மொத்த சாம்ராஜ்யமே மிரளுது.. 7500mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. IP69K ரேட்டிங்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மிட்-ரேஞ்ச் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டு வைத்துள்ள ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) ஸ்மார்ட்போனின் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த பிரீமியம் ரேட்டிங்கும் இந்த ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்க உள்ளது. பீச்சர்கள், வெளியீடு உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்ட்போன் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த ஏப்ரல் அல்லது மார்ச் மாதத்தில் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ப பீச்சர்கள் கசிந்து வருகின்றன. இப்போது, அதிகாரப்பூர்வமாக வாட்டர் ரெசிஸ்டன்ட் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதை ஒன்பிளஸ் நிறுவனத்தின் சீன தலைவர் லி ஜீ உறுசி செய்துள்ளார். IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்க இருக்கிறது. மேலும், IP69K ரேட்டிங் கொண்ட மாடலாகவும் இந்த ஒன்பிளஸ் 15டி இருக்கப் போகிறது. இந்த ரேட்டிங்குடன் ஒரு சில மாடல்கள் மட்டுமே மார்கெட்டில் கிடைக்கின்றன.
ஆகவே, ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. முன்னதாக மார்கெட்டில் கசிந்த பீச்சர்களே ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டையும் மிரள வைத்தது. அதாவது, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7500mAh பேட்டரி, 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே போன்ற பீச்சர்களுடன் இது களமிறங்க இருக்கிறது.
ஒன்பிளஸ் 15டி அம்சங்கள் (OnePlus 15T Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Octa Core Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்டை இந்த ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் கொடுக்க உள்ளது. 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி மெமரியை கொடுக்க இருக்கிறது. 6.32 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க உள்ளது. 1.5K ரெசொலூஷன் வர உள்ளது.
100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7500mAh பேட்டரியை எதிர்பார்க்கலாம். 200 எம்பி அல்லது 50 எம்பி மெயின் கேமரா கிடைக்க உள்ளது. மேலும் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்க உள்ளது. அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிண்ட் சென்சார் வருகிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் மற்ற பீச்சர்கள் மற்றும் விலையை பார்க்க ஒன்பிளஸ் 13டி மாடலை பார்க்க வேண்டும்.
ஒன்பிளஸ் 13டி அம்சங்கள் (OnePlus 13T Specifications): இதில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் கலர்ஓஸ் 15 (ColorOS 15) கிடைக்கிறது. ஆகவே, ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) எதிர்பார்க்கலாம். குளோபல் மார்கெட்டில் ஓர்ஜின்ஓஎஸ் கிடைக்கும். 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.
ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனிலும் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் உறுதியாகும். மெயின் கேமராவில் அப்கிரேட்டட் சென்சார் கிடைக்கலாம். ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ உள்ளது. இந்த ஒன்பிளஸ் 13டி மாடலின் ஆரம்ப விலை ரூ.39,805ஆக உள்ளது. ரூ.45,000 பட்ஜெட்டில் ஒன்பிளஸ் 15டி கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications








