OnePlus Nord N300 டிவைஸ் அடுத்த மாதம் அறிமுகமா? இது பட்ஜெட் 5ஜி போனா?

|

ஒன்பிளஸ் அதன் பட்ஜெட் சார்ந்த நோர்ட் தொடரின் கீழ் அடுத்த மாதம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

OnePlus Nord N300 எனப் பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், ஜூன் 2021 இல் வட அமெரிக்க சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus N200 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தலாக அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Nord N சீரிஸ் வரிசையில் N300 என்ற புது போனா?

Nord N சீரிஸ் வரிசையில் N300 என்ற புது போனா?

ஒன்பிளஸ் பொதுவாக Nord N சீரிஸ் ஸ்மார்ட்போன்களை தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் மட்டுமே அறிமுகப்படுத்துகிறது. அதேபோல், ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவிற்குக் கொண்டு வராமல் போகலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், நிறுவனம் இதே பெயரின் கீழ் இந்தியாவில் இந்த டிவைஸை அறிமுகம் செய்யாது. அதற்கு பதிலாக, வேறு பெயரில் நாட்டில் அறிமுகம் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

OnePlus Nord N300 என்ன விலையில் அறிமுகமாகும்?

OnePlus Nord N300 என்ன விலையில் அறிமுகமாகும்?

சமீபத்தில் வெளியான, The Verge தகவலின் படி, OnePlus Nord N300 ஆனது 33W பாஸ்ட் சார்ஜிங் (33W Fast Charging) அம்சத்துடன் $300 டாலருக்கும் குறைவான விலையைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் இது தோராயமாக ரூ.24,700 ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பல சீன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பாஸ்ட் சார்ஜ் அம்சத்தை வழங்கினாலும், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற ஸ்மார்ட்போன் சந்தைகளில் ஆப்பிள் (Apple) மற்றும் சாம்சங் (Samsung) ஆதிக்கம் செலுத்துகிறது.

இனி 3G / 4G போன் தயாரிக்க கூடாது.! ஒன்லி 5G போன் மட்டும் தானா? அரசு போட்ட கண்டிஷன்.!இனி 3G / 4G போன் தயாரிக்க கூடாது.! ஒன்லி 5G போன் மட்டும் தானா? அரசு போட்ட கண்டிஷன்.!

ரூ.10,000க்கு மேல் இருக்கும் மாடலில் காணப்படும் அம்சமா இது?

ரூ.10,000க்கு மேல் இருக்கும் மாடலில் காணப்படும் அம்சமா இது?

இந்த இரண்டு பிராண்டுகளும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் $300 டாலர் விலைக்கு மேல் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை வழங்குகின்றன.

இல்லையெனில், ஸ்மார்ட்போனில் சார்ஜ் செய்வதற்கான டைப்-சி போர்ட் இருக்கும் - கிட்டத்தட்ட எல்லா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் ரூ.10,000க்கு மேல் இருக்கும் மாடல்களில் காணப்படும் அம்சம் இதுவாகும். OnePlus Nord N300 ஆனது 90Hz டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus Nord 300 இல் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

OnePlus Nord 300 இல் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

விலை மலிவாக இருக்க AMOLED பேனலுக்குப் பதிலாக LCD டிஸ்ப்ளேவை இந்த டிவைஸ் கொண்டிருக்கலாம்.

வரவிருக்கும் Nord 300 மீடியாடெக் சிப்செட்டை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சரியான விவரம் தெளிவாக இல்லை.

நினைவுகூர, கடந்த Nord 200 ஆனது Snapdragon 480 சிப்செட் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது. கேமரா மற்றும் பேட்டரி பற்றிய தகவலும் தெளிவாக இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

OnePlus Nord CE 2 Lite 5G இந்திய மாடல் சிறப்பம்சம்

OnePlus Nord CE 2 Lite 5G இந்திய மாடல் சிறப்பம்சம்

OnePlus Nord 300 இன் வெளியீட்டை OnePlus இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். இந்தியாவில், OnePlus ஏற்கனவே 20,000 ரூபாய்க்குள் மலிவு விலையில் ஸ்மார்ட்போன்களை வழங்குகிறது. OnePlus Nord CE 2 Lite 5G இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரூ.599 விலையில் இப்படி ஒரு Redmi Writing Pad-ஆ.! இது டேப்லெட்டா இல்ல வேற மாதிரி டிவைஸா?ரூ.599 விலையில் இப்படி ஒரு Redmi Writing Pad-ஆ.! இது டேப்லெட்டா இல்ல வேற மாதிரி டிவைஸா?

Nord 300 மாடல் இந்தியா வருமா?

Nord 300 மாடல் இந்தியா வருமா?

இது Snapdragon 695 சிப்செட், 5000mAh பேட்டரி மற்றும் 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5G ஆதரவை ஆதரிக்கிறது. இருப்பினும், இது ஆடியோ மோட்களை கட்டுப்படுத்த உதவும் OnePlus அலெர்ட் ஸ்லைடரை இந்த போன் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ட்ரிபிள் கேமராஅமைப்புடன் வருகிறது. வரவிருக்கும் Nord 300 மாடல் இந்தியாவில் என்ன மாடலாக அறிமுகம் செய்யப்படும் என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord N300 Budget 5G Phone Launch Confirmed to Take Place in November

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X