Home
Mobile

வந்துட்டான் மார்க்கெட் ராஜா.. 200MP சாம்சங் கேமரா, 100W சார்ஜிங், 7000mAh பேட்டரி.. OnePlus-ன் புது மினி போன்!

சின்ன கம்பெனிகள் தொடங்கி பெரிய கம்பெனிகள் வரை இந்த மார்ச் 2026 இல் தங்களுடைய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. அவைகளில் பல பிராண்டுகள் எந்தெந்த தேதிகளில் என்னென்ன ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளன என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தே விட்டன.

ஆனால் சில நிறுவனங்கள் இன்னமும் "சரியான" வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை என்றாலும் இந்த மார்ச் 2026 இல் புதிய ஸ்மார்ட்போனை வெளியிடுவதில் தீவிரமாக உள்ளன. அப்படிப்பட்ட நிறுவனங்களில் ஒன்று தான் - ஒன்பிளஸ் (OnePlus). இது இம்மாத இறுதிக்குள் அதன் அடுத்த "காம்பாக்ட் பிளாக்ஷிப்" அல்லது "மினி ஸ்மார்ட்போனை" அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

200MP சாம்சங் கேமரா, 7000mAh பேட்டரி.. OnePlus-ன் புது மினி போன்!

அது ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) ஸ்மார்ட்போனாகும். இது இந்த மாத இறுதிக்குள் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் சீனாவில் ஒன்பிளஸ் 15டி ஆக அறிமுகம் செய்யப்படும் மாடலானது, இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s) ஆக அறிமுகம் செய்யப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்

இதற்கிடையில் எந்தவொரு முறையான அறிவிப்புக்கும் முன்னதாக, சீன சமூக ஊடகங்களில் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் போஸ்டர் ஒன்று லீக் ஆகியுள்ளது. இது ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ போஸ்டர் என்றும் கூறப்படுகிறது; இது டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வழியாக எக்ஸ் தளத்திலும் பகிரப்பட்டுள்ளது)

குறிப்பிட்ட போஸ்டரின் வழியாக ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் பேக் பேனலை தெளிவாக பார்க்க முடிகிறது. மேல் மூலையில் சற்றே உயர்த்தப்பட்ட, செவ்வக வடிவிலான கேமரா ஐலேண்ட் உள்ளது. இது "குறைந்தபட்ச" ரியர் டிசைனை கொண்டிருக்கும் என்பதைக் குறிக்கிறது. கேமரா மாட்யூலுக்குள் செங்குத்தாக அமைக்கப்பட்ட டூயல் கேமரா செட்டப் உள்ளது; இடது பக்கத்தில் எல்இடி ஃபிளாஷ் உள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் 13டி (OnePlus 3T) ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது, ​​ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் லீக்டு போஸ்டர் ஆனது - ஒரு பெரிய மற்றும் முழுமையான மாற்றத்தை விட, பேக் பேனல் வடிவமைப்பில் நுட்பமான சுத்திகரிப்பை (Subtle refinement) மட்டுமே பெற்றுள்ளது

எப்போதும் போல, இந்த தகவலையும், வெளியான போஸ்டரையும் மேலோட்டமாக எடுத்துக்கொள்வது நல்லது. இதே போஸ்டர் அல்லது இதே ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்யும் வரையிலாக காத்திருப்பது நல்லது. ஒன்பிளஸ் 15டி டிசைன் தொடர்பான மற்ற லீக்ஸ்களை பொறுத்தவரை இது சுமார் 8.5 மிமீ தடிமன் கொண்டதாகவும், தோராயமாக 194 கிராம் எடையுள்ளதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 ரேட்டிங்களுடன் வரும் என்றும் கூறப்படுகிறது. கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை இது ரிலாக்சிங் மேட்சா, ஹீலிங் ஒயிட் சாக்லேட் மற்றும் ப்யூர் கோகோ ஆகிய 3 கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? சமீபத்திய அறிக்கைகளின்படி, ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.31-இன்ச் BOE X3 OLED LTPO டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவற்றையும் கொண்டிருக்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் மூலம் இயக்கப்படலாம். மேலும் LPDDR5x RAM மற்றும் UFS 4.1 ஸ்டோரேஜை பேக் செய்யலாம். கேமராக்களை பொறுத்தவரை இது 50-மெகாபிக்சல் சோனி IMX906 அல்லது 200-மெகாபிக்சல் சாம்சங் HP5 ப்ரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் சாம்சங் JN5 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸை கொண்டிருக்கலாம்.

முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். கடைசியாக இது வயர்லெஸ் சார்ஜிங் இல்லாமல் 100W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. விலையை பொறுத்தவரை, அதாவது இது இந்தியாவில் ஒன்பிளஸ் 15எஸ் ஆக அறிமுகம் செய்யப்படும் போது, இது ரூ.60,000 பட்ஜெட்டில் வரலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 13எஸ் ரூ.54,999 க்கு அறிமுகமானது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus 15T leaked poster revealed minimalist design change Launch Expected Before End of March 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X