OnePlus மடக்ககூடிய போல்டபில் போனை ரிலீஸ் செய்கிறதா? எப்போப்பா வெளியவிடுவீங்க.!

|

கடந்த சில வாரங்களில் எங்கு திரும்பினாலும் OnePlus பற்றிய செய்திகளை தான் நாம் அதிகமாக படிக்க முடிகிறது. இதற்கான முக்கிய காரணம், நிறுவனம் அதன் OnePlus 11 சாதனத்தை அடுத்த மாதம், அதாவது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்கிறது.

இதன் காரணமாகவே OnePlus சில தினங்களாகத் தலைப்பு செய்தியை எட்டிக்கொண்டிருந்தது. ஆனால், இப்போது புதிதாக OnePlus நிறுவனம் புதிதாக அதன் போர்ட்போலியோவில் போல்டபில் ஸ்மார்ட்போனை (OnePlus Foldable Smartphone) அறிமுகம் செய்யவுள்ளது என்ற தகவல் லீக் ஆகியுள்ளது. ஆம், OnePlus இடம் இருந்து வெளிவரப்போகும் முதல் மடக்ககூடிய போல்டபில் ஸ்மார்ட்போன் (Oneplus foldable phone) சாதனமாக இந்த டிவைஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus மடக்ககூடிய போல்டபில் போனை ரிலீஸ் செய்கிறதா? எப்போ வெளிவரும்?

சரி, இப்போது இந்த டிவைஸ் பற்றி நமக்கு என்ன தெரியும் என்பதை விளக்கமாக பார்க்கலாம். OnePlus நிறுவனம் பொங்கல் (Pongal) பண்டிகை நிறைவடைந்த இரண்டு வாரங்களில் அதன் புதிய OnePlus 11 ஸ்மார்ட்போன் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவிருக்கிறது. சரியாகச் சொன்னால், இந்த சாதனம் வரும் பிப்ரவரி 07, 2023 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கு முன் ஜனவரி 04, 2023 அன்று இந்த சாதனம் சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதுவரை நமக்கு தெரிந்த தகவல் இதுவாக மட்டுமே இருந்தது. ஆனால், இப்போது வெளியான தகவலில் OnePlus நிறுவனம் அதன் OnePlus 11 Pro மாடலை எப்போது அறிமுகம் செய்யுமென்ற தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன் சேர்த்து, நிறுவனம் அடுத்த ஆண்டில் புதிதாக அதன் போர்ட்போலியோவில் முதல் போல்டபில் OnePlus ஸ்மார்ட்போனை சேர்க்கும் என்றும் டெக் வட்டாரங்களில் தகவல் லீக் ஆகியுள்ளது.

OnePlus மடக்ககூடிய போல்டபில் போனை ரிலீஸ் செய்கிறதா? எப்போ வெளிவரும்?

ஒன்பிளஸ் 11 அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களில் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 11 ப்ரோ மற்றும் மடிக்கக்கூடிய ஒன்பிளஸ் போல்டபில் ஸ்மார்ட்போன் (foldable smartphone from OnePlus) மாடலை அறிமுகம் செய்யுமென்று ஆன்லைனில் சில தகவல்கள் இப்போது வைரல் ஆகியுள்ளது. டிப்ஸ்டர் யோகேஷ் பிராரின் (Yogesh Brar) கூற்றுப்படி, OnePlus 2023 இன் இரண்டாம் பாதியில் OnePlus 11 ப்ரோ மாடலை அறிமுகப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல், Oppo Find N2 பெற்ற நேர்மறையான வரவேற்பைப் பார்த்த பிறகு, OnePlus அதன் மடிக்கக்கூடிய போல்டபில் ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்ற லீக் ஐ நாசுக்காக வெளியிட்டிருக்கிறார். இருப்பினும், சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் அதன் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை (foldable smartphone) அடுத்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, இரண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றிய வேறு எந்த தகவலும் தற்போது கிடைக்கவில்லை. ஒன்பிளஸ் 11 ப்ரோ அடுத்த ஆண்டின் முதல் கால் ஆண்டிற்குள் சந்தைக்குள் வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், OnePlus நிறுவனம் அதன் முதல் போல்டபில் ஸ்மார்ட்போன் சாதனத்தை அடுத்த ஆண்டின் அரை ஆண்டிற்கு பிறகு அல்லது அடுத்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்யுமென்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், OnePlus நிறுவனம் வரவிருக்கும் OnePlus 11 ஸ்மார்ட்போனின் டீஸர் வீடியோவை வெளியிட்டது. வீடியோவில், நிறுவனம் Hasselblad-இயங்கும் பின்புற கேமரா இருப்பதை உறுதிப்படுத்தியது. வரவிருக்கும் OnePlus 11 ஸ்மார்ட்போனில் மிகவும் விரும்பப்படும் அலெர்ட் ஸ்லைடர் பட்டன் இருக்கும் என்பதையும் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. OnePlus இடம் இருந்து கிடைக்கும் முதல் போல்டபில் ஸ்மார்ட்போன் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு நாங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்.

Best Mobiles in India

English summary
OnePlus May Launch OnePlus 11 Pro and Foldable Smartphone By Next Year 2023

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X