30 நாள் FREE.. ரூ.40 விலை ஏற்றிய கையோடு Airtel-ன் அடுத்த அட்டகாசம்.. 3 திட்டங்களில் இலவச கூப்பன் சேர்ப்பு!
ஏர்டெல் (Airtel) நிறுவனமானது அதன் பிரபலமான 84 நாள் வேலிடிட்டி திட்டமொன்றின்விலையை ரூ.40 அதிகரித்த கையோடு, இலவச டேட்டா பேக் கூப்பன் ஆபரை அறிவித்து, அதன் வாடிக்கையாளர்களை கூல் செய்துள்ளது. முதலில் ஆபர் குறித்து பார்ப்போம்; பின்னர் விலை உயர்த்தப்பட்ட ரீசார்ஜ் பற்றி பார்ப்போம்.
ஏர்டெல் நிறுவனத்திடம் பிரத்யேக டேட்டா பேக்குகள் இருந்தாலும் கூட, ஐபிஎல் 2026 கிரிக்கெட் சீசனை முன்னிட்டு, ஏர்டெல் நிறுவனம் குறிப்பிட்ட சில வட்டங்களில், தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு, குறிப்பிட்ட சில ரீசார்ஜ்ககளுடன் ஒரு இலவச "டேட்டா பேக் கூப்பனை" வழங்க தொடங்கியுள்ளதாக டெலிகாம்டால்க் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதென்ன திட்டங்கள்:

1. ஏர்டெல்லின் ரூ.349 திட்டம்: ஏர்டெல்லின் பேஸிக் அன்லிமிடெட் 5ஜி திட்டமான ரூ.349 உடன் ரூ.100 மதிப்புள்ள ஒரு இலவச டேட்டா பேக் கூப்பன் வழங்கப்படுகிறது. இது ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் கூடுதல் டேட்டாவையும் வழங்குகிறது.
2. ஏர்டெல்லின் ரூ.979 திட்டம்: 84 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வரும் இந்த ஏர்டெல் திட்டம், இப்போது 30 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.195 மதிப்புள்ள ஒரு இலவச டேட்டா பேக் கூப்பனுடன் வருகிறது.
3. ஏர்டெல் ரூ.3599 திட்டம்: ஏர்டெல் ரிவார்ட்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏர்டெல் தனது ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் 30 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.195 மதிப்புள்ள டேட்டா பேக் கூப்பனை வழங்குகிறது.
டேட்டா பேக் கூப்பன் என்றால் என்ன? மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ்களுக்கு ஏர்டெல் ஒரு இலவச டேட்டா பேக் கூப்பனை வழங்குகிறது. ரூ.100 டேட்டா பேக் கூப்பனுடன் 6ஜிபி டேட்டா மற்றும் 30 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா ஆகியவை வருகின்றன.
அடுத்ததாக உள்ள ரூ.195 டேட்டா பேக் கூப்பனுடன் 12ஜிபி டேட்டா, 30 நாட்களுக்கான ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் மற்றும் 90 நாட்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா ஆகியவை வருகின்றன. மேலே குறிப்பிடப்பட்ட திட்டங்களில் ரீசார்ஜ் செய்த பிறகு, ஏர்டெல் பயனர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பில் இந்த கூப்பனை பெற்றுக்கொள்ளலாம்.
விலை உயர்வு: ஏர்டெல் நிறுவனம் அதன் பிரபலமான ஒரு திட்டத்தின் விலையை அமைதியாக உயர்த்திய பின்னர், இந்த இலவச டேட்டா பேக் கூப்பன் நடவடிக்கை வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் நிறுவனம் ஆனது 84 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை அதிகரித்துள்ளது
முன்பு, ரூ.700 முதல் ரூ.800 வரையிலான பிரிவில், ரூ.799 மற்றும் ரூ.859 என இரண்டு திட்டங்கள் இருந்தன. இவைகள் வட்டம் அல்லது பயனரை பொறுத்து, முறையே 77 அல்லது 84 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன், ஒரு நாளைக்கு 1.5ஜிபி அல்லது 2ஜிபி டேட்டாவை வழங்கின. இருப்பினும், தற்போது ஏர்டெல் ரூ.799 திட்டத்தை நீக்கிவிட்டு, தனது ரூ.859 ட்ரூலி அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை ரூ.899 ஆக உயர்த்தியுள்ளது.
ரூ.40 விலை உயர்த்தப்பட்ட ஏர்டெல் ரூ.899 ட்ரூலி அன்லிமிடெட் திட்டத்தின் நன்மைகள்: ஏர்டெல்லின் ட்ரூலி அன்லிமிடெட் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம், வரம்பற்ற வாய்ஸ் கால்கள் (லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் உட்பட), ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா ஆகியவற்றை 84 நாட்கள் செல்லுபடியுடன் வழங்குகிறது. தினசரி டேட்டா அளவு தீர்ந்த பிறகு, வேகம் 64 கேபிபிஸ் வரை குறைக்கப்படும்.
மேலும் ஏர்டெல் ரிவார்ட்ஸின் ஒரு பகுதியாக, ரூ.899-ன் பயனர்கள் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (12 மாதங்கள்), இன்கம்மிங் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்-களுக்கான ஏர்டெல் ஸ்பேம் எச்சரிக்கைகள், மற்றும் இலவச ஹலோடியூன்ஸ் (ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஏதேனும் ஒரு பாடலை கூடுதல் கட்டணமின்றி அமைக்கலாம்) ஆகியவற்றை பெறலாம். முன்னதாக, ஏர்டெல்லின் ரூ.859 திட்டத்தில் ரிவார்ட்ஸ்மினி சந்தாவும் (மாதத்திற்கு ரூ.80 கேஷ்பேக் இலவசமாகப் பெறலாம்) சேர்க்கப்பட்டிருந்தது, அது இப்போது காணாமல் போனதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








