Home
Mobile

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 7500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 165Hz டிஸ்பிளே.. SONY கேமரா.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளும்படியான பீச்சர்களுடன் ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துவிட்டன. ஆகவே, மார்ச் மாதத்திலேயே வெளியீடு இருக்க வாய்ப்புள்ளதால், ஒன்பிளஸ் பிரியர்கள் இப்போதே வெயிட்டிங் மோடில் காத்திருக்க தொடங்கிவிட்டனர்.

ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் வெளியான பிறகு ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. அதிக பேட்டரி மற்றும் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி டி சீரிஸ் மாடல்கள் இருக்கின்றன. இந்த ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போனும் அப்படித்தான். ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கொண்டு வெளியாக இருக்கிறது.

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே மிரளுது.. 7500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்!

மார்ச் மாதத்தில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஏற்ப முழு பீச்சர்களும் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கசிந்துவிட்டன. சோனி எல்ஒய்டி சென்சார் கேமரா, 7500mAh பேட்டரி, 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே மற்றும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களிலும் மிரளவிடும்படி இருக்கிறது.

ஒன்பிளஸ் 15டி அம்சங்கள் (OnePlus 15T Specifications): 6.32 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. பிளாட் டிஸ்பிளே டிசைன் கொடுக்கிறது. 1.5K ரெசொலூஷன், 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுத்து உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டை கொண்டுள்ளது. 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

50W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 100W வயர்டு சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7500mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. பெரிய பேட்டரியை கொடுத்தும், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொடுக்கப்பட்டு உள்ளது. 165fps கேமிங் அவுட்புட் கொடுப்பதால், கேமிங் பிரியர்களும் வெயிட்டிங் மோடில் உள்ளனர்.

இதுபோக 4.45 மில்லியன் அன்டுடு ஸ்கோர் கொடுத்துள்ளது. 7500mAh பேட்டரியுடன் 8.4 எம்எம் தடிமன் உள்ளது. 194 கிராம் எடை கொண்டுள்ளது. சோனி எல்ஒய்டி700 (Sony LYT700) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) கிடைக்கிறது.

டெலிபோட்டோ கேமராவில் 3.5X இன்-சென்சார் ஜூமிங் கிடைத்து உள்ளது. இந்த ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் 32 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பீச்சர்களே டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக தெரிய வந்துள்ளது. பட்ஜெட் விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், சீன மார்கெட்டில் முதலில் வெளியாக இருப்பது உறுதியாகும்.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரியை கொண்ட ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,805ஆக இருக்கிறது. இது சீன மார்கெட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையாக உள்ளது. இதே ஸ்மார்ட்போன் குளோபல் மார்கெட்டில் ஒன்பிளஸ் 13எஸ் மாடலாக களமிறங்கியது. இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது. இங்கு ரூ.54,999 விலைக்கு கிடைக்கிறது.

ஆகவே, சீன மார்கெட்டில் ஒன்பிளஸ் 15டி மாடலை ரூ.45,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். இந்தியாவில் ரூ.60,000 பட்ஜெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது. சீன மார்கெட்டில் மார்ச் மாதம் வெளியானால், இந்தியாவில் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாக வாய்ப்புள்ளது. சீனாவின் வெளியீட்டை பொறுத்தே குளோபல் வெளியீடு உறுதி செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
OnePlus 15T With 7500mAh Battery 50MP Camera 16GB RAM Full Specifications Leaked Ahead of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X