மொத்த போன்களையும் ஓரங்கட்டும் புது OnePlus போன்.. 7500mAh பேட்டரி, 120W சார்ஜிங், SONY கேமரா.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் அடுத்த காம்பாக்ட் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (அதாவது மினி ஸ்மார்ட்போன்) ஆன ஒன்பிளஸ் 15டி (OnePlus 15T) மாடலை டீஸ் செய்ய தொடங்கி உள்ளது. இதற்கிடையில் ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனின் கேமராக்கள் குறித்த விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.
இதைப்பற்றி விரிவாக பேசும் முன்பாக சீனாவில் ஒன்பிளஸ் 15டி ஆக அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ஒன்பிளஸ் 15எஸ் ஆக ரீபிராண்ட் செய்யப்படும் என்பதை குறிப்பிட விரும்புகிறோம். அதாவது ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ஒன்பிளஸ் 13எஸ் ஆக அறிமுகமானதை போலவே!

சரி இப்போது லீக் ஆன விவரங்களுக்கு வருவோம். ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். அதில் ப்ரைமரி கேமராவனது எப்/1.8 அபெர்க்ஷர் மற்றும் OISஆதரவு உடனான சோனியின் LYTIA 700 (1/1.56″ சைஸ்) சென்சார் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. அதனுடன் எப்/2.8 இல் சாம்சங்கின் ISOCELL JN5 (1/2.76″ சைஸ்) டெலிஃபோட்டோ கேமராவும் இடம்பெறலாம்; இதிலும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் இருக்கலாம்.
உடனே ஒன்பிளஸ் 15டி கேமராக்களை "ஆஹா ஓஹோ" என்று கொண்டாடி விட வேண்டாம். இபோது முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) மாடலில் உள்ள கேமராக்களை போலவே உள்ளது. அதாவது - ஒன்பிளஸ் 13டி மாடலை போலவே இதிலும் அல்ட்ராவைடு கேமரா இல்லை.
மேலும் LYT-700, சைஸ் மற்றும் அபெர்க்ஷர் ஆனது "அடிப்படையில்" ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனில் நாம் பார்த்ததை விட மிக நெருக்கமாக உள்ளது. 1/1.56″ IMX 906 மற்றும் டெலிஃபோட்டோ அபெர்க்ஷர் ஆனது இந்த முறை உண்மையில் குறுகலாக உள்ளது (f/2.8 vs f/2.0). இதன் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது பெரிய அளவிலான ஹார்ட்வேர் மேம்பாட்டை விட சுத்திகரிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
கேமராக்கள் ஒருபக்கம் இருக்க கேமரா டிபார்ட்மென்ட்க்கு வெளியே, ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது "மிகவும் லட்சியமான" மாடல் ஆக தெரிகிறது. அதாவது இது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.31-இன்ச் OLED பேனலை பேக் செய்யும் என்று லீக்ஸ்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படும் என்றும், இதன் செயல்திறன் உயர் மட்டத்தில் வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இது 100W அல்லது 120W பாஸ்ட் சார்ஜிங்குடன் இணைக்கப்பட்ட ஒரு பெரிய 7,500mAh பேட்டரியை பேக் செய்யலாம். இதெல்லாம் உண்மையாகும் பட்சத்தில் - ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போன் ஆனது உண்மையிலேயே ஒரு சுவாரஸ்யமான ஸ்மார்ட்போன் ஆக இருக்கும்
ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1600 நிட்ஸ் வரை பீக் ப்ரைட்னஸ்
- 2,160Hz PWM டிம்மிங் ரேட்
- Aqua Touch 2.0 தொழில்நுட்பம்
- க்ளோவ் மோட் (இது பயனர்கள் ஈரமான அல்லது கையுறை அணிந்த கைகளால் ஸ்மார்ட்போனை இயக்க உதவும்)
- 12ஜிபி LPDDR5X ரேம்
- 512GB வரை UFS 4.0 ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 ஓஎஸ்
-டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)
- 5850mAh பேட்டரி
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5ஜி, 4ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 6.0, NavIC உடன் கூடிய GPS, NFC மற்றும் USB Type-C போர்ட்
- அளவீட்டில் 150.8×71.7×8.2மிமீ
- எடையில் 185 கிராம்


Click it and Unblock the Notifications