Home
Gadgets

பழைய TV-க்கு ஆப்பு.. ரூ.4,750 ஆஃபரில் சாம்சங் 4K டிவி.. 7 வருட OS அப்டேட்.. கியூ-சிம்பொனி ஆடியோ.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் டைசன் டிவி மாடல்கள் மார்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் சாம்சங் 43 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி 2025 எடிஷன் (Samsung 43 inch Smart Tizen TV 2025 Edition) மாடலானது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. கியூ சிம்பொனி ஆடியோ மற்றும் 7 வருட ஓஎஸ் அப்டேட் கிடைப்பதால், விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 23 சதவீத தள்ளுபடி விலைக்கு சாம்சங் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி 2025 எடிஷன் (Samsung 43 inch Ultra HD 4K LED Smart Tizen TV 2025 Edition) மாடல் கிடைக்கிறது. ஆகவே, ரூ.29,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,750 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது.

பழைய TV-க்கு ஆப்பு.. ரூ.4,750 ஆஃபரில் சாம்சங் 4K டிவி.. மாடல்?

இந்த தள்ளுபடியுடன் ரூ.25,240 விலைக்கு இந்த சாம்சங் 43 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி 2025 எடிஷன் மாடலை வாங்கி கொள்ளலாம். இந்த டிவியானது யுஏ43யுஇ81ஏஎப்யுஎல்எக்ஸ்எல் (UA43UE81FULXL) மாடலாகும். டைசன் ஓஎஸ் கொண்டதாகும். பெசல்-லெஸ் டிசைனில் ஸ்லிம் லுக் கொடுத்து உள்ளது. மேலும், 1 வருட வாரண்டியில் இந்த சாம்சங் டிவியை வாங்கி கொள்ளலாம்.

சாம்சங் 43 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி 2025 எடிஷன் அம்சங்கள் (Samsung 43 inch Smart Tizen TV 2025 Edition Specifications): 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரியை இந்த சாம்சங் 43 இன்ச் ஸ்மார்ட் டைசன் டிவி கொடுத்து உள்ளது. கிரிஸ்டல் ப்ராசஸர் 4கே (Crystal Processor 4K) கிடைக்கிறது. ஒன் யுஐ டைசன் (One UI Tizen) கிராபிக்ஸ் கார்டு மற்றும் சாம்சங் டைசன் ஓஎஸ் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆகவே, சாம்சங் கிநாக்ஸ் செக்யூரிட்டி (Samsung Knox Security) கிடைத்துள்ளது. 7 வருடங்களுக்கு இலவச ஓஎஸ் அப்டேட்களை இந்த சாம்சங் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி 2025 எடிஷன் டிவி கொடுத்துள்ளது. ஆட்டோ கேம் மோட் (Auto Game Mode), விஆர்ஆர் (VRR), எச்ஜிஐஜி (HGiG) போன்ற டிஸ்பிளே பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், டிவி கீ (TV Key) உள்ளது.

கனெக்ட்ஷேர் (ConnectShare), ஈபிஜி (EPG), ஐபி கன்ட்ரோல் (IP Control) உள்ளிட்ட பீச்சர்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. நெட்பிளிக்ஸ் (Netflix), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), ஆப்பிள் டிவி (Apple TV) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் இந்த சாம்சங் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டிவிக்கு கிடைக்கின்றன.

அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) ரெசொலூஷன் கொண்ட 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே கிடைத்துள்ளது. 178 டிகிரி வியூ ஆங்கிள், 50Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. 4K அப்ஸ்கேலிங், ப்யூர்கலர் (PurColor), எச்டிஆர் (HDR) மற்றும் ஸ்மார்ட் திங்க்ஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 20W ஆடியோ அவுட்புட்டை இந்த சாம்சங் டிவி கொடுத்து உள்ளது.

மேலும், ஆப்ஜெக்ட் டிராக்கிங் சவுண்ட் லைட் (Object Tracking Sound Lite), கியூ சிம்பொனி (Q Symphony), அடாப்டிவ் சவுண்ட் (Adaptive Sound) உள்ளிட்ட பீச்சர்களும் கிடைக்கிறது. வை-பை 5 மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளது. 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 1 யுஎஸ்பி போர்ட் (USB Port) மற்றும் ஏவி உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung 43 inch Ultra HD 4K LED Smart Tizen TV 2025 Edition 24 Percent Discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X