OnePlus 11 டிவைஸில் இப்படி ஒரு சிக்கலா? ஆனாலும் ஒட்டு மொத்த காட்டுக்கு ராஜா OnePlus 11 தான்.!

|

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இறுதியாக அதனுடைய பிளாக் ஷிப் ஸ்மார்ட்போன் மாடலான ஒன்பிளஸ் 11 (OnePlus 11) சாதனத்தை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட் போன் சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் சிப்செட்டுடன், QHD+ கொண்ட 120Hz OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த சாதனம் 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது - இவை எல்லாம் இந்த ஸ்மார்ட்போனின் முக்கியமான சிறப்பம்சங்கள் ஆக இருக்கிறது.

OnePlus 11 டிவைஸில் இப்படி ஒரு சிக்கலா? ஆனாலும் ராஜா OnePlus 11 தான்.!

இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், ஒரே ஒரு தேர்வில் மட்டும் ஃபெயில் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி மிகவும் மோசமாக (Battery performance) உள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய ஒன்பிளஸ் 11 சாதனம் 5 மணி நேரம் மற்றும் 33 நிமிடங்கள் மட்டுமே ஸ்கிரீன்-ஆன்-டைம் (Screen-on-time) நேரத்தை வழங்கி உள்ளது. சீன டெக் ரிவியூவர் Xiaobai's டெக் ரிவியூ கூற்றின்படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்சட்டுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட் ஃபோன்களிலேயே இந்த சாதனம் தான் குறைந்த பேட்டரி பயன்பாட்டைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஏதேனும் சாஃப்ட்வேர் கோளாறால் ஏற்பட்டிருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. கடந்த ஐந்து மாதங்களில், அறிமுகம் செய்யப்பட்ட பலவிதமான ஸ்மார்ட்போன்களின் பேட்டரி ஆயுளுடன் (Smartphone battery life) இந்த புதிய ஒன்பிளஸ் 11 சாதனத்தின் பேட்டரி ஆயிலும் ஒப்பிடப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட முடிவில் OnePlus 11 பேட்டரி செக்மென்ட்டில் மட்டும் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி சோதனையின் பொழுது, ஒன்பிளஸ் 11 சாதனம் பலவிதமான பயன்பாட்டிற்கு உள்ளடக்கப்பட்டது - இதில் சமூக வலைத்தள சர்ஃபிங் (social media), வீடியோ (Video), மியூசிக் ஸ்ட்ரீமிங் (Music streaming), வீடியோ ரெக்கார்டிங் (Video recording), ஹெவி கிராபிக்ஸ் கொண்ட கேம்ஸ் (heavy graphic games) என்று பல கட்ட சோதனையின் முடிவில் ஒன்பிளஸ் 11 சாதனம் குறைந்த பேட்டரி பயன்பாட்டைக் கொண்டுள்ளதாக மதிப்பெண்கள் (OnePlus 11 Battery performance marks) வழங்கப்பட்டுள்ளது.

OnePlus 11 டிவைஸில் இப்படி ஒரு சிக்கலா? ஆனாலும் ராஜா OnePlus 11 தான்.!

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மியூசிக் ஸ்ட்ரீமிங் மற்றும் சோசியல் மீடியா ஸ்க்ரோலிங் போன்ற வேலைகளில் ஈடுபடும் போது அதிக நேர பேட்டரி சக்தியை விரைவாக காலி செய்தது கண்டறியப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 11 சாதனம் தனது 80 சதவீத பேட்டரி பயன்பாட்டை மிகவும் வேகமாக எடுத்துக் கொண்டது என்று டிப்ஸ்ட்டரின் ஆதாரங்கள் காண்பிக்கிறது. இது சமீபத்தில் வெளியான சியோமி 13 ப்ரோ (Xiaomi 13 Pro) சாதனத்தை விட குறைவானது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த ஸ்மார்ட் போன் சாதனத்தில் 5000mah கொண்ட பேட்டரி வழங்கப்பட்டிருந்தாலும், இதனுடைய ஆற்றல் ரெட்மி கே60 ப்ரோ (Redmi K60 Pro) போன்ற சாதனத்துடன் ஒப்பிடுவதைப் போன்று உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் சில மாடல்கள் உடன் ஒப்பிடும்போது ஒன்பிளஸ் 11 பேட்டரி மதிப்பெண்களில் மற்றும் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

ஆனால், இதற்கு முன்பு வெளியிடப்பட்ட AnTuTu மதிப்பெண்களின்படி உலக ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வரலாற்றிலேயே உயர் பர்பாமன்ஸ், சிறந்த டிஸ்ப்ளே, சிறந்த கேமிங் அனுபவம், சிறந்த யூஐ (UI) அனுபவம் என்று பல கட்டங்களில் அதிக மதிப்பெண்களைப் பெற்ற முதல் ஸ்மார்ட்போனாக OnePlus 11 இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பேட்டரி பிரிவில் மட்டும் ஒன்பிளஸ் இப்போது குறைந்த மதிப்பெண்களை ஸ்கோர் செய்துள்ளது.

இருப்பினும் ஒட்டுமொத்த ரேங்கிங் தரவரிசை பட்டியலில் OnePlus 11 முதலிடத்தில் உள்ளது. இந்த பேட்டரி பெர்ஃபார்மன்ஸ் சிக்கலை நிறுவனம் அடுத்த அப்டேட்டில் சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கோளாறு மட்டும் சரி செய்யப்பட்டால், ஆண்ட்ராய்டு போன்களிலேயே ஒன்பிளஸ் 11 சாதனம் மட்டும்தான் மிகச்சிறந்த ஸ்மார்ட்போனாக இடம் பிடிக்கும் என்று ஒட்டுமொத்த டெக் வட்டாரமும் தெரிவிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
OnePlus 11 Has Worst Battery Life But Still World's Best Android Device Ever Scored High On AnTuTu

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X