மொபைல் நம்பர் மாறக்கூடாது.. புதிய ரயில் டிக்கெட் புக்கிங் ரூல்ஸ்.. மார்ச் 1 முதல் அமலுக்கு வந்தது!
இந்திய ரயில்வே டிக்கெட் முன்பதிவு ஆப் (Indian Railways ticket booking app) ஆன யுடிஎஸ் (UTS) ஆனது, 2026 மார்ச் 1 ஆம் தேதி முதல் வேலை செய்வதை நிறுத்தும் என்றும், யுடிஎஸ் ஆப்பின் கீழ் கிடைத்த அனைத்து சேவைகளும் புதிய ரெயில்ஒன் ஆப்பிற்கு (New RailOne App) மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சிஆர்ஐஎஸ் (CRIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரயில்வே தகவல் அமைப்புகள் மையத்திடம் (Centre For Railway Information Systems) இருந்து வருகிறது. அறியாதோர்களுக்கு - யுடிஎஸ் ஆப் ஆனது முன்பதிவு செய்யப்படாத மற்றும் உள்ளூர் ரயில் டிக்கெட்டுகள் மற்றும் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய மட்டுமே பயன்படுத்த கூடிய ஒரு ஆப் ஆகும்.

தற்போது இந்த எல்லா நடவடிக்கைகளையும், வேலைகளையும், சேவைகளையும் புதிய ரெயில்ஒன் ஆப் வழியாக செய்யலாம். இதுகுறித்து சிஆர்ஐஎஸ்-ன் எக்ஸ் (X) தள பதிவின்படி, யுடிஸ் மொபைல் ஆப்பின் மதிப்புமிக்க வாடிக்கையாளராக இருப்பதற்கு நன்றி. உங்கள் யுடிஎஸ் ஆப்பின் சேவைகள் ஆனது இப்போது புதிய ரெயில்ஒன் ஆப்பிற்கு மாற்றப்படும். 01.03.2026 முதல் யுடிஎஸ் ஆப் நிறுத்தப்படும். சேவைகளை தொடர்ந்து பயன்படுத்த இன்றே ரெயில்ஒன் ஆப்பை பதிவிறக்கவும் என்று கூறியுள்ளது.
ஆர்-வேலட்டில் உள்ள உங்கள் பணம் என்னவாகும்? சிஆர்ஐஎஸ்-ன் கூற்றுப்படி, ஆர்-வேலட்டில் உள்ள பணம் ரெயில்ஒன் ஆப்பிற்கு மாற்றப்படும். ஆனால் இந்த பணத்தைப் பயன்படுத்துவதற்கு, நீங்கள் ரெயில்ஒன்ஆப்பில் யுடிஎஸ் ஆப்பில் பதிவுசெய்த பெயர் மொபைல் நம்பரை பயன்படுத்த வேண்டும்.
இதுகுறித்த எக்ஸ் தள பதிவில் உங்கள் ஆர்-வாலட் தொகை ஆனது ரெயில்ஒன் ஆப்பிற்கு மாற்றப்படும். RailOne.https://railone.indianrailways.gov.in இல் பதிவு செய்ய யுடிஎஸ் ஆப்பில் உள்ள அதே மொபைல் எண்ணை பயன்படுத்தவும். ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டால், ஆப்பில் உள்ள ஹெல்த் & சப்போர்ட் பிரிவை அணுகவும் என்று கூறியுள்ளது.
மொபைல் நம்பரை மாற்றிவிட்டு அதே ஆர்-வாலட் பேலன்ஸை பயன்படுத்தலாமா? இந்திய ரயில்வே வலைத்தளத்தின்படி - மொபைல் நம்பரை மாற்றிவிட்டு அதே ஆர்-வாலட் பேலன்ஸை பயன்படுத்த முடியாது. ஆர்-வாலட் பேலன்ஸை மாற்றவும் முடியாது. ஆனால் நீங்கள் ஆர்-வாலட்டை ஒப்படைக்கலாம் (surrender) செய்யலாம். அதாவது வேலட்டில் உள்ள பணத்தை திரும்ப பெறலாம் அல்லது டிக்கெட்டுகளை வாங்குவதன் மூலம் பேலன்ஸை தீர்த்துக்கொள்ளலாம்.
ஆர்-வாலட்டை சரண்டர் செய்வது எப்படி? இந்திய ரயில்வே வலைத்தளத்தின்படி, உங்கள் ஆர்-வாலட்டை பின்வரும் படிகள் மூலம் ஒப்படைக்கலாம்: சரண்டர் மை வாலட் என்கிற விருப்பத்தை பார்க்க "ப்ரொபைல்" விருப்பத்தை அணுகவும். பின்னர் "சரண்டர் வாலட்" என்பதை உறுதிப்படுத்தவும். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு குறியீடு உருவாக்கப்பட்டு அனுப்பப்படும்.
அதன் பிறகு, நீங்கள் எந்த யுடிஎஸ் கவுண்டரையும் அணுகி உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணையும், பணத்தை திரும்பப் பெற உருவாக்கப்பட்ட குறியீட்டையும் வழங்க வேண்டும். ஆர்-வாலட்டில் உள்ள பேலன்ஸ் ஆனது எழுத்தர் கட்டணமான ரூ.30-ஐ கழித்த பிறகு உங்களுக்குத் திருப்பி தரப்படும்.
ரெயில்ஒன் ஆப் ஜூலை 2025 இல் தொடங்கப்பட்டது: மத்திய ரயில்வே அமைச்சர் ஸ்ரீ அஸ்வினி வைஷ்ணவ், ஜூலை 1, 2025 அன்று புது தில்லியில் உள்ள இந்தியா ஹாபிடேட் மையத்தில் ரயில்வே தகவல் அமைப்புகள் மையத்தின் 40வது நிறுவன தினத்தன்று ரெயில்ஒன் என்கிற புதிய ஆப்பை அறிமுகப்படுத்தினார். ரெயில்ஒன்ஆனது ரயில்வேயுடனான பயணிகளின் இடைமுகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
இதுகுறித்த ஒரு செய்திக்குறிப்பின்படி, ரெயில்ஒன் ஆப் என்பது பயனர் நட்பு இடைமுகத்துடன் கூடிய ஒரு விரிவான, அனைத்தையும் உள்ளடக்கிய ஆப் ஆகும். இந்த ஆப்பை ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் (Android Play Store) மற்றும் ஐஓஎஸ் ஆப் ஸ்டோர் (iOS App Store) வழியாக பதிவிறக்கம் செய்யலாம்.
இதன் கீழ் முன்பதிவு செய்யப்படாத யுடிஎஸ் டிக்கெட்டுகள், நேரடி ரயில் கண்காணிப்பு, குறை தீர்ப்புகள், இ கேட்டரிங், போர்ட்டர் முன்பதிவு மற்றும் லாஸ்ட் மைல் டாக்ஸி ஆகிய சேவைகள் மற்றும் வசதிகளை அணுக முடியும். முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் ஆனது தொடர்ந்து ஐ ஆர்சிடிசி (IRCTC) ஆல் வழங்கப்படும். ஐஆர்சிடிசி உடன் கூட்டு சேர்ந்த பல வணிக ஆப்களை போலவே ரெயில்ஒன் ஆப்பும் ஐஆர்சிடிசி ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications