OPPO மிரள விட்டாப்ல.. பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஓப்போ நிறுவனத்தின் ஓப்போ கே14 5ஜி (OPPO K14 5G) ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த வெளியீட்டுக்கு முன்னதாகவே கிட்டத்தட்ட முழு பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டு உள்ளன. பட்ஜெட்டில் வெளியாகும் மாடலாக இருந்தும், பீச்சர்களில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த பீச்சர்கள், வெளியீடு மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் வருகிற மார்ச் 9ஆம் தேதியன்று, இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. ஓப்போ கே14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு அடுத்த மாடலாக இருப்பதால், பட்ஜெட்டில் கிடைக்க இருப்பதும் தெரியவந்துள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு இருந்தது. இதிலேயே முழு பீச்சர்களும் இப்போது உறுதியாகி இருக்கிறது.

ஓப்போ கே14 5ஜி அம்சங்கள் (OPPO K14 5G Specifications): 7000mAh பேட்டரி மற்றும் 45W சூப்பர்வூக் ஃபிளாஷ் சார்ஜிங்கை (SUPERVOOC Flash Charging) இந்த ஓப்போ கே14 5ஜி மாடல் கொடுத்து உள்ளது. சூப்பர்கூல் விசி சிஸ்டம் (SuperCool VC System) கொடுக்கப்பட்டு உள்ளது. 30 நிமிடங்களில் 1 சதவீத சார்ஜ் முதல் 37 சதவீத சார்ஜ் வரையில் செய்து கொள்ளலாம்.
ஸ்டான்ட்பை மோடில் 40 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும். மேலும், ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் (Reverse Wired Charging) கொடுக்கப்பட்டு உள்ளது. 60 மாதங்களுக்கான ப்ளூயன்சி புரொடெக்சனை கொடுத்து இருக்கிறது. IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது. 1.5 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரையில் டியூரபிலிட்டி கொடுக்கும்.
மேலும், ஸ்பீக்கர் மற்றும் போர்ட் புரொடெக்சனையும் கொடுத்து உள்ளது. ஆகவே, பிரீமியம் மாடல்களுக்கு நிகரான வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கும். ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் மற்றும் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கொண்ட மாடலாக இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது.
8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. செகண்டரி கேமராவுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. ஏஐ எரைசர் 2.0 (AI Eraser 2.0) உள்ளிட்ட பீச்சர்களையும் இந்த ஓப்போ கே14 5ஜி கொடுத்து உள்ளது.
120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1125 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது. ஒயிட் மற்றும் வயலெட் கலர்களில் கிடைக்க உள்ளது. டிசைனை பொறுத்தவரையில் ஓப்போ கே14எக்ஸ் 5ஜி (OPPO K14x 5G) ஸ்மார்ட்போனை போலவே இருக்கிறது. ஆனால், அதில் 6500mAh பேட்டரி மட்டுமே கிடைத்தது. இதில் 7000mAh பேட்டரி கிடைக்கிறது.
ரூ.20,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இந்த ஓப்போ கே14 5ஜி ஸ்மார்ட்போன் பக்கா ஆப்ஷனாக இருக்கும். மார்ச் 9ஆம் தேதிக்கு பிறகு முழு விவரங்கள் தெரியவரும். இருப்பினும், டிசைனில் புதுவிதமாக இருக்காது. ஏற்கனவே, பார்த்த டிசைனிலேயே இருக்கும்.


Click it and Unblock the Notifications








