Home
Mobile

ரூ.3000 வரை எகிறியது.. மார்ச் 1 முதல் எந்தெந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் விலை உயர்கிறது?

2026 மார்ச் மாதத்தில் புதிய ஸ்மார்ட்போன் அல்லது புதிய டேப்லெட் வாங்க வேண்டும் என்கிற திட்டத்தில் உள்ளவர்களின் தலையில் புதிய இடி ஒரு இறங்கியுள்ளது. 2026 மார்ச் 1 ஆம் தேதி முதல் பல ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் பிராண்டுகள், தத்தம் தயாரிப்புகளின் விலையை உயர்த்தக்கூடும் என்று டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் தெரிவித்து உள்ளார்.

என்ன காரணம்? இது திடீர் என நடக்கவில்லை. கடந்த பல மாதங்களாக நிலவும் - காம்போனென்ட் விலைகள் (Component costs) அதிகரிப்பும், நினைவக விநியோக சிக்கல்களும் (Memory supply issues) தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சரி ஸ்மார்ட்போன்களின் விலைகள் எந்த அளவு உயர்ந்துள்ளன? எந்தெந்த நிறுவனங்கள் விரைவில் விலை உயர்வை அறிவிக்கலாம்?

மார்ச் 1 முதல் எந்தெந்த நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் விலை உயர்கிறது?

ஸ்மார்ட்போன்களின் விலைகள் எந்த அளவு உயர்ந்துள்ளன? சமீபத்திய மாதங்களாகவே, இந்திய சந்தையில் ஸ்மார்ட்போனின் விலைகள் "சத்தம் இல்ல்லாமல்" படிப்படியாக உயர்ந்து வருகின்றன. மார்ச் 1 நிலவரப்படி, நீங்கள் எந்த பிராண்டின் கீழ், எந்த ஸ்மார்ட்போனை வாங்குகிறீர்கள் என்பதை பொறுத்து, அதற்கு இப்போது ₹1,500 முதல் ₹2,500 வரை அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது. சில மாடல்களின் விலை, நேற்றைய விலையை விட ₹3,000 வரை கூடுதலாக உள்ளது. சரி எந்தெந்த நிறுவனங்கள் விலை உயர்வை அறிவிக்கலாம்?

சாம்சங்: 2026 மார்ச் 1 ஆம் தேதி முதல் சாம்சங் டேப்லெட்டுகளின் விலைகள் உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உயர்வு, உறுதி செய்யப்பட்டு விட்டதாக டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் கூறுகிறார். ஆனால் சாம்சங் நிறுவனம் (தற்போது வரை; இந்த கட்டுரையை எழுதும் வரை) அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதையும் வெளியிடவில்லை. மேலும் எந்தெந்த மாடல்களின் விலைகள் எவ்வளவு விலை உயரும் என்கிற விவரங்களையும் வெளியிடவில்லை.

ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி: சாம்சங் நிறுவனத்தை போலவே ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி ஆகிய 2 ஸ்மார்ட்போன் பிராண்டுகளும் கூட தங்கள் ஸ்மார்ட்போன்களின் விலைகளை விரைவில் உயர்த்தலாம் மற்றும் இந்த விலை உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் கூறுகிறார்

விவோ மற்றும் ஐக்யூ: சாம்சங், ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி நிறுவனங்களுக்கு முன்பாகவே இந்திய சந்தையில் விவோ மற்றும் ஐக்யூ ஆகிய 2 நிறுவனங்களுமே பல ஸ்மார்ட்போன்களின் விலைகளை உயர்த்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு விவோ டி4 சீரீஸ் மற்றும் ஐக்யூ இஸட்10 சீரிஸில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி - இந்தியாவில் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.22,999 க்கும், 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.24,999 க்கும், 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.26,999 க்கும் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ டி4 ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.24,999, ரூ.26,999 மற்றும் ரூ.28,999 ஆக விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அதாவது மூலம் அனைத்து ஆப்ஷன்களுமே ரூ. 2,000 விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல விவோ டி4ஆர் ஸ்மார்ட்போனின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.20,999 க்கும், 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.22,999 க்கும், 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.24,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலின் மீதும் ரூ.2,000 விலை உயர்வு வரலாம், இதன் மூலம் இவைகள் முறையே ரூ.22,999, ரூ 24,999 மற்றும் ரூ 26,999 ஆக உயரலாம்.

கடைசியாக விவோ டி4எக்ஸ் ஸ்மார்ட்போனின் மீதும் விலை உயர்வு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.15,499 க்கும், 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.16,499 க்கும் மற்றும் 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.18,499 க்கும் அறிமுகமானது. விவோ டி4 சீரீஸை போலவே அதன் ரீபிராண்ட் வெர்ஷன்கள் ஆன ஐக்யூ இஸட்10 சீரீஸ் மாடல்களும் விலை உயர்வை கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung OnePlus Realme Vivo iQOO Smartphones India Prices Could Increase in March 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X