அடிச்சு நொறுக்குது ஆர்டர்.. ரூ.7000 டிஸ்கவுண்ட்.. 80W சார்ஜிங், 6000mAh பேட்டரி கொண்ட OnePlus 5ஜி போன்!
5ஜி ஆதரவு, 80W பாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி உட்பட பல முக்கிய அம்சங்களை கொண்ட, பிரபலமான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன், இப்போது ரூ.7000 டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஆபர், பிரபல இ-காமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியாவில் (Amazon India) கிடைக்கிறது.
அது ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) மாடல் ஆகும். இது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடந்து வரும் அமேசான் எலெக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் (Amazon Electronics Premier League) என்கிற சிறப்பு விற்பனையின் கீழ் அட்டகாசமான ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பிட்ட சிறப்பு விற்பனையானது மார்ச் 12 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் 13ஆர் ஆபர் விவரங்கள்: நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.44,999 என்கிற தொடக்க விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், நடந்து வரும் அமேசான் விற்பனையில் இது ரூ.39,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது ரூ.5,000 நேரடி விலைக்குறைப்பை பிரதிபலிக்கிறது.
இதோடு சேர்த்து கூடுதலாக, வாங்குபவர்கள் ரூ.2,000 வங்கி தள்ளுபடியையும் பெறலாம். இப்படியாக ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் மீது மொத்தம் ரூ.7000 டிஸ்கவுண்ட் கிடைக்கும். இதன் மூலம் ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் பைனல் ஆபர் ப்ரைஸை (Final Offer Price) ரூ.37,999 ஆக குறைக்க முடியும்.
ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1264 x 2780 பிக்சல்ஸ், 93.9% ஸ்க்ரீன்-டூ-பாடி, 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 4,500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் உடனான 6.78-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டை கொண்டுள்ளது, இது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை இது ஓஐஎஸ் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார் உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது
மீதமுள்ள கேமராக்களை பொறுத்தவரை இது 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது
லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஒன்பிளஸ் 15 இப்போது என்ன விலகி வாங்க கிடைக்கிறது? இந்தியாவில் இது ரூ.47,999 க்கு அறிமுகமானது. ஆனால் இன்னமும் இது அதே விலைக்கு தான் அமேசான் இந்தியா வழியாக வாங்க கிடைக்கிறது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83 இன்ச் அமோல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனை இயக்குவது குவால்காமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் ஆகும். இமேஜிங்கை பொறுத்தவரை ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் OIS ஆதரவு உடனான 50MP ப்ரைமரி சென்சார் மற்றும் 8MP அல்ட்ராவைடு கேமரா உள்ளது. முன்பக்கத்தில் ஆட்டோஃபோகஸுடன் 32MP செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செய்யப் 30fps மற்றும் 120fps இல் 4கே வீடியோ பதிவை ஆதரிக்கிறது.
ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 7400mAh என்கிற அளவிலான மிகப்பெரிய பேட்டரியை கொண்டுள்ளது. இது - இதுவரை எந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிலும் இல்லாத மிகப்பெரிய பேட்டரி கெப்பாசிட்டி ஆகும். இது 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் பைபாஸ் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது. கடைசியாக இது உயர்மட்ட IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்களையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








