WhastApp-ல் புதிய ஷார்ட்கட் வசதி.. இனி மெசேஜை ஓப்பன் பண்ணாமலேயே "அந்த" வேலையை செய்யலாம்!

|

பிரபல இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்ம் ஆன வாட்ஸ்அப்பில் (WhatsApp) ஒரு புதிய ஷார்ட்கட் (Shortcut) வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதென்ன ஷார்ட்கட்? அதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்களுக்கு என்ன பயன்? இதோ விவரங்கள்:

நேற்றுவரை 2 ஷார்ட்கட்ஸ்.. இனிமேல் மூன்று!

நேற்றுவரை 2 ஷார்ட்கட்ஸ்.. இனிமேல் மூன்று!

வழக்கமாக உங்களுக்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தால், அது தொடர்பான நோட்டிபிக்கேஷன் (Notification) கிடைக்கும் அல்லவா? மேலும் அந்த நோட்டிபிக்கேஷனிலேயே ரிப்ளை (Reply), மார்க்ட்டு ஆஸ் ரீட் (Marked as read) என்கிற இரண்டு ஷார்ட்கட் ஆப்ஷன்கள் (Shortcut Options) அணுக கிடைக்கும் அல்லவா?

அதாவது வாட்ஸ்அப்பை திறக்காமலேயே உங்களுக்கு வந்த மெசேஜிற்கு நோட்டிபிக்கேஷன் வழியாகவே ரிப்ளை (Reply) செய்யும் அம்சமும், அதை படிக்கும் (Marked as read) அம்சமும் அணுக கிடைக்கும் அல்லவா? தற்போது அதனுடன் மேலுமொரு ஷார்ட்கட் அம்சம் அறிமுகமாகி உள்ளது!

ஏலியன்களை நெருங்கி விட்டோம்? 95% பூமியை போலவே இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்துள்ள NASA!ஏலியன்களை நெருங்கி விட்டோம்? 95% பூமியை போலவே இருக்கும் கிரகத்தை கண்டுபிடித்துள்ள NASA!

அதென்ன ஷார்ட்கட்?

அதென்ன ஷார்ட்கட்?

ரிப்ளை மற்றும் மார்க்டு ஆஸ் ரீட் என்கிற 2 ஷார்ட்கட் உடன் பிளாக் (Block) என்கிற மூன்றாவது ஷார்ட்கட்டும் இணைந்துள்ளது.

அதாவது ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் வந்தால், அது தொடர்பான நோட்டிபிக்கேஷனில் ரிப்ளை (Reply), மார்க்ட்டு ஆஸ் ரீட் (Marked as read) என்கிற ஷார்ட்கட்ஸ் உடன் பிளாக் (Block) என்கிற ஷார்ட்கட்டும் இருக்கும்!

நம்மில் பலருக்கும் பிளாக் அம்சத்தை (Block Feature) பற்றிய பெரிய அளவிலான விளக்கம் தேவைப்படாது. அறியாதோர்களுக்கு பிளாக் என்பது குறிப்பிட்ட வாட்ஸ்அப் தொடர்பை தடுக்கும் ஒரு அம்சம் ஆகும்.

இதனால் என்ன பயன்?

இதனால் என்ன பயன்?

பிளாக் அம்சமானது ஷார்ட்கட் வடிவில் வருவதால், தேவை இல்லாத ஒரு வாட்ஸ்அப் நம்பரில் இருந்து உங்களுக்கு ஒரு மெசேஜை திறக்காமலேயே, அந்த நம்பரை நோட்டிபிக்கேஷன் வழியாகவே பிளாக் செய்யும் விருப்பம் உங்களுக்கு அணுக கிடைக்கும்.

அதாவது உங்களுக்கு தெரியாத அல்லது தேவை இல்லாத எண்ணில் இருந்து வந்த மெசேஜை திறந்து, குறிப்பிட்ட வாட்ஸ்அப் சாட்டிற்குள் (Chat) நுழைந்து, பின்னர் செட்ட்டிங்ஸ்க்கு (Settings) சென்று, பிளாக் அம்சத்தை கிளிக் செய்வதற்கு பதிலாக.. நேரடியாக நோட்டிபிக்கேஷன் வழியாகவே அந்த நம்பரை பிளாக் செய்யலாம்.

கடலில் மூழ்கும் 100 பில்லியன் டாலர்கள்.. ஜகா வாங்கிய ரஷ்யா.. கதறும் அமெரிக்கா.. ISS பற்றிய 3 சீக்ரெட்ஸ்!கடலில் மூழ்கும் 100 பில்லியன் டாலர்கள்.. ஜகா வாங்கிய ரஷ்யா.. கதறும் அமெரிக்கா.. ISS பற்றிய 3 சீக்ரெட்ஸ்!

இன்னொரு முக்கியமான விஷயம்!

இன்னொரு முக்கியமான விஷயம்!

இந்த "பிளாக் ஷார்ட்கட்" ஆனது ஸ்பேம் (Spam) போன்ற சந்தேகத்திற்குரிய எண்ணிலிருந்து.. ஒரு நம்பகத்தன்மையற்ற எண்ணில் இருந்து வரும் வாட்ஸ்அப் மெசேஜ்களில் மட்டுமே இடம்பெறும்.

அதாவது உங்கள் வாட்ஸ்அப் தொடர்பில் சேமிக்கப்படாத எண்ணில் (Unknown Numbers) இருந்து வரும் மெசேஜ்களுடைய நோட்டிபிக்கேஷனில் மட்டுமே, இந்த ஷார்ட்கட் இடம்பெறும்.

நீங்கள் ஏற்கனவே வாட்ஸ்அப் காண்டாக்ட் லிஸ்ட்டில் சேமித்து வைத்து இருக்கும் ஒரு எண்ணில் இருந்து மெசேஜ் வரும் போது, இந்த ஷார்ட்கட் தோன்றாது!

இந்த அம்சம் உங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லையா?

இந்த அம்சம் உங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லையா?

தற்போது வரையிலாக, இந்த அம்சம் சோதனை கட்டத்தில் மட்டுமே உள்ளது. அதாவது தற்போது வரையிலாக இந்த பீட்டா டெஸ்டர்களுக்கு (Beta Testers) மட்டுமே அணுக கிடைக்கிறது.

அவர்கள் இந்த அம்சத்தை சோதித்து பார்த்துவிட்டு, இதில் ஏதேனும் சிக்கல்கள் அல்லது பிரச்சனைகள் உள்ளதா என்று கண்டுபிடித்து, அதைப்பற்றி புகார் அளிப்பார்கள். பின்னர் அந்த குறைகள் சரிசெய்யப்பட்ட பின்னர், குறிப்பிட்ட அம்சம் அனைத்து வகையான பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்படும்!

Best Mobiles in India

English summary
New Shortcut Feature in WhatsApp Which Helps Users To Block Spam Unknown Numbers Without Opening It

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X