Home
News

புது ரூல்ஸ்.. நவ.1 முதல் அமல்.. இனி அவ்வளவு ஈஸியா வங்கிகளில் பணம் அனுப்ப முடியாது.. நிறைய கேப்பாங்க!

ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது வங்கிகள் வழியிலான பணப்பரிவர்த்தனை தொடர்பான புதிய விதிகளை (New bank money transfer rules) வெளியிட்டு, அவைகள் அனைத்தும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்து உள்ளது.

இவைகள் டிஎம்டி (DMT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் உள்நாட்டு பணப் பரிமாற்ற (Domestic Money Transfer) கட்டமைப்பிற்கான புதிய விதிகள் ஆகும். இதன்கீழ் வங்கி உள்கட்டமைப்பு (Banking infrastructure), கட்டண முறைகள் (Payment systems) மற்றும் கேஒய்சி (KYC) எனப்படும் உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுதல் (Know Your Customer) ஆகியவற்றில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது.

புது ரூல்ஸ்.. நவ.1 முதல்.. இனி ஈஸியா வங்கிகளில் பணம் அனுப்ப முடியாது!

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் "இனி அவ்வளவு சுலபமாக வங்கிகள் வழியாக பணம் அனுப்பி விட முடியாது" என்கிற சூழ்நிலை உருவாகும் என்பது போல் தெரிகிறது. அப்படி நவம்பர் 1 ஆம் தேதி முதல் என்னென்ன மாற உள்ளது? ஆர்பிஐ வெளியிட்டுள்ள புதிய விதிகள் என்னென்ன? இதோ விவரங்கள்:

ரொக்கப் பணம் செலுத்துவதற்கான மேம்படுத்தப்பட்ட பதிவு (Enhanced record-keeping for cash pay-outs): ஆர்பிஐ வெளியிட்டுள்ள புதிய கட்டமைப்பின் கீழ், பணம் அனுப்பும் வங்கிகள், பணம் செலுத்தும் சேவைகளில் பயனாளிகளின் பெயர் மற்றும் முகவரி பற்றிய பதிவுகளை பராமரிக்க வேண்டும். இந்த நடவடிக்கையானது ரொக்க அடிப்படையிலான பரிவர்த்தனைகளில் கண்டறியும் தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

ரொக்கப் பணம் செலுத்துதலுக்கான கடுமையான கேஒய்சி தேவைகள் (KYC requirements for cash pay-ins): ரொக்கப் பணம் செலுத்தும் சேவைகளுக்கு, வங்கிகள் ஆனது கேஒய்சி உடன் சேர்த்து சரிபார்க்கப்பட்ட செல்போன் எண் மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணம் (Officially Valid Document - OVD) ஆகியவற்றைப் பயன்படுத்தி பணம் அனுப்புபவர்களை பதிவு செய்ய வேண்டும். இந்த தேவை அடையாளச் சரிபார்ப்பைக் கடுமையாக்குவதையும், சாத்தியமான மோசடிகளை தணிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அங்கீகாரத்தின் கூடுதல் காரணி (Additional Factor of Authentication - AFA): பணம் அனுப்புபவரின் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் இப்போது கூடுதல் அங்கீகரிப்பு காரணி மூலம் சரிபார்ப்பு தேவைப்படும். இந்த கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை ஆனது பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாக்கவும், சம்பந்தப்பட்ட தரப்பினரின் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வருமான வரிச் சட்டத்துடன் இணங்குதல் (Compliance with Income Tax Act): பணம் அனுப்பும் வங்கிகள் ரொக்க வைப்புத்தொகை தொடர்பான வருமான வரிச் சட்டம், 1961 இன் விதிகளுக்கு இணங்க வேண்டும். இதில் ஐஎம்பிஎஸ் / என்இஎப்டி (IMPS / NEFT) மெசேஜ்கள் வழியாக பரிவர்த்தனை பணம் அனுப்புபவரின் விவரங்களைச் சேர்ப்பது மற்றும் ஐடென்ஃடிபையர் (Identifier) வழியாக கேஷ் பேஸ்டு ரெமிட்டன்ஸ் (Cash-based remittance) பரிவர்த்தனைகளைக் குறிப்பிடுவது ஆகியவைகள் அடங்கும்.

2011 இல் உள்நாட்டுப் பணப் பரிமாற்றக் கட்டமைப்பை (Domestic Money Transfer framework) அறிமுகப்படுத்தியதில் இருந்து, வங்கிகள் வழியாக பணம் செலுத்தும் முறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கேஒய்சி தேவைகளை பூர்த்தி செய்வதிலும், டிஜிட்டல் கட்டண விருப்பங்களின் (Digital payment options) எழுச்சியாலும், ரிசர்வ் வங்கியின் சமீபத்திய மாற்றங்கள் இந்த வளர்ந்து வரும் இயக்கவியலுக்கு ஏற்றவாறு நாம் எவ்வாறு மாற வேண்டும்; அப்படி மாற்றியமைக்க வேண்டியதன் அவசியம் என்னவென்பதை தெளிவாக பிரதிபலிக்கின்றன. இது முழுக்க முழுக்க பணம் அனுப்புவரின் பாதுகாப்பு தொடர்பான விதிகளாக இருந்தாலும் கூட, பணம் அனுப்பும் செயல்முறையை இன்னும் கடினமாக்கும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Rules From RBI Changes in Banking infrastructure Payment systems KYC Effect From 2024 November 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X