Nothing வரிசையில் Nothing Lite Phone 1 என்ற 2வது போன் வருதா? லைட் வெர்ஷன் விலை என்னவா இருக்கும்?

|

Nothing நிறுவனத்திற்குச் சொந்தமான நத்திங் போன் 1 (Nothing Phone 1) டிவைஸ் உலகளவில் பெரிய ஹைப்பை உருவாக்கியதை தொடர்ந்து, இப்போது மற்றொரு புதிய ஹைப்பை நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தெரிகிறது. ஆம், உலகளவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் மாடலான Nothing Phone 1 டிவைஸின் லைட் (Lite) வெர்ஷன் மாடலை நிறுவனம் உருவாக்கி வருவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. நத்திங் போன் 1 போன்ற லைட் வெர்ஷன் போன் வருதா? இது உண்மை தானா?

Nothing நிறுவனத்தின் 2வது போன் வெளிவருகிறதா?

Nothing நிறுவனத்தின் 2வது போன் வெளிவருகிறதா?

சமீபத்தில் வெளியான ஒரு புதிய தகவலின் படி, Nothing நிறுவனம் இப்போது, புதிதாக அதனுடைய 2வது ஸ்மார்ட்போன் மாடலை சைலெண்டாக உருவாக்கி வருவதாக சில லீக்-கள் வெளியாகியுள்ளது. நத்திங் போன் 1 டிவைஸ் உலகளவில் பெரியளவு வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, நிறுவனம் இப்போது பட்ஜெட் செக்மென்ட்டிலும் கால் பதிக்கத் துடிப்பது போல் தெரிகிறது. Apple, OnePlus, Oppo, Vivo போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே பட்ஜெட் செக்மென்ட் பிரிவில் அவர்களுக்கான லைட் வெர்ஷன் மாடல்களை கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நத்திங் லைட் போன் 1 (Nothing Lite Phone 1) என்ற பெயரில் புது டிவைஸா?

நத்திங் லைட் போன் 1 (Nothing Lite Phone 1) என்ற பெயரில் புது டிவைஸா?

அந்த வரிசையில், இப்போது Nothing நிறுவனமும் கூட்டு சேருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன்களுக்கு தான் அதிக மவுசு என்பதை உணர்ந்த நத்திங் நிறுவனம், இப்போது அதற்கான லைட் வெர்ஷன் மாடலை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த புதிய லைட் வெர்ஷன் மாடலை நிறுவனம் நத்திங் லைட் போன் 1 (Nothing Lite Phone 1) என்ற பெயரில் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய Nothing Lite Phone 1 டிவைஸில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

புதிய Nothing Lite Phone 1 டிவைஸில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்?

சரி, வதந்திக்குள்ளான புதிய Nothing Lite Phone 1 டிவைஸில் என்னவெல்லாம் நாம் எதிர்பார்க்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம். புதிய ஹைப்பை உருவாக்கியுள்ள Nothing Lite Phone 1 சாதனம், நத்திங் போன் 1 டிவைஸில் வழங்கப்பட அதே டிஸ்பிளே, ப்ராசஸர் மற்றும் கேமராக்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், லைட் வெர்ஷன் நத்திங் போனில் ​​இரண்டு முக்கிய வேறுபாடுகள் இருக்கும் என்று சமீபத்திய தகவல் குறிப்பிடுகிறது. ஆனால், இந்த மாற்றம் உங்களுக்கு நிச்சயமாகப் பிடிக்காது என்று நாங்கள் கருதுகிறோம்.

இந்த முக்கியமான அம்சங்கள் மட்டும் லைட் வெர்ஷனில் இருக்காதா?

இந்த முக்கியமான அம்சங்கள் மட்டும் லைட் வெர்ஷனில் இருக்காதா?

காரணம், வதந்திக்குள்ளான Nothing Lite Phone 1 டிவைஸ் ஒரு சாதாரண ட்ரான்ஸ்பரென்ட் கண்ணாடி உடன், பின்புற எல்இடி லைட் இல்லாமலும், க்ளைஃப் (Glyph) இன்டர்பேஸ் அம்சமும் இல்லாமல் வெளிவரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், நத்திங் போன் 1 டிவைஸில் இருக்கும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவும் இந்த லைட் வெர்ஷன் மாடலில் இடம் பெறாது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், லைட் வெர்ஷன் டிவைஸ் 42W சார்ஜரைக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நத்திங் லைட் போன் 1 டிவைஸ் விவரக்குறிப்புகள் மற்றும் விலை

நத்திங் லைட் போன் 1 டிவைஸ் விவரக்குறிப்புகள் மற்றும் விலை

இருப்பினும் நத்திங் லைட் போன் 1 சாதனம், 33W சார்ஜிங்கை மட்டுமே ஆதரிக்கும் என்று சமீபத்திய லீக் தகவல் தெரிவிக்கிறது. இந்த நத்திங் லைட் போன் 1 டிவைஸ் பற்றிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை பற்றிய தகவல்கள் எதுவும் மிகத் துல்லியமாக இல்லை. இருப்பினும், நமக்கு கிடைத்த சில யூகிக்கப்பட்ட தகவலை வைத்துப் பார்க்கையில், இந்த லைட் வெர்ஷன் ஸ்மார்ட்போன் மாடலை நிறுவனம் என்ன விலை வரம்பில் அறிமுகம் செய்யுமென்பதற்கு நம்மிடம் ஒரு கணிப்பு உள்ளது.

Nothing Lite Phone 1 எதிர்பார்க்கப்படும் விலை என்ன?

Nothing Lite Phone 1 எதிர்பார்க்கப்படும் விலை என்ன?

சமீபத்திய Nothing Phone 1 டிவைஸ் ரூ.32,999 என்ற விலையில் தொடங்குகிறது. Nothing நிறுவனத்தின் இரண்டாவது நத்திங் லைட் போன் டிவைஸ் பட்ஜெட்டுக்கு ஏற்ற விருப்பமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்பதனால், இது ரூ. 24,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த லைட் வெர்ஷன் மாடல்கள் என்ன ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் வெளிவரும் என்பது குறித்த ஆதாரங்கள் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை.

லைட் வெர்ஷனில் இப்படி ஒரு நல்ல விஷயமா?

லைட் வெர்ஷனில் இப்படி ஒரு நல்ல விஷயமா?

இருப்பினும், இந்த புதிய ஸ்மார்ட்போன் டிவைஸ் பட்ஜெட் விலையில் ஒரு 6 ஜிபி/128 ஜிபி கொண்ட ஸ்டோரேஜ் மாடலுடன் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த லைட் வெர்ஷன் நத்திங் போன் டிவைஸ் ரூ.24,999 என்ற விலையில் தொடங்கும் என்பதற்கான சில அறிகுறிகள் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுவாரஸ்யமாக, வரவிருக்கும் இந்த புதிய போன் சற்று பெரிய 5000mAh பேட்டரியுடன் வரும் என்று சில ஆதாரங்கள் கூறியுள்ளன. இது ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

நத்திங் லைட் போன் 1 இல் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

நத்திங் லைட் போன் 1 இல் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

மீதமுள்ள விவரக்குறிப்புகள் நத்திங் போன் (1) இல் இருப்பது போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது 6.55' இன்ச் கொண்ட முழு HD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G+ சிப்செட் உடன் வெளிவரக்கூடும். இதிலும் 50 மெகாபிக்சல் கொண்ட டூயல் கேமராக்கள் இடம்பெறும். போனின் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Nothing Lite Phone 1 எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்?

Nothing Lite Phone 1 எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்?

நிச்சயமாக, நத்திங் லைட் வெர்ஷன் போனும் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான 'நத்திங் ஓஎஸ்' இடைமுகத்தில் இயங்கும் என்பதில் சந்தேகமில்லை என்று சமீபத்திய லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. நத்திங் நிறுவனம் குறைந்த விலையில் அதன் லைட் வெர்ஷன் போன்களை விற்பனை செய்யுமென்றால், கட்டாயமாக அதன் விற்பனை இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தை ஒட்டி தீபாவளியை முன்னிட்டு அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Nothing நிறுவனம் லைட் வெர்ஷன் மாடல் பற்றி என்ன சொல்கிறது?

Nothing நிறுவனம் லைட் வெர்ஷன் மாடல் பற்றி என்ன சொல்கிறது?

இருப்பினும், Nothing Lite Phone 1 பற்றி நிறுவனத்திடம் கேட்டபோது, ​​அத்தகைய ஒரு சாதனம் அவர்களின் பட்டியலில் இல்லை என்று மழுப்பிவிட்டதாக டெக் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால், டெக் வட்டாரத்தில் வெளியான தகவல்களை வைத்து பார்க்கையில் நத்திங் சைலெண்டாக அதன் 2வது ஸ்மார்ட்போன் மாடலில் மும்முரமாக வேலைபார்த்து வருகிறது என்று சந்தேகிக்கப்படுகிறது. பட்ஜெட் பிரியர்கள் குறிவைத்து ஒன்பிளஸ் Nord மாடல்களை அறிமுகம் செய்ததை நாம் இந்த இடத்தில் மறக்கக்கூடாது. சரி, எது எப்படியாக இருந்தாலும் உண்மை என்ன என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Nothing Could Soon Launch A Lite Version Model Of Its New Phone Named Nothing Lite Phone 1

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X