Home
Mobile

யாரு சாமி அவன்.. 7025mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. SONY கேமரா.. புது OPPO போன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் (OPPO Find X9s) ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் ஒரே தேதியிலும் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன பீச்சர்களை எதிர்பார்க்கலாம்?

ஓப்போ நிறுவனத்தின் ஃபைண்ட் எக்ஸ் சீரிஸ் (Find X Series) மாடல்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. முன்னதாக ஓப்போ பைண்ட் எக்ஸ்9 (OPPO Find X9) மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ (OPPO Find X9 Pro) மாடல்கள் வெளியாகி விற்பனையிலும் பட்டையை கிளப்பின. இப்போது, ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ரெடியாகிவிட்டது.

யாரு சாமி அவன்.. 7025mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே!

சீன மார்கெட்டில் வெளியாக இருக்கும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது, குளோபல் மார்கெட்டில் வெளியாகும்போது, இந்தியாவிலும் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. இப்போது, கூடுதலாக ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனும் லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டது. ஆகவே, 2 மாடல்கள் வெளியாக இருக்கின்றன.

வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே நாளில் இந்தியாவிலும் வெளியாக வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கு ஏற்ப ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போனின் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், கேமரா மற்றும் டிஸ்பிளே பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த பீச்சர்கள் ஓப்போ பிரியர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் அம்சங்கள் (OPPO Find X9s Specifications): சோனி எல்ஒய்டி700 (SONY LYT700) சென்சார் + ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேலும், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொடுத்து உள்ளது.

டெலிபோட்டோ கேமராவுக்கு சாம்சங் ஜேஎன்3 (Samsung JN5) சென்சார் மற்றும் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது. 6.59 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை இந்த ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9எஸ் ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்து உள்ளது. வெறும் 1.15 எம்எம் அல்ட்ரா-தின் பெசல்களுடன் கிடைக்க இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் (Octa Core MediaTek Dimensity 9500s) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7025mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. மிட்-பிரீமியம் ஓப்போ மாடல்களில் கிடைக்கும் மெட்டல் மிடில் ஃபிரேம் (Metal Middle Frame) கொடுக்கப்பட்டு உள்ளது.

அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் (Ultrasonic In-display Fingerprint) கிடைக்கிறது. மேலும், IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுத்து உள்ளது. இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. இந்த பீச்சர்களுடன் இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். அதேபோல ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பீச்சர்களும் கசிந்துள்ளன.

இதில் 200 எம்பி மெயின் கேமரா + 200 எம்பி பெரிஸ்கோப் கேமரா கிடைக்கிறது. 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மேலும், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 7050mAh பேட்டரி கிடைக்கிறது. 6.78 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Find X9s With 7025mAh Battery 100W Fast Charging India Launch Soon Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X