Lenovo அறிமுகம் செய்த புதிய டேப்லெட்.. 10200mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? என்ன விலை?
லெனோவா நிறுவனம் தனது புதிய லெனோவா ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 (Lenovo Idea Tab Pro Gen 2) மாடலை பார்சிலோனாவில் நடந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் நகிழ்வில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
லெனோவா ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 அம்சங்கள் (Lenovo Idea Tab Pro Gen 2 specifications): 13-இன்ச் 3.5கே டால்பி விஷன் டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது இந்த புதிய டேப்லெட். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 99 சதவீதம் டிசிஐ-பி3 கலர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 பிராசஸர்(Qualcomm Snapdragon 8s Gen 4 processor) உடன் புதிய லெனோவா ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 மாடல் வெளிவந்துள்ளது. கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 835 ஜிபியு (Adreno 825 GPU) வசதியும் இந்த புதிய லெனோவா டேப்லெட் மாடலில் உள்ளது.
12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் புதிய லெனோவா ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த டேப்லெட் மாடலில் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு புதிய லெனோவா ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 மாடல் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13எம்பி ரியர் கேமரா உடன் லெனோவா ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த டேப்லெட் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அத்தசங்களும் இந்த சாதனத்தில் உள்ளன.
10200எம்ஏஎச் பேட்டரி உடன் லெனோவா ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த டேப்டெல் மாடலை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட ஜேபிஎஸ் குவாட் ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளது லெனோவா ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 மாடல். குறிப்பாக இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். அதேபோல் இந்த புதிய சாதனத்தில் மேம்பட்ட ஏஐ அம்சங்களும் உள்ளன.
லூனா கிரே, கிளவுட் கிரே மற்றும் ஜெல்லி மின்ட் நிறங்களில் இந்த டேப்லெட் மாடலை வாங்க முடியும். லெனோவா ஐடியா டேப் ப்ரோ ஜென் 2 மாடலின் விலை €549 (இந்திய மதிப்பில் ரூ.58,826). விரைவில் இந்த டேப்லெட் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications