரப்போகும் ஒன்பிளஸ் 15டி, ஒன்பிளஸ் 16 மாடல்களுக்கும் - இப்போதே குடைச்சல் கொடுக்க தொடங்கி விட்டது.

சில உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் ஐக்யூ 16 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது 165Hz ரெஃப்ரெஷ் ரட்டிற்கு மேம்படுத்தப்படலாம் என்று கூறுகின்றன. இதுதவிர்த்து ஐக்யூ 16 ஸ்மார்ட்போனை பற்றி மற்ற எந்த தகவல்களும் இல்லை பெரும்பாலும் இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். ஐக்யூ 15 மாடலை போலவே பெரிய பேட்டரியைக் கொண்டிருக்கலாம்

ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் வரவிருக்கும் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் இமேஜிங், டிசைன் மற்றும் பிற ஹார்ட்வேர் விவரங்கள் குறித்து சில குறிப்புகளை வழங்கியுள்ளார்.

ஒன்பிளஸ் சீனாவின் தலைவர் லி ஜீ லுயுஸ் (Li Jie Louis), ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு புதிய LUMO பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸுடன் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். லியின் கூற்றுப்படி, இந்த மேம்படுத்தப்பட்ட சென்சார் ஆனது மேம்படுத்தப்பட்ட நீண்ட தூர புகைப்படங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட போர்ட்ரெயிட் காட்சிகளை வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது காம்பாக்ட் ஆக மட்டுமின்றி மெலிதான மற்றும் இலகுரக வடிவமைப்பையும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் நான்கு பக்கங்களிலும் வெறும் 1.xx மிமீ அளவுள்ள மிகக்குறுகிய பெசல்கள் இருப்பதாக ஒன்பிளஸ் நிர்வாகி கூறுகிறார்.

ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் பேட்டரி திறனை அவர் வெளியிடவில்லை, ஆனால் சில வெய்போ பதிவுகள் - இதன் பேட்டரி "மற்ற ஸ்மால் ஸ்க்ரீன் ஸ்மார்ட்போன்களை விட மிக நீண்ட காலம் நீடிக்கும்" என்பதை எடுத்துக்காட்டுகின்றன. அறிமுகத்தை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது இந்த மாத இறுதிக்குள் சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Upcoming OnePlus 16 gets Competition Now Itself iQOO 16 Reportedly to get 2K Display
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X