போட்டான் பாரு சாம்சங்.. 5000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி (Samsung Galaxy A36 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 5000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஐஎஸ் கேமரா, அமோலெட் டிஸ்பிளே உள்ளிட்ட பீச்சர்களுடன் கிடைக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 5 சதவீத தள்ளுபடி போக 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. இந்த தள்ளுபடியுடன் ரூ.33,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே ரூ.31,999 விலைக்கு இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A36 5G Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 4என்எம் (Qualcomm Snapdragon 6 Gen 3 4nm) சிப்செட்டை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. மேலும், அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), சாம்சங் ஒன் யுஐ 7 (Samsung One UI 7) கிடைக்கிறது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) புரொடெக்சன் கொண்ட 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி மற்றும் அல்ட்ரா எச்டி 4கே (UHD 4K) வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு 8 எம்பி அல்ட்ரா வைடு + 5 எம்பி மேக்ரோ சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. 10 எக்ஸ் டிஜிட்டல் ஜூமிங் (Digital Zooming) மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) கொடுக்கப்பட்டு உள்ளது.
12 எம்பி செல்பீ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. IP67 ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரியை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி கொண்டுள்ளது.
இந்த பேட்டரியுடன் 7.4 எம்எம் தடிமன் மற்றும் 195 கிராம் எடை கொடுத்து உள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA / NSA), 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 802.11 ஏசி மற்றும் ப்ளூடூத் 5.4 கிடைக்கிறது. அவ்சம் பிளாக், அவ்சம் லைம், அவ்சம் லாவெண்டர் மற்றும் அவ்சம் ஒயிட் ஆகிய கலர்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








