இருக்கு சம்பவம் கண்டிப்பா இருக்கு.! OnePlus ரிலீஸ் செய்யும் புது டிவைஸால் பெரிய சம்பவமே இருக்கு.!

|

இந்தியாவில் மிகப் பெரிய சம்பவத்தைச் செய்ய ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தயாராகி வருகிறது. உண்மையை சொல்லப் போனால், இந்த முறை நிறுவனம் ஒரே ஒரு சம்பவத்தைச் செய்யப் போவதில்லை, வழக்கத்திற்கு மாறாக நிறுவனம் இந்த முறை ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 5 புதிய டிவைஸ்களை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்து, மிகப் பெரிய சம்பவத்தைச் செய்யவுள்ளது.

இதனால், ஒரே நேரத்தில் ஒன்பிளஸ் இந்த மாதம் வெவ்வேறு பிரிவுகளில் போட்டியிடவுள்ளது. சரி வாருங்கள், நிறுவனம் இப்போது எந்த டிவைஸை அறிமுகம் செய்யப்போகிறது? இதில் எந்த டிவைஸை மக்கள் அதிகமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்? என்பதைப் பற்றி தெளிவாகப் பார்க்கலாம். ஒன்பிளஸ் நிறுவனம் வரும் பிப்ரவரி 7ம் தேதி, இந்தியாவில் அதன் கிளவுட் 11 (Cloud 11) நிகழ்வை நிகழ்த்த திட்டமிட்டுள்ளது.

OnePlus ரிலீஸ் செய்யும் புது டிவைஸால் மிகப் பெரிய சம்பவமே இருக்கு.!

OnePlus என்னென்ன டிவைஸ்களை அறிமுகம் செய்கிறது?

ஸ்மார்ட்போன் பிரிவில், நிறுவனம் அதனுடைய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship smartphone) மாடலான ஒன்பிளஸ் 11 (OnePlus 11) சாதனத்தை வெளியிடுகிறது. பட்ஜெட் ஸ்மார்ட்போன் (Budget smartphone) பிரிவில் ஒன்பிளஸ் 11R (OnePlus 11R) சாதனத்தை நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. மற்ற பிரிவுகளை பற்றிப் பார்க்கையில், நிறுவனம் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 (OnePlus Buds Pro 2) இயர்பட்ஸ் சாதனம், புது ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி (OnePlus Smart TV) மாடலை அறிமுகம் செய்கிறது.

இத்துடன், முதல் முறையாக ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து வெளிவரும் புது ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) என்ற டேப்லெட் சாதனத்தையும் நிறுவனம் இந்த அறிமுக நிகழ்வில் அறிமுகம் செய்யவுள்ளது. ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் (OnePlus Earbuds), ஸ்மார்ட் டிவி போன்ற பிரிவுகளில் நிறுவனம் ஏற்கனவே பல சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளதால், OnePlus புதிதாக அறிமுகம் செய்யவுள்ள புதிய பிரிவு தான் டேப்லெட் கேட்டகிரியாகும்.

OnePlus ரிலீஸ் செய்யும் புது டிவைஸால் மிகப் பெரிய சம்பவமே இருக்கு.!

உலகளவில் புது ஹைப்பை உருவாக்கியுள்ள OnePlus Pad டிவைஸ்.!

OnePlus முதல் முறையாக இந்த பிரிவின் கீழ் OnePlus Pad சாதனத்தை அறிமுகம் செய்கிறது. எப்போதும், வழக்கமாக OnePlus ரசிகர்கள் OnePlus ஸ்மார்ட்போனிற்காக மிகவும் ஆர்வமாக காத்திருப்பார்கள். ஆனால், இந்த முறை ரசிகர்கள் புதிய ஒன்பிளஸ் பேட் சாதனத்திற்காக காத்திருக்கின்றனர். உலகளவில் இந்த புதிய சாதனம் மிகப்பெரிய ஹைப்பை உருவாக்கியுள்ளது. மக்கள் ஹைப்பை இன்னும் அதிகரிக்கும் விதமாக OnePlus இப்போது புதிய ட்வீட்டை வெளியிட்டுள்ளது.

இதில் வரவிருக்கும் புதிய ஒன்பிளஸ் பேட் டிவைஸின் புகைப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் டிவைஸின் பின்பக்க ஒற்றை கேமரா விருப்பம் தெளிவாக தெரிகிறது. இந்த புதிய ஒன்பிளஸ் பேட் சாதனத்தின் சில விபரங்களும், விலை விபரமும் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் அம்சங்கள் பற்றிப் பேசுகையில், ஒன்பிளஸ் பேட் சாதனம் 12.4' இன்ச் கொண்ட முழு HD+ OLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்.

OnePlus ரிலீஸ் செய்யும் புது டிவைஸால் மிகப் பெரிய சம்பவமே இருக்கு.!

OnePlus Pad விலை என்ன?

இந்த ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் மூலம் இயக்கப்படும். இந்த டிவைஸ் 6ஜிபி ரேம் உடன் வரும் என்று கூறப்படுகிறது. இதில் சுவாரசியம் என்னவென்றால், ஒன்பிளஸ் பேட் இரட்டை பின்புற கேமராவைக் கொண்டிருக்கும் என்று லீக் குறிப்பிடுகிறது. இதில் 13MP + 5MP சென்சார் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், நிறுவனம் வெளியிட்டுள்ள டீசர் புகைப்படத்தில் ஒற்றை கேமரா அமைப்பு இருப்பது போல தெரிகிறது.

இதன் முன்பக்கத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்பிற்கு 8MP முன் கேமரா இருக்கும். OnePlus Pad ஆனது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 10,090 mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும். ஒன்பிளஸ் பேட் சாதனம் ஆண்ட்ராய்டு 12L அவுட் ஆப் தி பாக்ஸ் (Android 12L Out of the box) உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் விலை பற்றி பார்க்கையில், இது ரூ.20,000 விலை புள்ளியில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய OnePlus Pad சாதனம் பற்றிய உங்களுடைய கருத்து என்ன என்பதை, எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus Pad Confirmed To Get Launch in Cloud 11 Event in India On February 7th

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X