Home
Mobile

யாரு சாமி அவன்.. மட்ட ரேட்ல 6300mAh பேட்டரி.. 90Hz டிஸ்பிளே.. AF கேமரா.. புது Realme போன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலையில் ரியல்மி சி81 (Realme C81) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இப்போது, ரேம், ஸ்டோரேஜ் மற்றும் கலர் விவரங்கள் கசிந்துள்ளன. 6300mAh பேட்டரி, 90Hz டிஸ்பிளே, ஆட்டோ போகஸ் கேமரா, டிராப் ரெசிஸ்டன்ஸ் போன்ற பீச்சர்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி நிறுவனத்தில் சி சீரிஸ் மாடல்கள் மலிவான விலையில் பிரீமியம் லுக் கொடுத்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் அடுத்த மாடலாக இந்த ரியல்மி சி81 வெளியாக இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் வெளியான ரியல்மி நோட் 80 (Realme Note 80) ஸ்மார்ட்போனின் இந்திய வெர்ஷனாக இந்த ரியல்மி சி81 அறிமுகம் செய்யப்பட உள்ளது.

யாரு சாமி அவன்.. மட்ட ரேட்ல 6300mAh பேட்டரி.. 90Hz டிஸ்பிளே.. மாடல்?

ஆகவே, முழு பீச்சர்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும், ரியல்மி இந்தியா நிறுவனமானது, இன்னும் உறுதி செய்யவில்லை. ஆனால், மார்கெட்டில் ரேம், ஸ்டோரேஜ் மற்றும் கலர் விவரங்கள் கசிந்துள்ளன. ஆகவே, ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. 2 வேரியண்ட்களுடன் இந்த ரியல்மி சி81 கிடைக்க உள்ளது.

ரியல்மி சி81 அம்சங்கள் (Realme C81 Specifications): 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் வெளியாக இருக்கின்றன. கிளாசியர் ப்ளூ ஏசியா (Glacier Blue Asia) மற்றும் ஸ்டார்ம் பிளாக் ஏசியா (Storm Black Asia) ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் கிளாசியர் ப்ளூ, ஸ்டார்ம் பிளாக் கலர்கள் வெளியாகிவிட்டன.

யாரு சாமி அவன்.. மட்ட ரேட்ல 6300mAh பேட்டரி.. 90Hz டிஸ்பிளே.. மாடல்?

இந்த விவரங்கள் மட்டுமே கசிந்துள்ளன. இருப்பினும், குளோபல்மார்கெட்டில் வெளியாகி இருக்கும் ரியல்மி நோட் 80 ஸ்மார்ட்போனின் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. ஏனென்றால், இந்த ஸ்மார்ட்போன் பீச்சர்களே இந்தியாவில் வெளியாக இருக்கும் ரியல்மி சி81 ஸ்மார்ட்போனில் இடம்பெற வாய்ப்புகள் இருக்கின்றன.

6.74 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எச்டிபிளஸ்+ (HD+) ரெசொலூஷன் கொண்ட எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 16.7 மில்லியன் கலர் டெப்த் மற்றும் 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. மேலும், 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கிளாஸ் பேனல் கிடைக்கிறது.

பாண்டா எம்என்228 (Panda MN228) கவர் கிளாஸ் கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) கொண்ட 8 எம்பி வைடு ஆங்கிள் மெயின் கேமரா கிடைக்கிறது. 5 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த ரியல்மி நோட் 80 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. போர்ட்ராய்டு (Portrait), நைட் (Night), ஸ்ட்ரீட் (Street), டூயல் வியூ வீடியோ (Dual Viwe Video) போன்ற பீச்சர்களை கொடுத்து உள்ளது.

1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. யுனிசோக் டி7250 (Unisoc T7250) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. 6300mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக இந்த ரியல்மி நோட் 80 ஸ்மார்ட்போன் இருக்கிறது. இந்திய மார்கெட்டில் ரூ.10,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. பட்ஜெட் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெறலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C81 With 4GB RAM 128GB Storage To Launch in India Soon Specifications Leaked
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X